பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுப் புகார் – ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தகுதி இல்லாத நபர்களுக்கு வீடு ஒதுக்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முறைகேடு கண்டறியப்பட்டது எங்கு? உயர்நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன? இதுகுறித்து பார்க்கலாம்…. அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் வெண்மான் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் சேக்ஸ்பியர். 15 வருடங்களாக சிங்கபூரில் டெக்னீசியன் வேலை பார்க்கும் இவர், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தபோது, வீடு கட்டும் திட்டத்தில் தங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மக்கள் பலர் கூறியுள்ளனர். இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு ஆர்.டி.ஐ மூலம் அனுமதி பெற்று பஞ்சாயத்து கணக்குகளை ஆய்வு செய்தார் சேக்ஸ்பியர். இதில் … Read more