இரட்டை இலை சிக்கல்… பாயிண்டை பிடிச்ச ஈபிஎஸ்; 30ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்குகிறார். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பும் போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஈரோட்டில் முகாமிட்டுள்ள எடப்பாடி தரப்பு வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்யும் பணிகள் தீவிரம் காட்டி வருகிறது. தயாரான எடப்பாடி … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு வேட்பாளர் தேர்வு?

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னரசு, ராமலிங்கம், நந்தகுமார் ஆகிய 3 பேரில் ஒருவரை களமிறக்க பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளும் பழனிசாமி உடனான ஆலோசனையில் பங்கேற்றனர்.

இரவில் ‘நைட்ரேட் ரேடிக்கல்’ உற்பத்தி அதிகரிப்பு: உடலுக்கு ஆபத்து என எச்சரிக்கை

இரவில் ‘நைட்ரேட் ரேடிக்கல்’ உற்பத்தி அதிகரிப்பு: உடலுக்கு ஆபத்து என எச்சரிக்கை Source link

ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி.. காதலி உயிரிழப்பு.!

ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை முயற்சியில் காதலி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையை அடுத்த பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது இளம் காதல் ஜோடி திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில், இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிந்த வாலிபரை மீட்ட ரயில்வே போலீசார், அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.  … Read more

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி..!

மறைந்த திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 1970 மற்றும் 1980களில் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கு சண்டைப்பயிற்சி கற்றுக்கொடுத்தவர் ஜூடோ கே.கே.ரத்னம். இவர், 1500 படங்களுக்கு மேல் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். பொதுவாக, ரஜினி படம் என்றாலே ஜூடோ ரத்னம்தான் ஸ்டண்ட் மாஸ்டர் என சொல்லும் அளவுக்கு புகழ்பெற்றவர். அந்த வகையில் ரஜினியின் 46 படங்களுக்கு ஜூடோ ரத்னம்தான் சண்டை … Read more

எனது கையொப்பத்துடன் அனுப்பக்கூடிய வேட்பாளரின் பெயரை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது: உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் முறையீடு

புதுடெல்லி: கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக்கூடிய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அப்போது இபிஎஸ் தரப்பில், ஈரோடு கிழக்கு தொகுதி … Read more

ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை மாநகராட்சியில் முந்தைய ஆட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநராட்சியில், 69 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இப்பணிக்கு 654 பேர் விண்ணப்பித்த நிலையில், 440 பேர் நேர்முகத்தேர்வுக்கும், சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டு, 54 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களை ரத்து செய்யக் கோரியும், தனக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும் கருணை அடிப்படையில் 2016ஆம் ஆண்டு … Read more

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4,036 பேர் ஓய்வு பெற உள்ள நிலையில் பணி வழங்கப்படுமா?

கடலூர்: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4,036 பேர் ஓய்வு பெற உள்ள நிலையில் மக்கள் கோரிக்கை. காலியாகும் பணியிடங்கள் வடமாநிலத்தினருக்கு சென்றுவிடுமோ என கடலூர் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். என்.எல்.சிக்கு நிலம் அளித்திருப்பவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் மருத்துவத்துறை செயல்பாடுகள் பாதிப்பு | தமிழக அரசுக்கு எடுத்துரைக்கும் டாக்டர் இராமதாஸ்.!

இயக்குனர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் மருத்துவத்துறை செயல்பாடுகள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு,  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், “தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் மொத்தமுள்ள 6 இயக்குனர் பணியிடங்களில் மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவ சேவைகள் இயக்குனர், மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர், இ.எஸ்.ஐ இயக்குனர் ஆகிய 4 இயக்குனர் பணிகள் காலியாக உள்ளன.  பொறுப்பு அதிகாரிகளே அந்த பணிகளை கவனித்துக் கொள்கின்றனர்! மருத்துவக் கல்வி … Read more