நடிகருடன் நடனமாடிய துணை முதல்வரின் மனைவி!…

மராட்டிய துணை முதலமைச்சரின் மனைவி அரசு பங்களாவில் நடிகருடன் நடனம் ஆடி, வீடியோ எடுத்ததற்கு எதிர்க்கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மராட்டியத்தில், பா.ஜ.க. தலைவர் மற்றும் துணை முதல்-மந்திரியாக பதவி வகிப்பவர் தேவேந்திர பட்னாவிஸ். இவர் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ். இவருக்கு ஒய் பிரிவு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.   இந்நிலையில், மீட் பிரதர்ஸ் சார்பில் இசையமைக்கப்பட்ட, மூட் பனா லியா என்ற பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு அவர், … Read more

வெடி, பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெடி, பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பச்சைமலையான் கோட்டை கிராமம், பாலாஜி நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மாடிக்கட்டடம் இடிந்து விழுந்து ஜெயராமன் மற்றும் அவரது மனைவி நாகராணி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ … Read more

சூப்பர் சரவணா ஸ்டோர் வழக்கு: மதுரை கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை!

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே … Read more

ரேஷன் அரிசி மூட்டைகள் தண்ணீருக்குள் வீசிய விவகாரம்: எமரால்டு அணையில் மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி நேரில் விசாரணை

ஊட்டி: ஊட்டி அருகே எமரால்டு அணையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி வீசப்பட்ட விவகாரம் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி அருகே … Read more

வடிவேலு தாயார் மறைவு.. நேரில் ஆறுதல் கூறிய மு.க.அழகிரி – அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மூர்த்தி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தயாரிப்பாளர் அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் வடிவேலுவின் தாயாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தமாக தலைவர் வாசன், பாமகவின் ஜி.கே.மணி மற்றும் திரைப்பிரபலங்கள் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தனர். நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு மதுரையில் உடல்நல குறைவால் காலமானார். 87 வயதான சரோஜினி உடல்நல குறைவு காரணமாக 4 நாட்களுக்கு முன்பு … Read more

ஈரோடு: உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கவும்!…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று வெளியானது. அதன்படி பிப்ரவரி மாதம் 27-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ம் தேதி ஆரம்பமாகிறது. இச்சூழலில் நேற்றே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன்படி … Read more

மக்களைத் தேடி மருத்துவம் புள்ளிவிவரம்: இபிஎஸ்ஸுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை: “ஒரு கோடியே ஓராவது பயனாளிகள் யார் யார்? எடப்பாடியில் எத்தனை பயனாளிகள் இருக்கின்றனர்? சேலத்தில் எத்தனை பேர் இருக்கின்றனர் உள்ளிட்ட எல்லா விவரங்களும் தற்போது தயார் நிலையில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி விரும்புவாரேயானால், டிபிஎச் அலுவலகத்திற்கு வந்து தேவைப்பட்டால் பார்த்து தெரிந்து கொள்ளலாம்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட அடையாறில் ரூபாய்.35 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதி கண்ணகி நகரில் … Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து; பலியானவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கஞ்சாம்பட்டியில் சிவகாசியை சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான பேபி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இதனை விஸ்வநத்தத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வருகிறார். மேலும் இது நாக்பூர் உரிமம் பெற்று சுமார் 50 க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 70 க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று மூலப்பொருள்களின் உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்து … Read more

சத்துணவு மையங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் கீதா ஜீவன்

நாமக்கல்: சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 165 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம், அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.