தாலுகா அலுவலகங்கள் அதிகரிக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

கோவை: ‘தமிழ்நாட்டில் 4 லட்சம் பேருக்கு ஒன்று வீதம் உள்ள தாலுகா அலுவலகங்கள் மேலும் குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கப்படும்’ என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அளித்த பேட்டியில், ‘4  லட்சம் பேருக்கு ஒரு … Read more

மின் இணைப்பு எண்ணுடன் 2 கோடி ஆதார் எண்கள் இணைப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் 2 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6-ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, நவ.28-ம் தேதி முதல் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர். இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் … Read more

தமாகா போட்ட ஸ்கெட்ச்… ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சரவெடி!

தமிழ்நாடு அரசியல் களம் ஈரோட்டை நோக்கி திரும்பியிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் போட்டி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. அப்போது அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜ் போட்டியிட்டார். இவர் 58,396 … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தை விதி உடனடி அமல்: தலைவர்கள் சிலைகள் மூடல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக ஒப்படைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலராக  மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை  விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள்,  சிலைகள், பெயர், விளம்பர பலகைகள் போன்றவை அகற்றும் பணி நடந்து வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு: இத்தொகுதியில் 52 இடங்களில் 238 … Read more

ஜி.கே வாசனுடன் அ.தி.மு.க நிர்வாகிகள் சந்திப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க போட்டி?

ஜி.கே வாசனுடன் அ.தி.மு.க நிர்வாகிகள் சந்திப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க போட்டி? Source link

ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு என திமுக கூட்டணி சார்பில் அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என திமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருமகன் ஈ.வெ.ரா. மறைவையடுத்து, பிப்ரவரி 27ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்துப்பேசினர். இந்நிலையில், 2021ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றதால், இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே அத்தொகுதி ஒதுக்கப்படுவதாக திமுக … Read more

கரும்பு நிலுவைத் தொகை | கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து விவசாயிகள் முற்றுகை

கும்பகோணம்: புதிய ஆலை அதிபர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் உடனடியாக, கரும்பு விவசாயிகளைச் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து விவசாயிகள் முற்றுகையிட்டதால் கோட்டாட்சியர் இருக்கையைவிட்டு எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா தலைமை வகித்தார். வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு, தமிழக அரசைக் கண்டிக்கும் வகையில் கருப்புத் துண்டு அணிந்து வந்திருந்த விவசாயிகள், திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை … Read more

ஈரோடு கிழக்கு தேர்தல்… EVM சரிபார்ப்பு பணி தீவிரம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று, மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி மற்றும் இதர கட்சியினர் முன்னிலையில் ஈரோடு மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இடைத்தேர்தலுக்கு தயார் செய்யும் பணியில் பெல் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி, “இடைத்தேர்தலுக்காக 500 … Read more

பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: ‘பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’ என ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையைச் சேர்ந்த வக்கீல் தமிழ் ராஜேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி கோயிலில் 27ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, கடந்த 2020ல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில்களிலும் … Read more