மாநிலத்தின் மொழியை கற்றுக் கொள்ளுங்கள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்
சென்னை: எந்த மாநிலத்துக்கு சென்று பணியாற்றினாலும், அம்மாநில மொழியை கற்று கொண்டால் மக்களுடன் நன்கு பழக உதவியாக இருக்கும் என்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார். அப்போது, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து ஆளுநர் கூறியதாவது: மத்திய அரசின் நடவடிக்கைகளால், வடகிழக்கு மாநிலங்களில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. என்னுடைய … Read more