"அவருக்கு ”இந்து” என்ற வார்த்தை அலர்ஜியாக உள்ளது" – திருமாவளவனை சாடிய அர்ஜுன் சம்பத்

தொல் திருமாவளவனுக்கு இந்து என்கின்ற வார்த்தை அலர்ஜியாக உள்ளதாகவும், அதனால்தான் அவர் இந்து சமய அறநிலையத்துறையை சைவம் வைணவம் என தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்கிறார், ஆனால் தமிழகம் சங்கிகளின் பூமி என்றும் அர்ஜுன் சம்பத் பேசியுள்ளார். வள்ளலார் அவதரித்த தினத்தை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை கோயிலில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் 200 பேருக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக மாநில OBC பிரிவின் … Read more

சுதந்திரப் போராட்டத்தில் பிறந்த இயக்கம்தான் ஆர்எஸ்எஸ்: ராகுல் காந்திக்கு வானதி சீனிவாசன் பதில்

கோவை: சுதந்திரப் போராட்டத்தில் பிறந்த இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் என காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகாவில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவின் பங்கு என்ன என்பதை எங்கும் கண்டுபிடிக்க முடியாது. ஆங்கிலேயர்களுக்கு ஆர்எஸ்எஸ் உதவி செய்தது” என கூறியிருக்கிறார். ஆர்எஸ்எஸ் என்ற இயக்கம் பிறந்ததே சுதந்திரப் … Read more

பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துக – ராமதாஸ்

கர்நாடக அரசின் புதிய அறிவிப்பை ஒப்பிட்டு தமிழகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தக்கோரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “கர்நாடகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு 15%-ல் இருந்து 17% ஆகவும், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 3%-ல் இருந்து 7% ஆகவும் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மிகச்சிறந்த சமூக நீதி காக்கும் நடவடிக்கையாகும். தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22% ஆக உயர்த்த … Read more

திம்மையன்பேட்டை ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் மழைநீர் வடிகால் பணி க.சுந்தர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் திம்மையன்பேட்டை ஊராட்சியில் புதுப்பேட்டை செல்லும் சாலையையொட்டி உள்ள பகுதிகளில் லேசாக மழை பெய்தாலே மழைநீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைத்து தரவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதை ஏற்று, மாவட்ட கவுன்சிலர் பொது நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு பணியை க.சுந்தர் எம்எல்ஏ நேற்று துவக்கி … Read more

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுமக்கள், துணைநிலை ஆளுநரை சந்திக்கும் ‘மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி பெண் உட்பட 20-க்கும் மேற்பட்டோரிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறைகளைக் கேட்டறிந்தார். துணைநிலை ஆளுநரை சந்திக்க விரும்புபவர்கள் பலர் முன்பதிவு செய்து சந்தித்து வருகிறார்கள். மேலும் பலரும், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் துணைநிலை ஆளுநரைச் சந்திக்க விரும்புவதால் மாதந்தோறும் ஒவ்வொரு முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு நடைபெறும் என்றும், … Read more

சைலேந்திர பாபு முகநூல் பதிவு; போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாடு காவல் துறை சார்பில், ரவுடிகளை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் ‘ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை’ நடத்தப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் ரவுடி வேட்டை நடத்தப்பட்டது. இதில் 133 முக்கிய ரவுடிகள் சிக்கியுள்ளனர். மேலும் கொலை, கொள்ளை வழக்குகளில் விசாரணையில் இருந்த 15 பேர் நீதிமன்ற … Read more

மத்திய அரசு பணிக்கு படிப்பவரா நீங்கள்…. நாளை இதை தவறவிடாதீர்கள்!

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான B பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் Combined Graduate Level Examination (CGLE) போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவற்றில் உதவி பிரிவு அலுவலர் … Read more

செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்: தென்னக ரயில்வே மண்டல மேலாளரிடம் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கோரிக்கை

திருவள்ளூர்: செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தென்னக ரயில்வே மண்டல மேலாளரிடம் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் உள்ளது. இதன் அருகே  ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக செவ்வாப்பேட்டை, கீழானூர், மேலானூர், சிட்டத்தூர், கிளாம்பாக்கம், தொட்டிக்கலை, ராமாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அரண்வாயல், திருவூர், கொப்பூர், பாப்பரம்பாக்கம், முருக்கஞ்சேரி, நேமம், புதுச்சத்திரம், வெள்ளவேடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் … Read more

சென்னை: சாலையை கடக்க முயன்ற பெண் மீது அதிவேகமாக வந்த பைக் மோதி விபத்து.!

சென்னை நந்தனத்தில் அதிவேகத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் அந்த பெண் படுகாயம் அடைந்துள்ளார். சென்னை நந்தனத்தில் சாலையை கடக்க முயன்ற 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி மீது இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் வந்த இளைஞர் மோதியதில் அந்த பெண்மணி படுகாயத்துடன் நிலைகுலைந்து சாலையில் விழுந்துள்ளார். இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை மீறி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரும் … Read more

திருடிய நகையை அணிந்து செல்ஃபி.. 3 ஆண்டுகளுக்கு பின் பெண் கைது..!

தென்காசி மாவட்டம் சிவந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜவல்லி (69). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவரது வீட்டில் கடந்த 2019-ம் ஆண்டு 16 பவுன் தங்கச் சங்கிலி காணாமல்போனது. இது குறித்து அவர் தென்காசி போலீசில் புகார் செய்தார். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கில் துப்பு துலங்காமல் இருந்தது. இந்த நிலையில், பங்கஜவல்லி செல்போனில் அவர் வீட்டில் வேலை பார்த்த ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மனைவி ஈஸ்வரி (40) … Read more