தமிழக கால்நடை மருத்துவ துறையில் 713 காலிப்பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் பெயர் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகள் பதவியின் பெயர் : கால்நடை மருத்துவ உதவியாளர் காலி பணியிடங்கள் : 731 வயது வரம்பு : 32- க்குள் சம்பளம் : ரூ.56,100 – ரூ.2,05,700 கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க … Read more

2021 vs 2022 – சென்னையின் 172 சாலைகளில் மழைநீர் தேங்கவில்லை: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய 172 சாலைகளில் இந்த ஆண்டு மழைநீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக கனமழை பெய்து வந்தது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 18-ம் தேதி வரை சென்னையில் 652 மிமீ மழை பதிவாகி உள்ளது. இதைப்போன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 516.7 மிமீ, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 503 மிமீ, திருவள்ளூர் மாவட்டத்தில் … Read more

ரேஷனில் புதிய திட்டம்… உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் முதலில் அமல்!

உணவுப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கிய அம்சமாக தற்போது ரேஷன் பொருட்கள் விநியோகத்துக்கு பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டு திட்டத்தைவிட சிறப்பான தொழில்நுட்பத்தை கொண்ட, கருவிழி அடையாளத்தை கொண்டு பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இத்திட்டம் தற்போது, திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியிலும், அரியலூரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை … Read more

சேலம் பெரியார் பல்கலை. துணைபதிவாளர் டிஸ்மிஸ்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில்  கடந்த 2013ம் ஆண்டு   உரிய அங்கீகாரம் இல்லாத தொழில்நுட்ப படிப்புகள் நடத்தியது, முன்கல்வித்தகுதி அல்லாத வெளிமாநில மாணவர்களை சேர்த்து, படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது என பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன.  விசாரணை குழுவின் அறிக்கைஅடிப்படையில்  நடவடிக்கை எடுக்க, கடந்த மாதம் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி தற்போது பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளராக உள்ள ராமன், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். … Read more

சென்னை-மைசூர் இடையேயான வந்தே பாரத் ரயில் மீது கன்று குட்டி மோதியதால் சேதம்!

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் கடந்த 11ஆம் தேதி நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் இருந்து மைசூர் வரை இயக்கப்படும் ரயிலானது ஜோலார்பேட்டை, பெங்களூர் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இது நிலையில் நேற்று இரவு மைசூரில் இருந்து வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே கன்று குட்டியின் மீது மோதியதால் ரயிலின் முன்பக்கம் சேதமடைந்தது.  இதன் காரணமாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்து … Read more

கவனக்குறைவால் தவறு நேர்ந்து விட்டது… மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் கேட்ட முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் பிரியா (17). இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார். சமீபத்தில் பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு … Read more

அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் பள்ளி வளாகத்தை பெருக்கி சுத்தம் செய்த மாணவ, மாணவிகள்!

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தை பெருக்கி சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தினம்தோறும் சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளி வளாகங்களை பெருக்க வைப்பது, பள்ளி வளாகத்தில் கழிவறை இல்லாததால் 200 மீட்டர் தொலைவில் உள்ள கழிவறைக்கு தண்ணீர் கொண்டு செல்வது போன்ற பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை … Read more

சேலம் | ஒரு லட்சம் மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி: நோய் தாக்குதலில் இருந்து தற்காக்க கால்நடை துறை துரிதம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் பெரியம்மை நோய் தாக்குதலில் இருந்து மாடுகளை தற்காக்க வேண்டி கால்நடை துறை மூலம் முதல்கட்டமாக ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆறு லட்சம் மாடுகள்: தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு தொழிலில் முன்னிலையில் சேலம் மாவட்டம் உள்ளது. சேலம் மாவட்டம் முழுவதும் ஆறு லட்சம் மாடுகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். சேலம் மாவட்ட கால்நடை துறை மூலம் சேலத்தில் கால்நடைகளுக்கான பன்முக மருத்துவமனையும், ஓமலூர், மேட்டூர், ஏற்காடு, … Read more

ஆர்டர்லி முறை… அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

சிஆர்பிஎப் வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி ஆர்டர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து நீக்கம் மற்றும் செய்யப்பட்ட காவலர் முத்து என்பவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த 2004 ஆம் ஆண்டு கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலை … Read more

காய்கறி சாகுபடியில் ரசாயன உரத்தை தவிர்க்க வலியுறுத்தல்

சிவகங்கை: காய்கறி சாகுபடியில் ரசாயன உரம், மருந்துகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவித்திருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இவைகளில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயண உரம், மருந்துகளை தவிர்த்து இயற்கை வழி உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும். நன்றாக மக்கிய தொழு உரம், மண்புழு உரம், மண்ணின் பௌதிக குணத்தை மேம்படுத்தி உற்பத்தி தன்மையை அதிகரித்து கொடுக்கும். … Read more