புதுச்சேரி | பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு தார் சாலை அமைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள், பிளாட்டிக் குவளைகள், தெர்மாகோல் தட்டுகள், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்ட்டிக் உறிஞ்சு குழல் (ஸ்டா), பிளாஸ்டிக் கொடி உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் இப்பொருட்களை சில தொழிற்சாலைகள் ரகசியமாக உற்பத்தி செய்து வருகின்றன. இத்தகைய தொழிற்சாலைகளை புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் ஆய்வு செய்து, அத்தகைய பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் … Read more

அரசின் நிதிநிலைக்கு ஏற்ப புதிய வேளாண்மை கல்லூரி: அமைச்சர் தகவல்

நெல்லை: அரசின் நிதி நிலைக்கு ஏற்ப,  புதிய வேளாண்மை கல்லூரிகள் அமைக்கும் வாய்ப்பு  உருவாகும் என நெல்லையில் வேளாண்மைத்துறை  அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை  பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக, நெல்லை, தூத்துக்குடி,  தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள்  சங்க பிரதிநிதிகள், வேளாண்மைத் துறை அதிகாரிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் அமைச்சர் … Read more

இந்த ரிஸ்க் தேவையா? கிணற்றுக்குள் தலை கீழாக தொங்கியபடி கொடூர பாம்பை காப்பாற்றும் இளைஞர்!

இந்த ரிஸ்க் தேவையா? கிணற்றுக்குள் தலை கீழாக தொங்கியபடி கொடூர பாம்பை காப்பாற்றும் இளைஞர்! Source link

திருவண்ணாமலை : முன் விரோதத்தில் சித்தப்பாவை சுட்டுக்கொன்ற வாலிபர் கைது.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜமுனாமுத்தூர் அடுத்த மந்தைவெளி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் முன் விரோதத்தால் தன் சித்தப்பாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.  இந்த வழக்கில் ஏழுமலையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் பரிந்துரை செய்தார். இந்நிலையில் நேற்று ஏழுமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.  அந்த உத்தரவின் படி, ஏழுமலையை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோன்று, போளூர் போலீசார் … Read more

தெலங்கானா மற்றும் புதுச்சேரியில் குடியரசு தினத்தில் தேசியக் கொடியேற்றும் ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: குடியரசு தினத்தன்று தெலங்கானா மற்றும் புதுச்சேரியில் தேசியக்கொடியை ஆளுநர் தமிழிசை ஏற்றுகிறார். நாட்டிலேயே இரு மாநிலங்களில் தேசியக் கொடியேற்றும் ஒரே ஆளுநர் இவர்தான். நாட்டின் 74வது குடியரசு தினவிழா புதுச்சேரி கடற்கரை சாலையில் வரும் 26ல் நடைபெறுகின்றது. இவ்விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கின்றார். இதனையொட்டி புதுச்சேரி கடற்கரைசாலையில் இன்று காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவுகள், முப்படைகளை சேர்ந்த என்.சி.சி … Read more

ஸ்டாலின் தூக்கத்தில் கல் எறிந்த நாசர்: மறுபடியும் முதல்ல இருந்தா?

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் திமுக தொண்டர் ஒருவரை கல்லைக் கொண்டு எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளிடம் தனது நிலையை மிக வெளிப்படையாக எடுத்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் . “ ஒரு பக்கம் தி.மு.கவின் தலைவர். மற்றொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இருக்கிறது என்னுடைய நிலைமை. இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது … Read more

கந்துவட்டி கொடுமை: தம்பதி தற்கொலை

சேலம்: சேலம் அழகாபுரத்தில் கடன் தொல்லையால், கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சேலம் அழகாபுரம் பெரியபுதூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (66). இவரது மனைவி சாந்தி (56). இவர்களுக்கு ராமகவுண்டர், ராமவேல் என்ற மகன்களும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்டது. கடந்த 2000ம் ஆண்டில், ராஜேந்திரன் உள்பட 9 பேர் வாங்கிய லாட்டரியில், ரூ.7 கோடி பரிசு விழுந்தது. அதில், ரூ.1 கோடி ராஜேந்திரனுக்கு கிடைத்துள்ளது. அதை வைத்து குடும்பத்தை … Read more

விலகி நின்ற பெருந் தலைகளை கட்சிக்குள் இழுத்தவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: வேட்பாளர் ஆன பின்னணி

விலகி நின்ற பெருந் தலைகளை கட்சிக்குள் இழுத்தவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: வேட்பாளர் ஆன பின்னணி Source link

2 மணி நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு பறந்த இதயம்.! 

மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒரு நபர் மூளைச்சாவு அடைந்துள்ளார். அவரது இதயத்தை சென்னையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மரணம் அடைந்தவரின் இதயத்தை உடனே அறுவை சிகிச்சை செய்து எடுத்து அதை பாதுகாப்பான முறையில் விமானத்தின் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  அங்கிருந்து காவல்துறையினரின் உதவியுடன் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனைக்கு கிரீன் காரிடார் மூலமாக சரியாக இரண்டு மணி நேரத்தில் … Read more

புதுச்சேரி | மாதந்தோறும் 15ம் தேதி பொதுமக்கள் குறைகளை அதிகாரிகள் கேட்கவேண்டும் – ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரி: மாதந்தோறும் 15ம் தேதியன்று பொதுமக்கள் குறைகளை அரசு துறை உயர் அதிகாரிகள் கேட்க ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மாதந்தோறும் முதல் வேலை நாளில் கைத்தறி அல்லது காதி அணிந்து வரவேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைகேட்டு தீர்வு காணும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் புதுச்சேரியில் அதுபோல் கூட்டங்கள் ஏதும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் மாதம் ஒருமுறை கூட்டம் நடத்த ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக … Read more