நாளை நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை: மற்ற மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு 

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று (8ம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தருமபுரி, … Read more

சைவ தமிழன் என்று அழைக்கலாமே… கஸ்தூரி வீசிய பந்தில் தடுமாறும் சீமான்கள்

ராஜராஜ சோழன் இந்து இல்லை என்ற விவாதம் மீண்டும் கிளம்பியுள்ளது. ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றுகின்றனர் என்றும் இப்படியே போனால் தமிழர்களின் அடையாளங்களை ஆரியர்கள் முழுமையாக அபகரித்துக்கொள்வார்கள் என்றும் காரசார கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றது. ராஜராஜ சோழன் சிவனை வழிபட்ட சைவன், அக்காலத்தில் பல வழிபாடுகள் இருந்தாலும் இந்து என்று ஒன்று இருந்ததாக வரலாறு இல்லை என்று திராவிட கொள்கையாளர்கள், சீமான், கமல்ஹாசன் உட்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு … Read more

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் உறவினர்கள் தங்குவதற்கு புதிய கட்டிடம்

* 3500 சதுரடியில் ரூ.79.70 லட்சம் மதிப்பீட்டில் தயாராகிறது* இரவு, பகலிலும் பயன்படுத்தி கொள்ளலாம் திருச்சி : திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருந்துவமனை கட்ட அப்போதைய திமுக ஆட்சியின் போது முதல்வராக இருந்த கருணாநிதி பணிகளை துவக்கி வைத்தார். தற்போது அரசு மருத்துவமனையில் திருச்சி மட்டுமில்லாது சுற்று பகுதி மற்றும் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். திருச்சி … Read more

நூறுநாள் வேலைத் திட்டத்தின் குறைகளை கூறியதால் நெருக்கடி… சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு சீமான் கடிதம்

நூறுநாள் வேலைத் திட்டத்தின் குறைகளை கூறியதால் நெருக்கடி… சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு சீமான் கடிதம் Source link

ஆன்லைன் ரம்மியில் ரூ.5 லட்சம் இழப்பு.. விரக்தியில் தனியார் மில் அதிகாரி தற்கொலை..!

ஈரோடு அருகே, ஆன்லைன் சூதாட்டத்தில் 5 லட்சம் ரூபாய் இழந்ததால் விரக்தி அடைந்த தனியார் மில் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஈரோடு மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (34). இவருடைய மனைவி கீதா (34). காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி கொளப்பலூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். கிருஷ்ணமூர்த்தி, செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக தெரிகிறது. அந்த வகையில், கடந்த 6 … Read more

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85% நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னையில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைத்தல், நீர்வளத் துறை மற்றும் பொதுப்பணித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.8) நேரில் ஆய்வு செய்தார். இதன்படி அசோக் நகர், கொளத்தூர் வேலவன் நகர். அம்பேத்கர் கல்லூரிச் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பேசின் பாலம், வால்டாக்ஸ் சாலை, ரிப்பன் மாளிகை, என்எஸ்சி போஸ் … Read more

மழைநீர் வடிகால் பணிகள்: அக்டோபருக்குள் முடிக்க முதல்வர் உத்தரவு!

சென்னை மாநகரின் என்.எஸ்.சி. போஸ் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம், டெமலஸ் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, கொளத்தூர் – வேலவன் நகர் மற்றும் டெம்பிள் ஸ்கூல் ஆகிய இடங்களில் ரூ.167.08 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் – முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட … Read more

டீசலை எரிபொருளாக பயன்படுத்தி நீராவி மூலம் பல் சக்கரத்தில் இயங்கும் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்க ரூ.10 கோடியில் புதிய மலை ரயில் இன்ஜின் வந்தது

மேட்டுப்பாளையம் :  மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு ரூ.10 கோடியில் புதிய மலை ரயில் இன்ஜின் வரவழைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள என்ஜின்கள் நிலக்கரி மற்றும் பர்னஸ் ஆயிரம் மூலம் நீராவி உற்பத்தி செய்யப்பட்டு மேட்டுப்பாளையம்-குன்னூர் வரை இயக்கப்படுகிறது. தற்போது தரமான நிலக்கரி கிடைக்காததால்  நிலக்கரி என்ஜின் பயன்படுத்துவது இல்லை. இதனால்   பர்னஸ் ஆயில் மூலம் நீராவி உற்பத்தி செய்யப்பட்டு மலை ரயில் இயக்கப்படுகிறது. இதன் … Read more

இந்து மதம் உள்ளதை மறுக்கவில்லை! ராஜராஜ சோழன் காலத்தில் இருந்ததை சொன்னேன்! – கமல்ஹாசன்!

10ம் நூற்றாண்டில் ராஜமுந்திரி இல்லை! ராஜமகேந்திரபுரம் என்று அழைக்கப்பட்டது! பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் படம் வெளியானது. இந்த படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்து மன்னராக சித்தரிப்பதாகவும் இதன் வாயிலாக தமிழர்களின் அடையாளத்தை மாற்றுகின்றனர் என பேசி இருந்தார். இக்கருத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். வெற்றிமாறனுக்கு ஆதரவாக நடிகர் கமலஹாசன் இந்து மதம் என்ற பெயர் ராஜ ராஜ சோழன் காலத்தில் … Read more