ஓசூர் அருகே நாயக்கன்பள்ளி கிராமத்தில் சுற்றி திரிந்த யானைகள் வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே நாயக்கன்பள்ளி கிராமத்தில் சுற்றி திரிந்த யானைகள் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் நீண்டநேரம் போராடி சாணமாவு வனப்பகுதிக்கு விரட்டினர்.

அனல் பறந்த ரேக்ளா ரேஸ் களம்: புழுதி பறக்க தாவி ஓடி பரிசை தட்டித் தூக்கிய குதிரைகள்!

மோகனூரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மாபெரும் குதிரை எல்கை பந்தயம் போட்டி நடைபெற்றது. இதில், 60-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன. நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பொங்கல் விழாவை ஒட்டி குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை என 3 பிரிவுகளில் குதிரை எல்கை பந்தயம் நடைபெற்றது. மோகனூர் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த பந்தயத்தில் பெரிய குதிரைக்கு 12 கிலோ மீட்டர் தூரமும், சிறிய, புதிய குதிரைகளுக்கு … Read more

10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! தொழிலாளி கைது.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ஜெகதீஷ் (31). இதே பகுதியை சேர்ந்த பாட்டி வீட்டிற்கு 10 ஒயர் சிறுமி தனது தாயாருடன் வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று சிறுமியின் தாய் மற்றும் அவரது பாட்டி அருகிலுள்ள கடைக்கு சென்று உள்ளனர். அப்பொழுது சிறுமி மட்டும் பாட்டி வீட்டின் வெளியே தனியாக நின்று கொண்டிருந்தபோது, அங்கு … Read more

காளை முட்டியதில் கண் பார்வை இழந்த வாலிபர் உயிரிழப்பு: இதுதான் நடந்தது !

காளை முட்டியதில் கண் பார்வை இழந்த வாலிபர் உயிரிழப்பு: இதுதான் நடந்தது ! Source link

3 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்.. இன்று மதியம் தேதி அறிவிப்பு..!

நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்க உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் என அழைக்கப்படும் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்கள் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தலை சந்திக்க இருக்கின்றன. இந்த மூன்று மாநிலங்களிலும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த மூன்று மாநிலங்களின் சட்டசபை பதவி காலம் வருகிற மார்ச் மாதம் முடிவடைய இருப்பதால் … Read more

ராமஜெயம் கொலை வழக்கு: 4 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை

சென்னை: கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 4 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என் ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து தற்போது, எஸ்பி.செல்வராஜ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் இந்த கொலை வழக்கு தொடர்பாக, … Read more

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் செயல்படாததால் பயணிகள் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் செயல்படாததால் பயணிகள் அவதிகுள்ளானர். இயந்திரம் பழுதானதால் ரயில் டிக்கெட் எடுக்க கவுன்ட்டரில் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்கின்றனர்.

"புனிதமான ரத்தத்தில் படம் வரைந்து காதலை வெளிப்படுத்துவது அவசியமற்றது"– மா.சுப்பிரமணியன்

“ரத்தம் புனிதமான ஒன்று. அப்படிப்பட்ட ரத்தத்தில் படம் வரைந்து காதலை வெளிப்படுத்துவதும், நட்பை வெளிப்படுத்துவதும் அவசியமற்ற ஒன்று. அப்படி செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது” என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார். தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் நடைபெற்ற அதிதீவிர சிகிச்சை மற்றும் அன்னப்பிளவு உதடு பிளவு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தஞ்சை மாவட்டத்தில் தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கான மையம் … Read more

நல்லாட்சி என்பது அரசுக்கும் மக்களுக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும் : அமித்ஷா

நல்லாட்சி என்பது அரசுக்கும் மக்களுக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும் : அமித்ஷா Source link