வெடி, பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
சென்னை: திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெடி, பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பச்சைமலையான் கோட்டை கிராமம், பாலாஜி நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மாடிக்கட்டடம் இடிந்து விழுந்து ஜெயராமன் மற்றும் அவரது மனைவி நாகராணி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ … Read more