தொழிலதிபர், கார் டிரைவர் எரித்து கொலை; சாமியார், கள்ளக்காதலிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: திருச்சி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திருச்சி: கள்ளக்காதல் தகராறில் தொழிலதிபர், கார் டிரைவரை எரித்துக்கொன்ற சாமியார், இவரது கள்ளக்காதலிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, திருச்சி கோர்ட் தீர்ப்பளித்தது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ். தொழிலதிபரான இவர், தனது கார் டிரைவர் சக்திவேலுடன் கடந்த 2007 ஜனவரி 22ம் தேதி திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியில் காருடன் எரித்து கொலை செய்யப்பட்டார். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், ரங்கத்தை சேர்ந்த சாமியார் கண்ணன்(55), அவரது கள்ளக்காதலி யமுனா(52), யமுனாவின் … Read more

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் ஸ்ரீராமானுஜர் சிலை திறப்பு: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் ஸ்ரீராமானுஜர் சிலை திறந்துவைக்கப்பட்டது. இது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர்நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். மனிதகுலத்துக்கும், ஆன்மிகத்துக்கும் ஸ்ரீராமானுஜர் ஆற்றிய அரும்பணிகளை விளக்கும் `ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவ விழா’ கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த விழாவை நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். 2-ம் நாள் விழாவான நேற்று காலை ராமானுஜ நூற்றந்தாதி பாடல்கள் பாடப்பட்டன. ராமானுஜரின் சிலைக்கு, ஸ்ரீயதுகிரி யதிராஜ மடம் … Read more

சிலை கடத்தல் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை அடையாறில் வீட்டின் கார் ஷெட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக 1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 24 கற்சிலைகள்,10 கல் பீடங்கள், 5 பாவை விளக்குகள் மற்றும் ஒரு மரப்பெட்டி என 40 பொருட்களை கைபற்றப்பற்றப்பட்டன. அந்த வழக்கில் சி.கே.மோகன், ரிக்கி லம்பா, சௌந்தரபாண்டியன், கந்தசாமி உள்ளிட்ட 35 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக 1998ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் … Read more

சாவிலும் இணை பிரியாத தம்பதி

முசிறி: திருச்சி பாலக்கரை இரட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன்(91). இவரது மனைவி சம்பூரணத்தம்மாள்(86). கிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரிலுள்ள மூத்த மகன் ரவீந்திரன் வீட்டிலும், சம்பூரணத்தம்மாள் திருச்சி காட்டூரில் உள்ள 3வது மகன் ஆறுமுகம் வீட்டிலும் இருந்து வந்தனர். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக சம்பூரணத்தம்மாள் நேற்று அதிகாலை இறந்தார். இதுபற்றி அண்ணன் ரவீந்திரனிடம் ஆறுமுகம் கூறினார். இதைத்தொடர்ந்து தாய் இறந்ததை ரவீந்திரன் தனது தந்தை கிருஷ்ணனிடம் கூறினார். மனைவி இறந்த செய்தியை கேட்டு … Read more

நானும் டிரஸ் எடுக்கணும் நகருங்க.. துணிக்கடைக்குள் புகுந்த 7 அடி நீள பாம்பு !

தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் சாலை விதியில் இருக்கும் ஜவுளி கடை ஒன்றியில் 7 அடி சாரை பாம்பு நுழைந்தது. அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயனைப்பு துறையினர் பாம்பை பிடித்து வனதுறையினரிடம் ஒப்படைத்தனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்கட்டணம் செலுத்துவோர் தங்களது ஆதார் எண்ணை இணையத்தளத்தின் வழியாக இணைப்பது அவசியமாகிறது. ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் … Read more

இஓஎஸ் – 06 உட்பட 9 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி54 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை: புவி கண்காணிப்புக்கானஇஓஎஸ் – 06 உட்பட 9 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி54 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 என்றநவீன செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக் கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் மூலம் இன்று (நவ.26) காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்-டவுன் … Read more

அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்: முதல்வர் ஸ்டாலின் திட்டம்!

அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்த உள்ளதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். சென்னை பசுமை வழிச் சாலையில் இன்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் நமக்கு அர்ப்பணிக்கபடவில்லை என்றால் இந்த அளவிற்கு இந்த சமூகம் முன்னேறி இருக்குமா என்பதை நான் ஒரு முறை லட்சம் முறை கோடி முறை சிந்தித்து பார்க்க வேண்டும். ஜனநாயக குடியரசு என்ற ஒன்று இல்லை என்றால் நாம் … Read more

இந்தி திணிப்பை எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட தாழையூர் தங்கவேல் உடலுக்கு அமைச்சர், நிர்வாகிகள் அஞ்சலி..!!

சேலம்: இந்தி திணிப்பை எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட தாழையூர் தங்கவேல் உடலுக்கு அமைச்சர், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். தாழையூர் தங்கவேல் உடலுக்கு அரசின் சார்பில் அமைச்சர் சி.வி.கணேசன், ஆட்சியர் கார்மேகம், எம்.எல்.ஏ, ராஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வகணபதி, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினர்.