ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட பெண் குழந்தை 4 மாதங்களுக்குப் பிறகு மீட்பு..! தாய் உள்ளிட்ட 5 பேர் கைது

திருச்சி அருகே தாயால் விற்கப்பட்ட குழந்தையை கர்நாடகாவில் இருந்து மீட்ட லால்குடி தனிப்படை போலீசார், குழந்தை கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதாக டெல்லியைச் சேர்ந்த நபரை கைது செய்தனர். லால்குடி அருகே பெண் குழந்தை விற்பனை விவகாரத்தில், பெற்ற குழந்தையை விற்றுவிட்டு கடத்தியதாக நாடகமாடிய தாய் ஜானகி அவரது வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். குழந்தையின் தாய் ஜானகி, குழந்தையை வழக்கறிஞரிடம் விற்ற நிலையில், 3 லட்சத்துக்கு விற்ற பணத்தில் 80 ஆயிரம் ரூபாய் … Read more

காவல் துறை உயரதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக காவல் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறைச் செயலர் க.பணீந்திரரெட்டி, டிஜிபி செ.சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதேபோல, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் ஆகியோர் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்பட்டு … Read more

கடலூர் பாஜக மாநில செயற்குழு: ஆபரேஷன் தாமரை… அதிரவைக்கும் அரசியல்!

கடலூரில் புதிய அத்தியாயம் எழுத தயாராகி விட்டது பாஜக. இங்கு முதல்முறை மாநில அளவிலான செயற்குழு கூட்டம் நடத்தப்படுகிறது. இதையொட்டி பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கூட்டம் தமிழ்நாடு பாஜக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனத் தொண்டர்கள் பெருமிதம் தெரிவித்தனர். இது ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் வழக்கமான செயற்குழு என்று கருதிவிட முடியாது. ஏனெனில் தமிழ்நாடு அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இடைத்தேர்தல் வியூகம் திமுக – பாஜக இடையிலான … Read more

`மக்கள் ஏற்றுக் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்ததே இல்லை’ – ராஜேந்திர பாலாஜி பேச்சு

“எந்த நேரத்திலும் இரு தேர்தலும் ஒரே நேரத்தில் வரலாம்” என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியபோது, “ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களையும் நிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்கள் திமுக ஆட்சியாளர்கள். மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை தருவதாக சொன்ன திமுக இதுவரை அதை வழங்கவில்லை. திமுக கொடுத்த … Read more

கோயம்பேடு மார்க்கெட்: (20.01.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 20/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். மகாராஷ்டிரா வெங்காயம் 22/20/18 ஆந்திரா வெங்காயம் 16/14 நவீன் தக்காளி 45/ நாட்டு தக்காளி 40/35 உருளை 25/20/17 சின்ன வெங்காயம் 90/70/50 ஊட்டி கேரட் 50/45/40 பெங்களூர் கேரட் 20 பீன்ஸ் 25/24 பீட்ரூட். ஊட்டி 35/30 கர்நாடக பீட்ரூட் 22/20 சவ் சவ் 14/12 முள்ளங்கி 25/20 முட்டை கோஸ் 9/7 வெண்டைக்காய் 80/55 … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு!!

காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா காலமானதால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வட கிழக்கு மாநிலங்களான நாகாலாந்துஸ மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் ஜூரம் பற்றிக் கொண்டது. கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் களம் கண்ட நிலையில், எதிர்த்து போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கணிசமான வாக்குகளை பெற்றது. அதனால் அறிவிப்பு வந்த … Read more

காதலியை சந்திக்க பர்தாவில் சென்ற பையன் போலீசிடம் சிக்கினார்..!

காதலியை நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுவதற்காக, பெண் போல பர்தாவுடன் கல்லூரிக்குள் நுழைந்த இளைஞரை கல்லூரி காவலாளிகள் மடக்கிப்பிடித்தனர்… சினிமா ஐடியாவால் சிக்கிய 2k கிட்ஸ்… கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஸ்ரீ மூகாம்பிகா என்ற தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனால் ஆஸ்பத்திரியின் நுழைவாயில் மற்றும் கல்லூரி வளாகத்தில் காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சம்பவத்தன்று காவலாளிகள் … Read more

தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் – போலி ஆவணங்கள் மூலம் 400 வாகனங்கள் பதிவு

சென்னை: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பிஎஸ் 4 வகை வாகனங்களை பதிவு செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து பிஎஸ் 4 வகை வாகனங்களை பெரும்பாலானோர் வாங்காததால் அவை வாகன விற்பனையாளர்களிடம் அதிகளவில் இருப்பில் இருந்தன. அதே நேரம், கூட்டுத் தொகை 8 என்றிருக்கும் வாகன பதிவெண்களை மக்கள் விரும்புவதில்லை. அதனால் அந்த எண்களை கேட்போருக்கு மட்டுமே வழங்குமாறு வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. … Read more