சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-யாக சங்கர் ஐ.பி.எஸ் நியமனம்: பின்னணி என்ன?

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்றதையடுத்து, அந்த பதவிக்கு சங்கர் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக சங்கர் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், காலியான காவல் நிர்வாக பிரிவு ஏடிஜிபி பதவியை, தலைமையிட ஏடிஜிபியாக பணியாற்றி வரும் வெங்கடராமன் ஐபிஎஸ் கூடுதலாக கவனிப்பார் என உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் பயிற்சி … Read more

பெருந்துறை அருகே பட்டியலின மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததாக புகார்: கல்விதுறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை..!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பட்டியலின மாணவர்களை பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததாக பெற்றோர் அளித்த புகார் குறித்து கல்விதுறை மற்றும் காவல்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தினர். துடுப்பதி அருகே பாலக்கரை கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 35 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பாலக்கரை, கூலிக்காட்டு வலசு, இந்திராநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அந்த பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பட்டியலின மாணவர்களை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை கழிவறைகளை சுத்தப்படுத்த வைத்ததாக புகார் … Read more

30 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரை விட்டு வெளியேறிய பண்டிட்கள்.. என்ன நடந்தது?

30 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரை விட்டு வெளியேறிய பண்டிட்கள்.. என்ன நடந்தது? Source link

லட்சுமியை போலவே..? கோவில் யானைகளின் அழுகுரல் யாருக்காவது கேட்குமா.?! 

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மனக்குல விநாயகர் கோயிலில் உள்ள யானை லட்சுமி இன்று அதிகாலை பாகன் நடைப்பயிற்சி அளித்துள்ளார் அப்போது திடீரென மயங்கி விழுந்த யானை உயிரிழந்தது. கடந்த 1997 ஆம் ஆண்டு மணக்குள விநாயகர் கோயிலுக்கு தனியார் நிறுவனம் ஒன்று இந்த யானையை காணிக்கையாக வழங்கியது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் மணக்குள விநாயகர் கோயிலில் யானை லட்சுமி ஆசி வழங்கி வந்தது. பக்தர்களிடம் ஆசி வழங்கி அன்பாக பழகி வந்த யானை உயிரிழந்த சம்பவம் … Read more

26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: தமிழகத்தில் நேற்று (நவ.29) வரை 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்பு எண்ணினை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து இருந்தார். இதன்படி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் உள்ள 2,811 பிரிவு அலுவலங்களிலும் நவ.28ம் தேதி முதல் டிச.31ம் தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி … Read more

ஆன்லைன் ரம்மி.. ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது வேதனை: அன்புமணி ராமதாஸ்

“ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது வேதனை அளிக்கிறது,” என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் தெரிவித்து உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில், கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் … Read more

மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியின் உடல் நல்லடக்கம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி..!

புதுச்சேரி: புதுச்சேரி வனத்துறை அலுவலகம் அருகே யானை லட்சுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு 1996ம் ஆண்டு 5 வயதில் லட்சுமி யானை வந்தது. உள்ளூர் பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை. தமிழகத்தில் கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ெகாரோனா … Read more

112 கிமீ வேகத்தில் வீடியோ எடுத்தபடியே பயணம்! பைக் கவிழ்ந்ததில் நேர்ந்த சோகம்!

இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணம் மேற்கொண்ட இருவர், கீழே விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தரமணி பகுதியை சேர்ந்தவர்கள் பிரவின்(19), மற்றும் ஹரி(17), இருவரும் நேற்று முன் தினம் தரமணி 100 அடி சாலையில், இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அதிவேகமாக 112 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளனர். பிரவின் வாகனத்தை ஓட்ட, பின்னால் அமர்ந்திருந்த ஹரி செல்போனில் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை வீடியோ பதிவு செய்து கொண்டே சென்றுள்ளார். … Read more

திருச்சி- தஞ்சை இடையே தாமதமாகும் 2 ரயில்வே சுரங்கப் பாதைகள்: அவதியில் மக்கள்

திருச்சி- தஞ்சை இடையே தாமதமாகும் 2 ரயில்வே சுரங்கப் பாதைகள்: அவதியில் மக்கள் Source link

கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தில் நிலம் ஒதுக்க டிச.15 கடைசி நாள்! தமிழக அரசுக்கு கெடு விதித்த மத்திய அரசு!

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தில் நிலம் இல்லாத மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நிலம் வழங்குவதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில் நிலம் இல்லாத மக்களுக்கு நிலம் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் 5,24,000 பயனாளர்களில் இதுவரை 2,75,000 பயனாளர்களுக்கு பல்வேறு மாநிலங்கள் நிலம் ஒதுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. … Read more