ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த 2-வது கணவர்.. முதல் கணவர் மீது திரும்பிய சந்தேகம்.! போலீஸ் தீவிர விசாரணை.!

சென்னை அருகே செம்மஞ்சேரி பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் சந்தியா கார்த்திக் தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இவர்கள் கிண்டி ஐந்து பர்லாங் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கடந்த மூன்று மாதங்களாக தங்கி வந்துள்ளனர். அங்கிருக்கும் குப்பைகளை பொறுக்கி அதை விற்று வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இத்தகைய நிலையில், கார்த்திக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி … Read more

கிருஷ்ணகிரி நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் நிறுத்தம்: தொடர்ந்து செயல்பட மக்கள் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி நகரில் செயல்படும் அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகள் நிறுத்தப் பட்டுள்ளதால், புறநோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி நகரில் காந்தி ரோடு சாலையில் அரசு தலைமை மருத்துவமனை கடந்த 1954-ம் ஆண்டு 422 படுக்கை வசதிகளுடன் செயல்பட தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள சுமார் 20 லட்சம் மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வசதியாக, கடந்த 2019-ம் ஆண்டு முதல் 700 படுக்கை வசதி கொண்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும், இங்கு தலைமை மருத்துவமனையாக இருந்த … Read more

ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க தயார்… ஆனால்… கண்டிஷன் போடும் இபிஎஸ் டீம் மேட்!

அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமாரின் மூத்த மகள் பிரியதர்ஷினி திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருமணத்துடன் மேலும் 50 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கே.சுப்பையாபுரத்தில் உள்ள ஸ்ரீ அய்யனார், கருப்பசாமி திருக்கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தனது குடும்பத்தினருடன் மகளின் திருமண அழைப்பிதழை வைத்து பூஜை செய்தார். இதையெடுத்து … Read more

திருவண்ணாமலை : டிராக்டர் மீது வேன் மோதியதில் 12 பேர் காயம்.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூரை அடுத்த நாடழகானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரின் திருமணத்திற்கு நிச்சயம் செய்வதற்காக வேனில் பத்துக்கும் மேற்பட்டோர் கீழ்பென்னாத்தூர் வழியாக செஞ்சிக்கு சென்றனர். இந்த வேனை நாராயணசாமி என்பவர் ஓட்டிச் சென்றார். இதையடுத்து இந்த வேன் கருங்காலி குப்பம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, திடீரென எதிரில் வந்த டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில், வேன் ஓட்டுனர், டிராக்டர் ஓட்டுனர் மற்றும் வேனில் பயண செய்த சில பெண்கள் உள்பட மொத்தம் 12 … Read more

தண்டையார்பேட்டையில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுந்தர விநாயகர் கோயில் இடித்து அகற்றம்

சென்னை: தண்டையார்பேட்டையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த விநாயகர் கோயில் நேற்று இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு 300-க்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டனர். சென்னை தண்டையார்பேட்டை சுந்தரம் பிள்ளை நகர் பகுதியில் ஸ்ரீசுந்தர விநாயகர் கோயில், கடந்த 20 ஆண்டுகளாக உள்ளது. அப்பகுதி குடியிருப்போர் சங்கத்தில் பல ஆண்டுகளாக செயலாளராக பதவி வகித்து வந்த முத்து என்பவர், கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் … Read more

வருங்கால முதல்வர்… இளைய கலைஞர்… உதயநிதிக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய ஓவிய ஆசிரியர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம். இவர், திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு, அவர் வருங்கால முதல்வர் ஆக வேண்டியும், நடித்த கலகத் தலைவன் திரைப்படம் வெற்றி பெற வேண்டியும் பென்சில், பிரஷ் பயன்படுத்தாமல் திமுக கொடியைக் கொண்டு உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரைந்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து … Read more

”நான் எவ்வளவு சொல்லியும் என் மனைவி கேக்கல”.. ஆன்லைன் ரம்மியால் வடமாநில பெண் விபரீத முடிவு

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த நூற்பாலை பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் ஒரிசா மாநிலம் இந்பூரைச் சேர்ந்த அஜய்குமார் மண்டல் தனது மனைவி வந்தனா மாஜியுடன் வசித்து வருகிறார். இருவரும் ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டில் இருக்கும்போது கணவன் மனைவி இருவரும் அவ்வப்போது ஆன் … Read more

மத்திய அரசு ஆர்.என். ரவியை சில திட்டங்களுடன் தமிழகத்திற்கு அனுப்பி இருக்கிறது – தி.மு.க குற்றச்சாட்டு

மத்திய அரசு ஆர்.என். ரவியை சில திட்டங்களுடன் தமிழகத்திற்கு அனுப்பி இருக்கிறது – தி.மு.க குற்றச்சாட்டு Source link

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாயின் கள்ளக்காதலன் கைது.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூரில் 40 வயதுடைய பெண் ஒருவர் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 இளம் வயது மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியரின் கணவர் விபத்தில் இருந்து விட்டார். இந்த நிலையில் பேராசிரியை கடந்த 2014 ஆம் ஆண்டு வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டார். அந்த நபருக்கு வேறு ஒரு மனைவியும் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த நபர் பேராசிரியர் இரண்டாவது மகளுக்கு பாலியல் தொந்தரவு … Read more

அறிவுரை கூறிய மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்!!

ராணிப்பேட்டை அருகே மாமனாரை, அடித்தே கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் (45) என்பவர் வேலூரில் உள்ள தனியார் ஓட்டலில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 4 மகள்கள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இஸ்மாயிலின் மூத்த மகள் ஷபியாபானுவிற்கு அதே பகுதியை சேர்ந்த ரஹ்மதுல்லா என்பவரோடு திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். ரஹ்மதுல்லா ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். ஷபியாபானுவிற்கு ஒரு மகன் … Read more