தமிழகத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரிப்பு – கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் வருவதால் விலை வீழ்ச்சி

மதுரை: வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளது. எனினும், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் 16 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில், 3 1/2 லட்சம் ஹேக்டர் அளவில் காய்கறிகள் சாகுபடி நடக்கிறது. தேசிய அளவில் காய்கறி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை வெங்காயம், தக்காளி, கேரெட், பீட்ருட், பீன்ஸ் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் உற்பத்தியும் குறைந்திருந்தது. … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்றுடன் காலாவதி ஆகிறது – ஆளுநர் மவுனம்

ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்று கடைசி நாள் என்பதால் ஆளூநர் இன்றுக்குள் கையெழுத்திட வேண்டும் என்றும் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தும் தமிழக ஆளுநர் அலட்சியம் காட்டுவது நியாயமானது அல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஆளுநர் அரசியல் செய்யாமல் தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆளுநரும் தமிழக முதல்வரும் ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும் என்றார். மேலும், ஆன்லைன் … Read more

தமிழர்களின் வீடுகளை அகற்றுவதா?… கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கேரளத்தின் எல்லைகள் டிஜிட்டல் முறையில் மறு அளவீடு செய்யப்பட்டு வருவதாக அறிவித்திருக்கும் கேரள அரசு, அதன் ஒரு கட்டமாக மூணாறில் வாழும் தமிழர்களின் வீடுகளை காலி செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படும் எல்லை அளவீடு சட்டவிரோதம் எனும் நிலையில், அதைக் காரணம் காட்டி தமிழர்களின் வீடுகளை அகற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது. கேரள மாநிலத்தின் எல்லைகளை டிஜிட்டல் மறு அளவீடு செய்யும் பணி நவம்பர் 1ஆம் தேதி முதல் … Read more

காரைக்காலில் 5 ஏக்கரில் 500 வகையான மருத்துவ குணம் கொண்ட பயிர்களை பயிரிட்டு அசத்தும் இயற்கை விவசாயி

காரைக்கால்: உணவே மருந்து என்னும் தாரக மந்திரத்தை நிரூபிக்கும் வகையில் காரைக்காலில் 5 ஏக்கரில் மருத்துவ குணம் கொண்ட பயிர்களை பயிரிட்டு இயற்கை விவசாயி பாஸ்கர் சாதனை படைத்து வருகிறார்.விவசாய உற்பத்தியில் பெரும்பாலும் மனிதனுக்கு நன்மை பயக்கும் இயற்கை உரங்களை தவிர்த்து கால சக்கரத்திற்கு ஏற்ப செயற்கை உரங்களை பயன்படுத்தி உடல் நலனை பாதிக்கும் உணவு பொருட்கள் உற்பத்தியில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் அரிதினும் அரிதாய் ஆங்காங்கே முத்தாய்ப்பாய் வெகு சில விவசாயிகளே உணவு உற்பத்தியில் இயற்கை … Read more

நடந்து முடிந்தது தமிழக இரண்டாம் நிலை காவலர் தேர்வு! சுமார் 67,000 பேர் பங்கேற்கவில்லை?

சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் 81.76 சதவீதம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 18.24 சதவீதம் பேர் தேர்வு எழுத வருகை தரவில்லை. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள 3552 ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வு தமிழகம் முழுவதும் 295 … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: இன்று முதல் வரும் டிசம்பர் 1ம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசனாது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 27 /11/22 முதல் 1/12/22 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசனாது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் . … Read more

மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம்: மாதந்தோறும் ரூ.1000 சேமிக்கும் பெண்கள்!

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொண்டு வந்த திட்டங்களில் முக்கியமானது மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம். அரசு உள்ளூர்ப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர், திருநங்கைகள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை … Read more

போலி பத்திரபதிவு செய்யப்பட்டால் உடனடி ரத்து! அமைச்சர் எச்சரிக்கை!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அம்பத்தூர் கிழக்கு பகுதி கொரட்டூர் பகுதி திமுக சார்பில் “உதிரத்தை கொடுத்து உதயத்தை வரவேற்போம்” எனும் தலைப்பில் மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்று வருகிறது. இந்த ரத்த தான முகாமில் சுமார் 300கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அம்பத்தூர் எம்எல்ஏ மண்டலக்குழு தலைவர் … Read more

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற மெகா திரி தயாரிக்கும் பணி

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை கோயிலில் திருக்கார்த்திகை தீபதிருநாளையொட்டி வருகிற 6ம் தேதி தீபம் ஏற்றுவதற்காக பருத்தி துணிகளைக் கொண்டு திரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப திருநாளன்று உச்சிபிள்ளையார் கோயில் முன் மெகா திரியை கொண்டு தீபம் ஏற்றுவது வழக்கம். இந்தாண்டு வருகிற 6ம் தேதி கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு மாலை 5 மணிக்கு செவ்வந்தி விநாயகர், தாயுமானசுவாமி மற்றும் மட்டுவார்குழலம்ைம உற்சவ மூர்த்திகளுக்கு … Read more

“அடுத்த பிறந்தநாளை உதயநிதி அமைச்சராக கொண்டாடினால் நல்லது”- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“அமைச்சராகும் அனைத்து தகுதியும் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கிறது. அடுத்த பிறந்த நாளை அமைச்சராக அவர் கொண்டாடினால் நல்லது” என மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று பேசியுள்ளார். திமுகவின் இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட குடிசைவால் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஐந்து விளக்கு பகுதியில் மருத்துவ முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமை தொடங்கி வைத்துவிட்டு, அதை பார்வையிட்ட … Read more