கொடைக்கானல் அருகே கோணலாறு அணை உடைப்பு: கிராம மக்கள் சீரமைத்தனர்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள மேல்மலை கவுஞ்சி கிராமத்தின் நீர் ஆதாரத்திற்கும், பாசன வசதிக்காகவும் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கோணலாறு அணை. 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அணை அப்பகுதி மக்களால் கட்டப்பட்டது. இந்த அணையில் கடந்த 10 ஆண்டுகளாக மறுகால் பாயும் இடத்தில் நீர்க்கசிவு இருந்து வந்தது. இக்கசிவுநீர் ஆண்டுதோறும் அதிகரித்து வந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் தொடர்ந்து அதிகாரியிடம் தெரிவித்து வந்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. … Read more