சென்னையில் திடீரென பரவலாக மழை!!

பனி கடுமையாக இருந்த நிலையில் சென்னையில் திடீரென பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. முன்னதாக சென்னை வானிலை மையம், தமிழகத்தில் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது. பிப்ரவரி ஒன்றாம் தேதி கனமழை பெய்யும் எனவும் தெரிவித்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணித்திருந்தது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்துள்ளது. … Read more

லவ் ஜிகாத்துக்கு எதிராக மும்பையில் இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 4 கி.மீ. பேரணி!

இந்து பெண்களை காதலித்து திருமணம் செய்து பின்னர் மதமாற்றம் செய்யும் லவ்ஜிகாத்தை தடுக்கக்கோரி மும்பையில் இந்து அமைப்புகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் சார்பில்  சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு பேரணி நடைபெற்றது. பேரணியில் மதமாற்ற தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமெனவும், மதத்தின் பெயரால்  நடைபெறும் நில அபகரிப்பை தடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. Source link

தமிழகத்தில் முதல்கட்டமாக ஆளின்றி மின் பயன்பாட்டை கணக்கிட ஒரு கோடி வீடுகளில் `ஸ்மார்ட் மீட்டர்' – மின் வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: ஆளின்றி தானாக மின்பயன்பாட்டைக்கணக்கெடுக்கும் ஸ்மார்ட்மீட்டர், தமிழகத்தில் முதல்கட்டமாக ஒரு கோடி வீடுகளில் பொருத்தப்பட உள்ளன. தமிழக மின்வாரியம் வீடுகளில்2 மாதங்களுக்கு ஒருமுறை மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்கிறது. இப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் சிலர், குறித்த காலத்துக்குள் கணக்கெடுப்பது இல்லை என்றும், இதனால், அதிக கட்டணம் வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மத்திய அரசு உத்தரவின்படி, கர்நாடகா, டெல்லி உள்ளிட்டமாநிலங்களில் ஆளின்றி மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்கும்தேதி, மென்பொருள் வடிவில்ஸ்மார்ட் மீட்டரில் பதிவேற்றம்செய்யப்பட்டு, … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக அதிருப்தி வாக்குகள்- ஜி.கே.வாசன் போட்ட அரசியல் கணக்கு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணியினரும் போட்டியிட தயாராகி வருகின்றனர். ஆனால் இதுவரை வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஏமாற்றிய திமுக அரசு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், தமிழ்நாட்டு மக்களின் … Read more

50 ஆண்டுகாலம் வாழும் மிக அரிதான மலை இருவாச்சி பறவை ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தென்பட்டது!

ஈரோடு: 50 ஆண்டுகாலம் வாழும் மிக அரிதான மலை இருவாச்சி பறவை ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தென்பட்டது. ஐரோப்பா கண்டத்தில் இருந்து இந்தியாவுக்கு வலசை வந்த பஞ்சுருட்டான் பறவை கணக்கெடுப்பில் தென்பட்டது. அந்தியூர் வனச்சரகத்தில் உள்ள நீர்நிலைகளில் நேற்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. 50 நீர்நிலை பறவை இனங்களும் 36 பொதுப் பறவை இனங்கள் என மொத்தம் 86 பறவை இனங்கள் கண்டறியப்பட்டன.

`சுகங்களை அனுபவித்த சிலர், சுயநலத்துக்காக அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள்”- கேபி.முனுசாமி

“அதிமுகவில் பல்வேறு சுகங்களை பெற்றவர்கள் தற்போது சுயநலத்திற்காக இயக்கத்தை அழிக்க நினைக்கின்றனர்” என அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி குற்றம் சாட்டினார். ஈரோடு காரைவாய்க்காலில் அதிமுக பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி.அன்பழகன் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன், “எம்.ஜி.ஆர் தனிகட்சி ஆரம்பித்தபோது தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் திண்டுக்கல் தேர்தலில் வெற்றி பெற்றார். பல்லேறு வழியில் நம் … Read more

பெரியார் சிலை விவகாரம் – அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை!!

காரைக்குடியில் அனுமதியின்றி வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை அகற்றிய விவகாரத்தில் வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூரை சேர்ந்த இளங்கோவன் என்பவர் தனது வீட்டில் தந்தை பெரியாரின் மார்பளவு சிலையை அமைத்திருந்தார். அதனை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைக்க இருந்தார். இந்நிலையில் பெரியார் சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக நிர்வாகிகள் சிலர் பள்ளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் பாதுகாப்புடன், பெரியார் சிலை … Read more

கோவையிலிருந்து பெங்களூரு சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து.. 11 பேர் காயம்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். கோவையிலிருந்து பெங்களூருவுக்கு நேற்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து, புதுச்சாம்பள்ளி என்ற இடத்தில் வந்தபோது பேருந்தின் பின்புறத்தில் புகை கிளம்பியுள்ளது. இதனையறிந்த ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தினார். இதையடுத்த சில விநாடிகளில் பேருந்தில் தீ பிடிக்கவே, பேருந்தில் இருந்தோர் முண்டியடித்து கொண்டும், ஜன்னல் வழியாகவும் வெளியேறினர். தகவலறிந்து வந்த மேட்டூர் தீயணைப்பு படையினர் … Read more

தமிழக மின்வாரியம் ஒரே நாளில் மிக அதிக அளவாக 4,700 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்து சாதனை

சென்னை: தமிழக மின்வாரியம் ஒரே நாளில் மிக அதிக அளவாக 4,700 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்து சாதனைப் படைத்துள்ளது தமிழகத்தில் 5,800 மெகாவாட் திறன் கொண்ட தனியார் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் தினசரி 2,500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய மின்வாரியம் தனது சொந்த மின்னுற்பத்தியை தவிர, மத்திய அரசு மற்றும் தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் … Read more

கேரளாவுக்கு சென்ற லாரி மீது பஸ் மோதல் சென்னை பெண் உள்பட 2 பேர் பரிதாப பலி: 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் நேற்று அதிகாலை சென்றபோது, பின்னால் சென்னையில் இருந்து மார்த்தாண்டம் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் அதிவேகமாக லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் இருந்த சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஆண்டனிதாசன் (58), கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்த கமலாபாய் (64) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பஸ் டிரைவர் சரவணன் உட்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு … Read more