வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ45 லட்சம் மோசடி: நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார்

சென்னை: கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (49), (மாற்றுத்திறனாளி). இவரிடம் கடந்த 2017ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அன்பு தென்னரசன் (52) மற்றும் அவரது மகன் சிலம்பரசன் இருவரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ₹45 லட்சம் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, கேட்ட பணத்தை கொடுத்த ஜெயராமனுக்கு போலி ரசீதை வழங்கி உள்ளனர். இதையடுத்து தான் ஏமாந்ததை உணர்ந்த ஜெயராமன் கொடுத்த பணத்தை திருப்பிக் … Read more

இந்த ஆண்டு ரூ.30,000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: இந்த ஆண்டு ரூ.30,000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனங்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (அக். 8) தொடங்கி வைத்தனர். இதன் பிறகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் … Read more

லஞ்ச வழக்கில் தண்டனை பெற்றவர் பாளை. சிறையில் தாசில்தார் சாவு

நெல்லை: தென்காசி அருகே மேலகரம் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் அருணாசலம் (68). இவர், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2007ம் ஆண்டு தாசில்தாரராக பணியில் இருந்தபோது லஞ்ச வழக்கில் கைதானார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 2017ல் தாசில்தாருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அப்பீல் மனு செய்தார். அங்கும் … Read more

'அதிகாரத்தை வெளிப்படுத்தும் ஆணவ மனப்பான்மை' – திமுக அமைச்சர்கள் மீது சீமான் விமர்சனம்

சென்னை: திமுக அரசின் அமைச்சர்கள் பொதுமக்களையும், அரசுப் பணியாளர்களையும் அவமதிக்கும் வகையில் தொடர்ந்து நடந்துகொள்வது அதிகாரத் திமிரினை வெளிப்படுத்தும் ஆணவ மனப்பான்மை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் மருத்துவர்கள், மற்றும் மருத்துவக் கருவிகள் பற்றாக்குறையைத் தீர்க்க பலமுறை கோரியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசு, … Read more

ஆர்எஸ்எஸ்ஸை ஆட்டம் காண வைத்த ஆ.ராசா!

சென்னை பெரியார் திடலில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாக, யாரெல்லாம் இந்துக்கள் என அவர் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையானது. அதாவது, மனுஸ்மிருதியில் சூத்திரர்களும் பஞ்சமர்களும் எவ்வாறு வகைபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும், சாதி ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள் பற்றியும் அவர் விளக்கிப் பேசினார். ஆ.ராசாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. வட இந்தியர்களுக்கு புரியும் வகையில் இந்தியில் மொழி பெயர்த்தும் சமூக … Read more

கவனிக்காத பிள்ளைகளுக்கு எழுதி வைத்த சொத்தை ரத்துசெய்ய பெற்றோருக்கு உரிமை – உயர் நீதிமன்றம்

தங்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துகளை எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தங்கள் மகனுக்கு எழுதி வைத்த சொத்துகளை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தங்கள் மகனுக்கு சொத்துகளை எழுதி வைத்த நிலையில், வயதான காலத்தில் தங்களை கவனிக்காததாலும், மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்யாமல் இருந்ததாலும் அதனை ரத்து செய்ய கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை கீழமை … Read more

வெள்ளம் வந்த பிறகு நிவாரணப் பொருட்கள் தருவது தீர்வாகாது: மநீம தலைவர் கமல்ஹாசன்

சென்னை: வெள்ளம் வந்த பிறகு நிவாரணப் பொருட்கள் தருவது தீர்வாகாது என்றும், மழைநீர் வடிகால்களைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மழை நீர் வடிகால் பணிகள் தொடர்பாக மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்டோபர் இறுதியில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை, வழக்கத்தைக் காட்டிலும் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சராசரி மழையையே தாங்காமல் தவிக்கும் தமிழ்நாடு, கனமழையைத் தாங்குமா? 2015-ல் ஏற்பட்ட மழை வெள்ளப் பேரிடருக்குப் பிறகு, … Read more

நாளைக்கு பௌர்ணமி: இதை மறக்காம செய்யுங்கள்- பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்!

நாளை அக்டோபர் 9ஆம் தேதி பௌர்ணமி நாளாக இருப்பதால் அன்று செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் தனது கட்சியினரைக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாதத்திற்கு ஒரு முறை கிளை, பேரூர், ஒன்றிய, மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். பவுர்ணமி நாளில் கிராமக் கிளை அளவிலான செயற்குழு கூட்டமும், அமாவாசை நாளில் ஒன்றிய, நகர, பேரூர் கூட்டங்களும் கூட்டப்பட வேண்டும். ஆங்கில மாதத்தின் முதல் … Read more

ஜனநாயக நாட்டில் எந்தக் கட்சியிலும் இதுபோன்ற மோசமான பொதுக்குழு நடைபெறவில்லை’-ஓபிஎஸ் கருத்து

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இது போன்ற கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். மேலும் ஈபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் இன்று ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அதனைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கினார் ஓபிஎஸ். ஈபிஎஸ் அணியிலிருந்து ஓபிஎஸ் அணிக்கு மாறிய மைத்ரேயன் நிகழ்ச்சியில் பேசிய போது, … Read more