#BigBreaking | தமிழகத்திற்கு வந்த ஆபத்து நீங்கியது – அரசு தரப்பில் வெளியான அதிகாரபூர்வ செய்தி!

கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுவிட்டதால், இன்று காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு! இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை விடுத்துள்ள அறிவிப்பில், “இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையின் படி, இன்று (19-11-2022) காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால், 20-11-2022 முதல் 22-11-2022 வரை பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் … Read more

பொங்கல் பண்டிகைக்கு புதிய டிசைன்களில் வேட்டி – சேலைகள் வழங்க முடிவு

  பொங்கல் பண்டிகைக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு 15 புதிய டிசைன்களில் தயாரிக்கப்பட்ட சேலைகள் மற்றும் 5 புதிய டிசைன்களில் தயாரிக்கப்பட்ட வேட்டிகள் ஜனவரி 10ம் தேதிக்குள் வழங்கப்படவுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய டிசைன்களில் தயாரிக்கப்பட்ட வேட்டி சேலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விலையில்லா வேட்டி சேலை உற்பத்திக்காக முதற்கட்டமாக 293 கோடியே 96 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்மூலம் தயாரிக்கப்பட்ட வேட்டி, சேலைகள், தலா 1 … Read more

திமுக தலைமையில்தான் ‘மெகா கூட்டணி’ – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் உறுதி

திண்டுக்கல்: தமிழகத்தில் திமுக தலைமையிலான அணிதான் மெகா கூட்டணி என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதை தடுக்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எத்தனையோ பிரச்சினை இருக்கும்போது 6 பேர் விடுதலைக்கு மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்கிறது. குஜராத் பில்கீஸ்பானு வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டும் குற்றவாளிகளை முன்னதாகவே விடுதலை செய்வதை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. தமிழகத்தில் … Read more

சிதம்பரம் அருகே வீட்டுக்குள் புகுந்த முதலை

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வட அரிராஜபுரம் ஊராட்சி தாதம்பேட்டை புது தெருவில் உள்ள அம்புஜம் என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலை புகுந்தது. இதனை பக்கத்து வீட்டு பெண் பார்த்து அலறி னார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். தொடர்ந்து ஒரத்தூர் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து வனத்துறையினர் மற்றும் தோட்ட காவலர் புஷ்பராஜ் ஆகியோர் வந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் முதலையை பிடித்து சிதம்பரம் அருகே வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக கொண்டு … Read more

நாளை ரசிகர்களை சந்திக்கும் விஜய் : பனையூர் அலுவலக்கத்தில் முக்கிய ஆலோசனை

நாளை ரசிகர்களை சந்திக்கும் விஜய் : பனையூர் அலுவலக்கத்தில் முக்கிய ஆலோசனை Source link

தோல் நோயால் தூக்கு போட்டு இறந்த கல்லூரி மாணவி.!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டியில் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் மனைவி செல்வி. இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில், ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார். மேலும் இரண்டு மகள்களுக்கு திருமணமானதால், செல்வி தனது கடைசி மகளான காவ்யாவுடன் வசித்து வந்தார்.  இந்நிலையில், காவ்யா பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. ஊட்டச்சத்து-உணவியல் படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையே காவ்யாவிற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக … Read more

கே.எஸ்.அழகிரியின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை எனக் கூறி தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவி விலகல்

கோவில்பட்டி: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை எனக்கூறி, பதவியில் இருந்து விலகுவதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், அந்த மாவட்டத்தில் கட்சிக்குள் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக சென்னை சத்தியமூர்த்தி பவன் சென்று பேசிஉள்ளனர். அப்போது, காயங்கள் ஏற்படும் அளவுக்கு சில குண்டர்களால் காங்கிரஸ் கட்சியினர் தாக்கப்பட்டுள்ளனர். மறுநாள் அனைத்து மாவட்ட தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்ற போது, … Read more

போதையில் அடம்பிடித்த பயணியை கீழே தள்ளிய அரசு பஸ் கண்டக்டர்: வீடியோ வைரல்

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் அரசு போக்குவரத்து பணிமனையை சேர்ந்த பஸ், பெங்களூரில் இருந்து வந்தவாசிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு பழைய பஸ் நிலையம் வந்துள்ளது. அப்போது பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் பஸ் படிக்கட்டு அருகே போதையில் ஒரு பயணி மட்டும் நின்றுள்ளார். அவர் அவரை கீழே இறங்கும்படி கண்டக்டர் கூறியுள்ளார். ஆனால் அவர் போதையில் கம்பியை பிடித்தபடி இறங்காமல் அடம் பிடித்துள்ளார். இதனால் அவரது கையை வலுக்கட்டாயமாக எடுத்த கண்டக்டர், கீழே தள்ளி உள்ளார். … Read more

இசையால் மயக்கிய இளையராஜா… மெய்சிலிர்த்த மோடி.. களைகட்டிய காசி தமிழ் சங்கமம்

இசையால் மயக்கிய இளையராஜா… மெய்சிலிர்த்த மோடி.. களைகட்டிய காசி தமிழ் சங்கமம் Source link

வீட்டு கொட்டாயில் தங்கியுள்ள உறவுக்கார முதியவருக்கு உணவு தர மறுத்ததோடு, கம்பால் அடித்து துன்புறுத்தல்..!

செங்கல்பட்டு அருகே வீட்டு கொட்டகையில் தங்கியிருந்த உறவுக்கார முதியவர் அடித்து துன்புறுத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  குப்பன் என்பவரின் வீட்டு கொட்டாயில்   உறவுக்காரரான  80 வயதாகும் சொக்கலிங்கம் தங்கியுள்ளார். கவனிக்க யாருமில்லாத அவரை, குப்பனும் அவரது மகள் சிவகாமி மற்றும் பேரன் சூரியாவும் உணவு தரமறுத்ததோடு,குச்சி மற்றும் கம்பால் அடித்துள்ளனர்.  இதில் காயமடைந்த சொக்கலிங்கம் காயங்களுடன் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து விசாரணை நடத்தி சூர்யாவை  கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.   … Read more