திமுகவில் மீண்டும் அழகிரி: டிவிட்டரில் போட்ட பதிவால் திமுகவினரிடையே குழப்பம்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரிக்கு கட்சி தலைமை கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியிருப்பதால், அவர் எப்போது வேண்டுமானாலும் திமுகவில் இணையலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் உலவிக் கொண்டிருக்கிறது. திமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்த மு.க.அழகிரி உட்கட்சி பூசலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மட்டுமல்லாமல் அவருடைய ஆதரவாளர்களும் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதன்பிறகு தீவிர அரசியில் இருந்து விலகியிருந்த அழகிரி, கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு … Read more

கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை? இறந்த 9 மாத சிசுவோடு சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள்!

ஆம்பூரில் வயிற்றிலேயே குழந்தை இறந்ததாகக் கூறிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். கர்ப்பிணி பெண்ணிற்கு முறையான மருத்துவ ஆலோசனை வழங்காததாக கூறி, இறந்த சிசுவுடன் மக்கள் போராடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரின் மனைவி பாக்கியலட்சுமி. கர்ப்பிணியாக இருந்த பாக்கியலட்சுமி, ரெட்டித்தோப்பு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளார். … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | கமல் இன்று ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியோடு நெருக்கமாக பயணிப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று கமல்ஹாசன் பங்கேற்றதும் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நேற்று முன்தினம் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். மக்கள் … Read more

வரும் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் ஸ்பெஷல்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பிரதான கோயிலான மலைக் கோயில் குடமுழுக்கு விழா வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) அன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 27ஆம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு தீர்த்த அபிஷேகம் நடத்தப்படும். கும்பாபிஷேக விழா இதையடுத்து மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெறும். இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள இணையதளம் … Read more

மகனுடன் சேர்த்து கடத்தப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்; தீவிர விசாரணையில் இரு மாநில போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ரமேஷ். இவர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளராக உள்ளார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், அரசு ஒப்பந்த பணிகள் மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி ரோஜா, கும்மிடிப்பூண்டி … Read more

கோயம்பேடு சந்தை: (25.01.2023)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 25/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். மகாராஷ்டிரா வெங்காயம் 22/20/18 ஆந்திரா வெங்காயம் 16/14 நவீன் தக்காளி 20 நாட்டு தக்காளி 17/15 உருளை 25/20/17 சின்ன வெங்காயம் 70/50/40 ஊட்டி கேரட் 30/25/20 பெங்களூர் கேரட் 15 பீன்ஸ் 25/20 பீட்ரூட். ஊட்டி 30/28 கர்நாடக பீட்ரூட் 20/17 சவ் சவ் 12/12 முள்ளங்கி 20/15 முட்டை கோஸ் 8/6 வெண்டைக்காய் 70/50 … Read more