பாஜக மக்களை எப்போதும் பதற்றத்தில் வைத்திருந்ததை தவிர எதுவும் செய்யவில்லை: சீமான்

சேலம்: “ஆர்எஸ்எஸ், பாஜகவில்தான் மொத்த பயங்கரவாதிகளும் உள்ளனர்” நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதனால்தான் இந்த ஆளுநரே நமக்கு அவசியம் இல்லை என்று சொல்வது. அவரது தாமதத்தால், மக்கள் நலன்கருதி எந்தவொரு முடிவும் எடுக்கமுடியாமல் தள்ளிப்போகிறது. முன்பெல்லாம் நம் … Read more

பிடிவாரன்ட் எதிரொலி, சேலம் கோர்ட்டில் சீமான் ஆஜர்; ஜனவரி 3ல் மீண்டும் ஆஜராக உத்தரவு

சேலம்: சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் கடந்த 2017ல் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு சேலம் ஒருங்கிணைந்த 3வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சீமான் நேற்று 3வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் தங்க கார்த்திகா முன் ஆஜரானார். இதையடுத்து அவர் மீதான பிடிவாரன்டை தளர்த்திய … Read more

சிறை கைதிகளுக்கு தொலைபேசி.?! அனுமதி கொடுத்த தமிழக அரசு.! 

சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளுடன் அடைக்கப்பட்டு இருப்பவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பேச முடியாத சூழல் இருக்கிறது. ஆயுள் தண்டனை கைதிகள் அவர்களுடைய சொந்தக்காரர்களிடம் பேசுவது மிகப்பெரிய கடினமான விஷயமாக இருக்கிறது.  இதனால், தமிழக அரசு சிறை கைதிகள் தங்களது உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுகின்ற ஒரு புது திட்டத்தை செயல்படுத்தி இருக்கின்றது. முதற்கட்டமாக மதுரை மத்திய சிறையில் தான் இந்த திட்டமானது அமலுக்கு வர உள்ளது.  ஒரு கைதி மாதத்தில் நான்கு முறை தங்கள் உறவினர்களிடம் 30 நிமிடம் … Read more

டெல்டா மாவட்டங்கள் புறக்கணிப்பு | தென்னக ரயில்வேயை கண்டித்து திருவாரூரில் ரயில் மறியல்

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களை புறக்கணிக்கும் தென்னக ரயில்வேயை கண்டித்து, திருவாரூர் – மயிலாடுதுறை பயணிகள் ரயிலை நன்னிலம் ரயில் நிலையத்தில் மறித்து திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா மாவட்டங்களை புறக்கணிக்கும் தென்னக ரயில்வேவை கண்டித்தும், கரோனா காலத்துக்கு முன்னால் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தியும், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும், மன்னார்குடியில் இருந்து கோவை செல்கின்ற செம்மொழி எக்ஸ்பிரஸ் விரைவு … Read more

ரத்தக் கலரில் மாறிய குளம்… ஈரோட்டில் என்ன நடந்தது? நேரில் வந்த அமைச்சர் சாமிநாதன்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே செங்குளம் பகுதியில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான இரும்பு உருக்காலை இயங்கி வருகிறது. இங்கு பெரிக்ஸ் பெராக்சைடு, குளோரோக்சைடு போன்ற சுத்திகரிக்கப்படாத ரசாயனங்களை பயன்படுத்தி இரும்பை உருக்குகின்றனர். இதிலிருந்து வரும் கழிவுகளை மழைநீருடன் திறந்து விடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. மாசடைந்த குடிநீர் இதன் காரணமாக செங்குளம் பகுதியில் உள்ள நான்கரை ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் தேங்கியுள்ள நீர் சிவப்பு நிறத்தில் மாறியது. இதில் ரசாயனங்கள் கலந்து காணப்படுவதால், அந்த … Read more

கார் வெடிப்பு குறித்து அவதூறு; பா.ஜ ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது

கோவை: சென்னையை சேர்ந்தவர் பா.ஜ ஆதரவாளர் கிஷோர் கே.சாமி. இவர் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். முதல்வர் குறித்து அவதூறு கருத்து பதிந்ததாக கடந்த வாரம் சென்னையில் கிஷோர் கே.சாமியை போலீசார் கைது செய்தனர். கடந்த அக்டோபர் 23ம் தேதி உக்கடம்  பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே.சுவாமி மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் … Read more

அரசு மருத்துவமனைகள் அலட்சியமாக செயல்படுகிறது என்ற தகவல் பொய்யானது – அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.!

இன்று சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர்பேசியதாவது:- “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் அலட்சியமாக சிகிச்சைகள் வழங்கப்படுகிறது என்ற பொய்யான தகவல்கள் பரவி வருகிறது. அந்த தகல்வல்களை யாரும் நம்ப வேண்டாம்.  தினந்தோறும் 6,00,000 பேர் அரசு மருத்துவமனைகளின் மூலம் பயனடைகிறார்கள், 70,000 நபர்கள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள், தினமும் 10,000 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது.  மேலும், நீட் விலக்கு மசோதா … Read more

2024 மக்களவை தேர்தல்.. இந்துக்கள் மட்டுமல்ல… அடித்தளத்தை விரிவுப்படுத்தும் பா.ஜ.க.

2024 மக்களவை தேர்தல்.. இந்துக்கள் மட்டுமல்ல… அடித்தளத்தை விரிவுப்படுத்தும் பா.ஜ.க. Source link

பைக் சாகசம் செய்வோருக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு 

சென்னை: வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சமீபகாலமாக இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களின்படி கடந்த 5 … Read more

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால்…? – சீமான் பளீச் பதில்..!

மொத்த பயங்கரவாதியும் ஆர்எஸ்எஸ், பிஜேபியில் தான் உள்ளார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்து உள்ளார். சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் ஆளுநருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. மக்களின் நலன் கருதி எந்தவித முடிவும் எடுக்க முடியாமல் நகர்ந்து போடுகிறது. இதனால் தான் ஆளுநரை அவசியம் இல்லை என்று சொல்கிறோம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட … Read more