தமிழக அரசின் அகழ்வாய்வுகள் மூலம் வரலாற்றுக்கு புதிய தரவுகள், தகவல்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மதுரை: தமிழ்நாடு அரசு சார்பில் நடந்து வரும் அகழ்வாய்வுகள் வரலாற்றுக்கு புதிய தரவுகளையும், தகவல்களையும் தெரிவித்து வருகின்றன என தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மதுரை திருமலை நாயக்கர் மகாலில் இன்று தமிழக தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சாா்பில், உலக மரபு வார விழாவை முன்னிட்டு ‘தமிழக நடுகல் மரபு’ கண்காட்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்.. விரைவில் குட் நியூஸ்?

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த சாத்தியம் உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்தும் மாநிலங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்க வேண்டிய தமிழ்நாடு அதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது வருத்தமளிக்கிறது. சண்டிகரில் நேற்று நடைபெற்ற … Read more

சமாளிக்க தயாராக இருங்கள் – கனமழை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு

இதுதொடர்பாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், பேரிடர்களை எதிர்கொள்வதற்கான, நிலையான இயக்க நடைமுறைகளை மேற்கொள்ளவும், ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாக இயந்திரத்தையும் துரிதப்படுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.   மேலும், கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அதனால் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், நேற்று … Read more

நெருங்குது தைப்பூசம்; புதர் மண்டிய பாதையை சீரமைக்க கோரிக்கை

பழநி: தைப்பூசம் நெருங்கி வரும் நிலையில், புதர் மண்டிக் கிடக்கும் பாதயாத்திரை பக்தர்களின் நடைபாதையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பழநி கோயிலுக்கு பாதாயத்திரையாக வருவது வழக்கம். இவ்விழா வரும் ஜனவரி மாதம் 29ம் தேதி துவங்க உள்ளது. எனினும், அரையாண்டு தேர்வு விடுமுறை காலம் மற்றும் பொங்கல் … Read more

கடற்படை பேருந்து மோதியதில் கடற்படை வீரரின் கர்ப்பிணி மனைவி மரணம்; டிரைவரிடம் விசாரணை

கடற்படை பேருந்து மோதியதில் கடற்படை வீரரின் கர்ப்பிணி மனைவி மரணம்; டிரைவரிடம் விசாரணை Source link

30,000 கிமீ தூரம் பயணித்து உணவு டெலிவரி செய்த சென்னை பெண்!!

2018ஆம் ஆண்டு சென்னையில் இன்ஜினியரிங் முடித்த மானசா கோபால் என்ற பெண் காலநிலை மாற்றத்தை கண்டித்து உருவான குழுவில் இணைந்து இதற்கு முன்னரே அண்டார்டிகா சென்றுள்ளார். இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் வசித்துவரும் மானசா கோபால் காலநிலை மாற்றத்தால் உலகின் முக்கியமான கண்டமான அண்டார்டிகா பாதிக்கப்படுவதை உலகுக்கு உணர்ந்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக வித்தியாசமான யோசனையை முன்னெடுத்த இவரின் செயல் தற்போது வைரலாகி வருகிறது. விழிப்புணர்வுக்காக அண்டார்டிகா செல்ல இவருக்கு உதவ பிரபல உணவு டெலிவரி நிறுவனமான … Read more

விஜய்யின் ‘வாரிசு’ விவகாரம் | தமிழகத்தில் பிற மொழி படங்களை வெளியிட முடியாது: வேல்முருகன் எச்சரிக்கை

சென்னை: ‘விஜய் நடித்துள்ள வாரிசு பட வெளியீட்டுக்க் எதிரான தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படி இல்லை என்றால், தமிழ்நாட்டில் தெலுங்கு மட்டுமின்றி, எந்த பிற மொழி திரைப்படமானாலும் வெளியிட முடியாது’ என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நடிகர் விஜய் நடித்திருக்கும் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக உருவாகி இருக்கிறது. இப்படம் … Read more

விசைத்தறியாளர்கள் ஹேப்பி; அமைச்சர் செம சூப்பர்..தகவல்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசளித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களை அமைச்சர் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் வழங்கினர். … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் ஆண்டுக்கு ஒருமுறை மூடப்படுவது ஏன்? பின்னணி

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் அது அதிக தூரமாக கருதி உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர்.  இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், மக்கள்  வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை உரிமைகோரி விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒரு நாள் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் … Read more

விகேபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பு: பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்

விகேபுரம்: விகேபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்ததால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விகேபுரம் அருகே அகஸ்தியர்பட்டி விநாயகர் காலனி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் காலனி 3வது தெருவில் தற்போது பெய்துவரும் தொடர் மழையால் மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதியில் மழை நீர் குட்டை போன்று தேங்கியுள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை … Read more