அமைச்சராகும் உதயநிதி? கோடிட்டு காட்டிய திமுக அமைச்சர்!

ரிப்போர்ட் கார்டு: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் தற்போது மொத்தம் 33 அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் தனித்தனியே ரகசியமாக கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்துள்ளார். இந்த குழு அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வருக்கு மாதந்தோறும் ரிப்போர்ட் கார்டு தந்து வருகிறது. ஊழல் புகாருக்கு ஆளாகும் அமைச்சர்கள், நிர்வாக திறன் இல்லாமல் செயல்பட்டு வருபவர்கள், கட்சியின் உட்கட்சி பூசலுக்கு காரணமாக இருப்பவர்கள் என்று லிஸ்ட் போட்டு அமைச்சர்கள் குறித்த மாதாந்திர அறி்க்கை முதல்வரின் … Read more

தொட்டதற்கெல்லாம் லஞ்சம்.. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குவிந்த பொதுமக்கள்

News in Tamil Nadu: செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியத்தின் கீழ் நெல்வாய் ஊராட்சி (Nelvoy Gram Panchayat) செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சிக்கு உட்பட்டு நெல்வாய், பேக்கரணை மற்றும் சாத்தமங்கலம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன.  இந்த ஊராட்சிக்கு கிராம நிர்வாக அலுவலராக சசிகுமார் பணிபுரிந்து வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரி படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ் வருமான சான்றிதழ் மற்றும் … Read more

குமரி மாவட்டத்தில் இறச்சகுளம், வீரநாராயண மங்கலம் உள்ளிட்ட இடங்களில் கனமழை

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம், வீரநாராயண மங்கலம், ஈசாந்திமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக குளிர் நிலவி வந்த நிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

“அரசு மருத்துவமனையால் மறுபடி பிறந்திருக்கேன்”-இதயமாற்று அறுவைசிகிச்சை செய்தவர் நெகிழ்ச்சி

சென்னை அரசு ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனையில் 50 வயதான பொறியாளருக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டநிலையில், இதுகுறித்து சிகிச்சைப் பெற்றவர் கூறுகையில், “50 வயதில் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் குழந்தையாக இன்று மீண்டும் பிறந்திருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது பொறியாளரொருவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆண்டு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, Stent கருவி பொருத்தப்பட்டது. இருப்பினும் … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு காரணம் என்ன? – அமைச்சர் எஸ். ரகுபதி.!

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- “இணைய வழி சூதாட்டம், ஆன்லைன் ரம்மி, போகோ இவற்றை தடை செய்தல் மற்றும் ஒழுங்குமுறைபடுத்துதலுக்க்கான அவசரகால சட்டத்தின் கால வரையறை நேற்றோடு முடிந்து விட்டது.  இந்த அவசர சட்டத்திற்கு தமிழகத்தின் கவர்னர் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சட்டம் திருத்தப்பட்டு சட்டசபையில் வைக்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  அதன் பின்னர் கவர்னர் இந்த சட்டத்தில் சில சந்தேகங்களை கேட்டு … Read more

போலி நில ஆவணங்களுடன் வாங்கிய இழப்பீட்டை திரும்பப் பெறாவிட்டால்… – தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலில் போலி நில ஆவணங்களை காண்பித்தவர்களுக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்பபெறாவிட்டால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது, ஒரு சிலர் போலி ஆவணங்களை காண்பித்து அரசிடம் 20 கோடி ரூபாய் வரை இழப்பீடு பெற்றுள்ளதாக கூறி ராஜேந்திரன் என்பவர் … Read more

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் நிதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக வசூலித்த 30 லட்ச ரூபாயை கோவில் திருப்பணி கணக்கில் செலுத்த அனுமதிக்க கோரி யூடியூபர் கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மிலாப் செயலி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரினார். கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் சீரமைப்பு பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், திருப்பணிக்கு தேவைப்படும் பணத்தை அளிக்க … Read more

மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலிக்கக்கூடாது?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலிக்கக்கூடாது? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் மற்றும் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர். ஒட்டுமொத்தமாக 2 மனுக்களிலும், தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபான விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 … Read more

”பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் விற்கப்படலைனு சொல்ல முடியுமா?” – நீதிபதிகள் வேதனை

பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பியதோடு, பிற மாநிலங்களை விட குறைவான நேரம் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகமே முன்னிலையில் உள்ளது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு மதுபான விற்பனை செய்வதை தடுக்க கோரிய 2 வழக்குகள் குறித்து பேசிய நீதிபதிகள், பள்ளி மாணவர்களின் கைகளுக்கு மதுசெல்லாமல் இருக்க, மது விற்பனை நேரத்தை பிற்பகல் … Read more