கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: மேலும் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை

கோவை: கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 5 பேரிடம் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி கார்சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்தஜமேஷா முபின் உயிரிழந்தார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் பிரத்யேமாக முதல் தகவல் அறிக்கையும் … Read more

தேசிய அளவிலான தடகள போட்டி: தங்கப் பதக்கம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு

அசாம் மாநிலம் கௌஹாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று ஊர் திரும்பிய வீரருக்கு பேருந்து நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அசாம் மாநிலம் கௌஹாத்தில் 37-வது தேசிய அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் கடந்த 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, அசாம், உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது … Read more

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு.. தேர்வர்கள் இதெல்லாம் எடுத்து செல்ல தடை.!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிட்டது. இதில் 18 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 25 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியவை அடங்கும். இந்த பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 … Read more

அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து; 7 குழந்தைகள் உள்பட 21 பேர் உடல் கருகி பலி!

பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் மூச்சுத்திணறி மற்றும் உடல் … Read more

பொதுமக்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் 4 பேர் கைது.. ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக் மற்றும் செல்போன் பறிமுதல்!

தூத்துக்குடியில் பொதுமக்களை தாக்கி பைக், செல்போன் உள்ளிட்டவைகளை பறித்தாக திருநங்கைகள் 4 பேர் செய்யப்பட்டனர். பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த ஜெகதீசனிடம், அங்கு வந்த திருநங்கைகள் சிலர் பணம் கேட்டு மிரட்டி தாக்கி, அவரது வாகனத்தின் சாவியை பிடுங்கியுள்ளனர். மேலும், அங்கிருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சசீருதின் என்பவரையும் அடித்து உதைத்து செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் 4 பேரை … Read more

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை: பணியிட மாற்றம், பணி நீக்கம், தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று நடைபெற இருந்த வங்கி ஊழியர் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர் பணியிட மாற்றம் செய்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று (19-ம் தேதி) நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் சமரச தீர்வு ஏற்பட்டதையொட்டி, இன்று நடைபெற இருந்த வங்கி வேலைநிறுத்த போராட்டம் … Read more

வெளிச்சத்தை நோக்கி: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மின் இணைப்பு பெற்ற மலை கிராம வீடுகள்

குன்னூர் அருகே சேம்புக்கரை பழங்குடியின கிராமத்தில் உள்ள 21 வீடுகளுக்கு 50 ஆண்டுகளுக்குப் பின் புதிய மின் இணைப்பை வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் வழங்கினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட சேம்புக்கரை பழங்குடியின கிராமத்தில் குரும்பர் இனத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் பல வீடுகளில் மின் இணைப்பு இல்லாமல் பங்குடியின மக்கள் சிரமப்படுவதாக தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை எடுத்து செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த … Read more

இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு.!

கடந்த மாதம் அக்டோபர் 24-ஆம் தேதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாள்களான சனி, ஞாயிறு வழக்கமான அரசு விடுமுறை நாள், தொடர்ந்து திங்கள்கிழமை தீபாவளி என்பதால் தொடர்ச்சியாக 3 நாள்கள் அரசு விடுமுறை விடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு மறுநாளும் (செவ்வாய் – அக்.25) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு மறுநாளும் … Read more