புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு தரும்: முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவது என்னுடைய கடமை. மத்திய அரசு புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது என்று முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, தணிக்கைத் துறை நடத்திய குழு விவாதத்தில் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதல்வர், பேரவைத் தலைவரிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. இந்திய தணிக்கை நாளை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை தணிக்கை மற்றும் கணக்காய்வு துறை சார்பில் குழு விவாதம் புதுச்சேரியில் இன்று நடந்தது. … Read more

ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது? பிடிஆர் நடத்திய ஆலோசனை!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000, குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கொரோனா நிவாராணம் ரூ.4000, ஆவின் … Read more

தெலங்கானாவில் எம்எல்ஏக்களை பேரம் பேசிய விவகாரம் பாஜ தேசிய பொது செயலாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு: கேரள பாஜ பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

திருமலை: தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்களை பேரம் பேசிய விவகாரத்தில் பாஜ தேசிய பொது செயலாளர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக கேரளா பாஜ பொறுப்பாளர் உள்பட 3 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) ஆட்சி செய்து வருகிறது. இங்கு எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டி உள்பட 4 எம்எல்ஏக்களை தலா ரூ.100 கோடிக்கு ஐதராபாத்தில் உள்ள … Read more

"சுமுகமாக சென்றாலும், மாநில தலைவராக ஏற்க மறுக்கிறேன்" – சூர்யா சிவாவை 6 மாதம் சஸ்பெண்ட் செய்த அண்ணாமலை

சென்னை: அலைபேசியில் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் சூர்யா சிவாவை ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்து அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் அலைபேசியில் உரையாடினர். அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் … Read more

கோயம்புத்தூருக்கு 218வது பிறந்த நாள்… ஸ்டேன்ஸ் போட்ட விதை… வளர்ந்து நிற்கும் மாநகரம்!

சென்னை ஒரு ரகம் என்றால் கோயம்புத்தூர் மற்றொரு நகரம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர், கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரம், கொங்கு தமிழ், இதமான வானிலை என பல்வேறு சிறப்புகளுக்கு உரிய கோயம்புத்தூருக்கு இன்று 218வது பிறந்த நாள். இதையொட்டி ’ஹேப்பி கோயம்புத்தூர் டே’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டதை போல கோவையில் உள்ள வீ.சி.எஸ்.எம் என்ற தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 400க்கும் மேற்பட்டோர் நின்று மரியாதை செலுத்தியுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக கோவை விளங்குகிறது. … Read more

செல்போனில் வாக்குவாதம்-ஆபாச பேச்சு பாஜ விசாரணை கமிட்டி முன் டெய்சி, திருச்சி சூர்யா ஆஜர்: பரஸ்பரம் மன்னிப்பு கேட்டதாக பேட்டி

திருப்பூர்: செல்போனில் ஆபாசமாக பேசிய விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க பாஜ விசாரணை கமிட்டி முன்பு நிர்வாகிகள் டெய்சி, திருச்சி சூர்யா சிவா ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போனில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆபாசமான பேச்சும் இடம் பெற்றிருந்தது. இந்த வாக்குவாதம்  மற்றும் ஆபாச பேச்சு ஆடியோ … Read more

அவசர எண் 100-க்கு அழைத்த பிறகு… விரைந்து செல்வதில் முதல் 10 இடங்கள் பிடித்த மாவட்ட காவல்துறை

அவசர எண் 100-க்கு அழைத்த பிறகு… விரைந்து செல்வதில் முதல் 10 இடங்கள் பிடித்த மாவட்ட காவல்துறை Source link

சிறார் குற்றத்தில் வரைமுறை இல்லாமல் போலீசார் நடவடிக்கை – உயர்நீதிமன்றம் அதிர்ச்சி.!

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்தாலும் சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் காவல்துறையினர், வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திதுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் பதினாறு வயது மாணவிக்கு, சக மாணவன் தாலி கட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து சிதம்பர நகர் போலீசார் மாணவனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.  இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் நலக்குழு பாதிக்கப்பட்ட மாணவியை அரசு நல காப்பகத்தில் அனுமதித்தது. அதன் … Read more

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்க்கான நீர் திறப்பு 15,000 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஓரிரு நாட்களை தவிர தற்போது வரை அதன் முழுக்கொள்ளளவான 120 அடியில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக, அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர் முழுவதும் டெல்டாவிற்கு வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், அணைக்கு நேற்றுவரை விநாடிக்கு 10,400 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதில் 400 … Read more