வணங்கான் படத்திலிருந்து விலகினார் நடிகர் சூர்யா!!

வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியிருப்பதாக இயக்குநர் பாலா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு … Read more

மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுத்த 15க்கும் மேற்பட்டோர் கைது

மதுரை: மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சையெடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பிச்சையெடுக்கும் நபர்களை மீட்டு, அவர்களுக்கு உரிய உதவி செய்து அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகங்களில் தங்க வைக்கவேண்டும் என, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில், ஆதரவின்றி … Read more

பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கல்வராயன்மலை: கல்வராயன்மலையில் தொடர் மழை பெய்து வருவதால் பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் நேற்று மதியம் 12 மணியில் இருந்து சுமார் 3.30 மணி வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக பெரியார் நீர்வீழ்ச்சியில் தற்போது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்வீழ்ச்சியில் குளித்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்து வெளியேறினர். அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை, … Read more

திருவள்ளூர்: பூமிக்குள் இருந்து அடுத்தடுத்து கண்டெடுக்கப்படும் ராக்கெட் லாஞ்சர்கள்!

திருவள்ளூர் அருகே பூமியில் புதைந்து கிடந்த மேலும் ஒரு பழங்கால ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை அடுத்த மாளந்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் ஒன்று பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனை வெடிகுண்டு நிபுணர்கள் முழு சோதனை செய்து திருவள்ளூர் அடுத்த மணவாள … Read more

இயக்குனர் பாலா படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகல்: காரணம் பற்றி பாலா பரபரப்பு அறிக்கை

இயக்குனர் பாலா படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகல்: காரணம் பற்றி பாலா பரபரப்பு அறிக்கை Source link

கனியாமூர் தனியார் பள்ளி நாளை திறப்பு: உயர் நீதிமன்ற உத்தரவின்படி 3வது தளத்திற்கு சீல் 

கள்ளக்குறிச்சி: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியின் 3வது தளம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மரணம் அடைந்தார். இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு எரித்தனர். இந்தக் கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில், பள்ளி வளாகம் … Read more

கையை தூக்கிய எடப்பாடி… அதிர்ந்து போன அதிமுக… சேலத்தில் நடந்தது என்ன?

எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் நடந்த நிகழ்வு சர்ச்சையாக மாறியுள்ளது. சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக பதவி வகித்து வருபவர் ஏ.வி.ராஜு. இவரது சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சேலம் ஸ்டீல் பிளாண்ட் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி சாலையின் இருபுறமும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. சேலத்தில் இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஏ.வி.ராஜு நூலை வெளியிட்டார். இந்த … Read more

சதுரகிரி கோயிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாள் அனுமதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் இக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த ஐப்பசி அமாவாசை மற்றும் பவுர்ணமி, கார்த்திகை அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக கோயிலில் தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நாளை (டிச.5) முதல் … Read more

`போக்சோ பதிய அவசரப்பட வேண்டாம்’- டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பிய சுற்றறிக்கை!

திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், `உயர்நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதன்படி கீழ்காணும் அறிவுரைகள் … Read more

ஒரே மேடையில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்து கொண்ட இளைஞர்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரட்டை சகோதரிகளை ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளைக்கு இறுதியில் துயரம் சம்பவம் நேர்ந்துள்ளது. சோலாப்பூர் மாவட்டத்தில் மல்ஷிராஸ் தாலுகாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வினோத திருமணம் நடைபெற்றது. மணமகன் இருவரும் மும்பையைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள். இரட்டை சகோதரிகள் மற்றும் மணமகனின் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து, வீடியோவின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 494வின் கீழ் … Read more