திருப்பூர் அருகே 3 மாணவர்கள் பலியான காப்பகத்திற்கு பூட்டு போட்டு போலீஸ் பாதுகாப்பு
திருப்பூர்: திருப்பூர் அருகே 3 மாணவர்கள் பலியான தனியார் காப்பகத்திற்கு பூட்டு போடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே பூண்டி ரிங் ரோட்டில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் கடந்த 5ம் தேதி இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் 3 மாணவர்கள் பலியாகினர். மேலும், 12 பேர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஒரு … Read more