இரட்டை இலை சின்னம் விவகாரம்.. இபிஎஸ் மனு மீது 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

இரட்டை இலை சின்னம் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது 3 நாட்களில் பதிலளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் என தான் கையெழுத்திட்டு அனுப்பிய ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரின் பெயரை, இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கடந்த வாரம் முறையிட்டார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வேட்பாளரின் பெயர் அடங்கிய கடிதத்தை, தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும் … Read more

ஈரோடு , திருவாரூரில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு: பிப்.3-க்கு ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், ஈரோடு மற்றும் திருவாரூரில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கின் விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் … Read more

அரசு துறைகளின் அதிரடி நடவடிக்கையால் 80 ஆண்டு தீண்டாமை முடிவுக்கு வந்தது: அம்மன் கோயிலில் பொங்கலிட்டு பட்டியலின மக்கள் வழிபாடு

தண்டராம்பட்டு: அரசு துறைகளின் அதிரடி நடவடிக்கையால் தண்டராம்பட்டு அருகே தென்முடியனூர் ஊராட்சியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வழிபட அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் 80 ஆண்டுகளுக்கு பிறகு கலெக்டர் தலைமையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென் முடியனூர் ஊராட்சியில் 13 சமூகங்களை சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தை மாதத்தில் 13 நாட்கள் திருவிழா நடைபெறும். … Read more

டி.ஆர் பாலு வீடியோவை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: அண்ணாமலை

டி.ஆர் பாலு வீடியோவை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: அண்ணாமலை Source link

வீட்டில் பூஜை செய்வதாக கூறி 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மந்திரவாதி கைது.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே மேல கலங்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன். மாந்திரீக பூஜைகள் செய்து வரும் இவரிடம் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து அழைத்து சென்றுள்ளார்.  அங்கு மணிகண்டன் தொழிலாளியிடம் உங்களது வீட்டில் சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்காக, அவர் அடிக்கடி தொழிலாளியின் வீட்டிற்கு சென்று வந்தபோது, அங்கு மணிகண்டன் தொழிலாளியின் பதின்மூன்று வயது மகளுடன் நெருங்கி பழகியுள்ளார்.  இந்நிலையில், … Read more

சென்னையில் ஜன.30 முதல் பிப்.5 வரை ‘காந்தியும் உலக அமைதியும்’ சிறப்பு புகைப்படக் கண்காட்சி

சென்னை: ‘காந்தியடிகளின் தியாக வரலாற்றினை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் இன்று (ஜன.30) முதல் பிப்ரவரி 5-ம் தேதி சிறப்பு புகைப்படக் கண்காட்சி. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்’ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உத்தமர் காந்தியடிகளின் 76-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் … Read more

பணி நியமனத்தில் முறைகேடு சேலம் பெரியார் பல்கலையில் அரசு குழு விசாரணை துவக்கம்: 2 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க ஆணை

ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனம், முறைகேடாக பணியில் சேர்த்தது, முறைகேடாக பதவிகள் வழங்கியது குறித்து அரசு நியமித்த குழுவின் விசாரணை துவங்கி உள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குநர் நியமனத்தில், பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாதது, பல்கலைக்கழக நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகள் இடஒதுக்கீடு ஆணைப்படி நியமிக்காதது, தமிழ் துறை தலைவர் பெரியசாமி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள், பெரியசாமி கொடுத்துள்ள போலிச்சான்று, தகுதியின்மை ஆகியவை குறித்து அரசுக்கு புகார்கள் … Read more

பிபிசி – மோடி ஆவணப்படம் | மதுரையில் திரையிட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

மதுரை: பிபிசி – குஜராத் ஆவணப்படத்தை மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இன்று (ஜன.30) திரையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர். கடந்த 2002-ல் குஜராத் மாநில முதல்வராக பிரதமர் நரேந்திரமோடி இருந்தபோது கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் வன்முறை கலவரம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக லண்டன் பிபிசி நிறுவனம், ‘இந்தியா- மோடிக்கான கேள்விகள்’ என்ற ஆவணப்படம் தயாரித்து சிலநாட்களுக்கு முன் வெளியிட்டது. அந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப மத்திய பாஜக … Read more

மகளிடம் காதலிக்க வற்புறுத்திய வாலிபர் தட்டிக்கேட்ட சிறை காவலர் மீது கொலை வெறி தாக்குதல்: கும்பலை கைது செய்யக்கோரி 3 மணி நேரம் மறியல்; குழந்தையுடன் 3 பெண்கள் தற்கொலை முயற்சி

ஒடுகத்தூர்:  ஒடுகத்தூர் அருகே பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபரை தட்டிக் கேட்ட சிறைக் காவலர் குடும்பத்தின் மீது வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்யும்படி ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் குழந்தையுடன் 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் திருமால். இவர் ஆம்பூர்  சிறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரமா என்ற மனைவியும், … Read more