காதலனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு நிர்வாணமாய் தப்பிய மாடல் அழகி!!

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் மாடல் அழகி மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ். இவர் தனது காதலரான ஜோர்டான் லோம்பார்டி (40) என்பவருடன் பிரேசிலியாவில் உள்ள பார்க்வே ஓட்டலில் தங்கி இருந்தார். அழகி மார்செல்லா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலையில், அவர்களுக்குள் சண்டை ஏறபட்டு உள்ளது.   இதனால் ஆத்திரமடைந்த மார்செல்லா கைத்துப்பாக்கியை வைத்து ஜோர்டானை சுட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து நிர்வாணமாக ஓட்டலை விட்டு வெளியேறி காரை எடுத்துள்ளார். தடுக்க வந்த ஊழியரை காரில் இடித்துள்ளார். பின்னர் சாலையில் … Read more

விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஓபிஎஸ் தகவல்

சென்னை: “அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். கட்சியின் நிர்வாகிகளாக ஓ.பன்னீர்செல்வத்தால் புதிதாக நியமிக்கப்பட்டவர்களும், தொண்டர்களும் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர். அப்போது வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக சார்பில் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. அதற்கு பிறகு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். அதிமுகவுக்கு புதிய செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் … Read more

தேனி அருகே சிறுத்தை தோல் பறிமுதல்

தேனி: தேனி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சிறுத்தை தோல் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி வடபுதுப்பட்டி அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி (37). இவரது வீட்டில் சிறுத்தை  தோல் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி தலைமையில் வனச்சரகர் செந்தில்குமார், வனவர் ஆனந்தபிரபு ஆகியோர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் அங்கிருந்த சிறுத்தையின் தோல் ஒன்றை கைப்பற்றினர். துரைப்பாண்டி தலைமறைவானார். தேனி பகுதியில் வேட்டையாடிய சிறுத்தையின் தோலா அல்லது வெளியூரில் … Read more

அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் இனி ஓவர்கோட் அணிய வேண்டும் – உயர் கல்வித்துறை உத்தரவு

அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் இனி ஓவர்கோட் அணிய வேண்டும் – உயர் கல்வித்துறை உத்தரவு Source link

கன்னியாகுமரி || அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வீடு கட்டினால் மட்டுமே அனுமதி.!

கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகர் ஊரமைப்பு துறை  இயக்குனர் சண்முகவேல் ராஜா ஆய்வு மேற்கொண்டார்.  இதைத் தொடர்ந்து, இன்று காலையிலும் ஆய்வுப் பணி நடைபெற்றது. அதன் பின்னர், அவர் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  அந்தக் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகள் மற்றும் வணிக … Read more

செல்போன் கடைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இரண்டு பேர்

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள செல்போன் கடைக்குள் புகுந்த இரண்டு பேர், கடை ஊழியரை தாக்கி ரகளையில் ஈடுபட்டது குறித்து, சிசிடிவி ஆதாரத்துடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி, மதுபோதையில் செல்போன் கடைக்கு வந்த இருவர், பழுதான செல்போனை சர்வீஸ் செய்வது குறித்து ஊழியரிடம் கேட்டுள்ளனர். அப்போது, கூடுதலாக செலவாகும் என கடை ஊழியர் கூறியதால், இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த இருவரும் மதுபோதையில் கடை ஊழியரை சரமாரியாக தாக்கி ரகளையில் … Read more

மதுரை மாநகராட்சியில் ரூ.700 கோடி வரி பாக்கி: காரணம் என்ன?

மதுரை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி மற்றும் கடைகள் வாடகை உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்களையும் சேர்த்து மொத்தம் ரூ.700 கோடி வரிபாக்கி உள்ளது. இந்த வரிகளை வசூல் செய்தால் மட்டுமே மக்களுக்கு அத்தியாவசிய அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும்நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் மொத்தம் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்பட மொத்தம் 3 லட்சம் கட்டிடங்கள் உள்ளன. இதன் மூலம் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை … Read more

தேங்காய் எண்ணெய் கம்பெனியில் முதலீடு 300 பேரிடம் ரூ.110 கோடி மோசடி செய்த வாலிபர் கைது

கோவை: கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம்  சேலக்காரவை சேர்ந்தவர் சஜீவ் கருண் (32). இவர் பொள்ளாச்சி கோட்டாம்பட்டியில்  தனியார் நிறுவனத்தை துவங்கினார். சஜீவ் கருண் தேங்காய் எண்ணை உற்பத்தி  செய்யும் ஆலையை நடத்தி வருவதாகவும், தனது நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு  செய்தால், லாபத்தில் பங்கு தருவதாகவும்  கூறியுள்ளார். இதனை  நம்பி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த பரமசிவம் என்பவர் இவரின் நிறுவனத்தில்  ரூ.96 லட்சம் முதலீடு செய்தார். ஆனால், லாபத்தில் பங்கு  கொடுக்கவில்லை என்றும், பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றும்  … Read more

#BREAKING | கல்லூரிபேராசிரியர்களுக்கு 'ஓவர் கோட்' சீருடை, ஆடை கட்டுப்பாடு – உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும், மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக, மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும் என்று, உயர் கல்வித் துறை ஆடை கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், பேராசிரியர்கள் இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என்று, உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பேராசிரியர்கள் தங்கள் … Read more