வடிவேலு தாயார் மறைவு.. நேரில் ஆறுதல் கூறிய மு.க.அழகிரி – அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மூர்த்தி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தயாரிப்பாளர் அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் வடிவேலுவின் தாயாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தமாக தலைவர் வாசன், பாமகவின் ஜி.கே.மணி மற்றும் திரைப்பிரபலங்கள் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தனர். நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு மதுரையில் உடல்நல குறைவால் காலமானார். 87 வயதான சரோஜினி உடல்நல குறைவு காரணமாக 4 நாட்களுக்கு முன்பு … Read more

ஈரோடு: உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கவும்!…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று வெளியானது. அதன்படி பிப்ரவரி மாதம் 27-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ம் தேதி ஆரம்பமாகிறது. இச்சூழலில் நேற்றே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன்படி … Read more

மக்களைத் தேடி மருத்துவம் புள்ளிவிவரம்: இபிஎஸ்ஸுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை: “ஒரு கோடியே ஓராவது பயனாளிகள் யார் யார்? எடப்பாடியில் எத்தனை பயனாளிகள் இருக்கின்றனர்? சேலத்தில் எத்தனை பேர் இருக்கின்றனர் உள்ளிட்ட எல்லா விவரங்களும் தற்போது தயார் நிலையில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி விரும்புவாரேயானால், டிபிஎச் அலுவலகத்திற்கு வந்து தேவைப்பட்டால் பார்த்து தெரிந்து கொள்ளலாம்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட அடையாறில் ரூபாய்.35 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதி கண்ணகி நகரில் … Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து; பலியானவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கஞ்சாம்பட்டியில் சிவகாசியை சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான பேபி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இதனை விஸ்வநத்தத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வருகிறார். மேலும் இது நாக்பூர் உரிமம் பெற்று சுமார் 50 க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 70 க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று மூலப்பொருள்களின் உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்து … Read more

சத்துணவு மையங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் கீதா ஜீவன்

நாமக்கல்: சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 165 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம், அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை புகழ்ந்து பேசுவது குற்றமல்ல.. உயர்நீதிமன்றம்..!

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68வது பிறந்தநாளையொட்டி, சென்னை சின்மயா நகரில் கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடத்த அனுமதி கோரி நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து கோயம்பேடு காவல்துறையினர், ‘தடை செய்யப்பட்ட இயக்கத்தையோ, அதன் தலைவர்களையோ புகழ்ந்து பேசக்கூடாது. நிகழ்ச்சி அனைத்தையும் வீடியோ பதிவு செய்து காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். காலை 10 மணி முதல் … Read more

உதயநிதியின் துறையை கவனிக்கும் உதயச் சந்திரன்: முதல்வரின் தனிச் செயலர்களுக்கு கூடுதல் துறைகள்

சென்னை: முதல்வரின் தனிச் செயலாளர்கள் கவனிக்கும் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் 4 தனிச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதன்படி முதல்வரின் முதன்மைச் செயலாளராக உதயச் சந்திரன் ஐஏஎஸ், 2-வது தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ், 3-வது தனிச் செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 4-வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் கவனிக்கும் துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்நிலையில், 4-வது தனிச்செயலாளராக இருந்த அனு ஜார்ஜ்க்கு … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வரும் 23ல் தேமுதிக ஆலோசனை!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து வரும் 23 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை … Read more

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்டவர்களிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஈரோடு:  ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், அத்தொகுதிக்குட்பட்டவர்களிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 31ம் தேதி வேட்பு மனு தாக்கல் … Read more