பணிநீக்கம் செய்யப்பட்ட சுங்கச்சாவடித் தொழிலாளர்களுக்கு பதிலாக வடமாநிலத் தொழிலாளர்கள்: சீமான் கண்டனம்

சென்னை: “பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சுங்கச்சாவடித் தொழிலாளர்களை விதிகளுக்கு மாறாக, நீக்கி அறிவித்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்த முனைவதென்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உளுந்தூர்பேட்டையிலுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி, பெரம்பலூரிலுள்ள திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஆகியவற்றில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 54 பேரை தான்தோன்றித்தனமாக பணிநீக்கம் செய்திருக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் நடவடிக்கை அப்பட்டமான விதிமீறலாகும். பல … Read more

கொலை வழக்கில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கேரளாவில் கைது – நெல்லை காவல்துறை அதிரடி!

தென் மாவட்டங்களில் பிரபல ரவுடியான ராக்கெட் ராஜா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நெல்லை மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் சாமித்துரை (26) என்பவர், கடந்த 29.07.2022-அன்று முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் நடுநந்தன்குளத்தைச் சேர்ந்த விக்டர் (23), கோதைசேரியைச் சேர்ந்த முருகேசன் (23), தச்சநல்லூர், தாராபுரத்தை சேர்ந்த சஞ்ஜிவ்ராஜ்(25), ஶ்ரீராம்குமார் … Read more

பிரபல WWE வீராங்கனை திடீர் மரணம்!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

அமெரிக்காவை சேர்ந்த சாரா லீ, 2015-ல் டபிள்யூடபிள்யூஇ ரியாலிட்டி காம்பிடிஷன் சீரிஸில் Tough Enough பட்டத்தை வென்றார். அதன்பிறகு NXT தொடரிலும் ஒப்பந்தமானார். அடுத்தடுத்த வெற்றிகள் மூலமாக சாரா ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.கடந்த 2017-ம் ஆண்டு முன்னாள் மல்யுத்த வீரர் வெஸ்டின் பிளேக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று சாரா மரணமடைந்திருப்பதாக அவரது தாய் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த அறிவிப்பில்,”கனத்த இதயத்துடன் இந்த செய்தியை உங்களிடம் பகிர்கிறேன், … Read more

திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த 3 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், ராக்கியாபாளையம் கிராமம், மஜரா திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களில், மாதேஷ் (15), பாபு (13) மற்றும் ஆதிஷ் (8) ஆகிய மூன்று … Read more

லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய உதவி செயற்பொறியாளருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய உதவி செயற்பொறியாளருக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின் கம்பியை அகற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பசுவநாதன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பசுவநாதன் ஜாமின் வழங்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆண்டுதோறும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட தினம் : முதல்வர் அறிவிப்பு 

சென்னை: பரம்பிக்குளம் – ஆழியாறு திட்ட தினம் விழா இனி ஆண்டு தோறும் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தின விழா தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” நீர்வளம், நீர்மேலாண்மை, அதற்கான கட்டமைப்பு உருவாக்கம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினர் பெறும் வகையில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக் -7 இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும். திட்டத்தை நிறைவேற்றிய பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட … Read more

இபிஎஸ், ஓபிஎஸ் சபையில் யாருக்கு எந்த இருக்கை? ஏதாவது சம்பவம் நடந்திடுமோ என்ற பயத்தில் அதிமுக ர.ர.க்கள்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை மற்றும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு புகார் தொடர்பான அறிக்கையை ஆளும் திமுக அரசு தரப்பில் சபையில் வைக்கப்பட உள்ளது. இதேபோன்று தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை கிளப்ப அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் … Read more

மணலி புதுநகரில் இன்று அய்யா வைகுண்டசாமி கோயிலில் கொடியேற்றம்

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோயிலில் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் 10 நாள் புரட்டாசி மாத திருவிழா துவங்கியது. சென்னை மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் புரட்டாசி மாத 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இதேபோல், இந்த ஆண்டு இக்கோயிலில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் புரட்டாசி மாத 10 நாள் விழா திருநாம கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து, இன்று மதியம் பணிவிடை உச்சிப்படிப்பு நிகழ்ச்சி, மாலையில் … Read more

விசிக பெயர் பலகையில் இருந்த அம்பேத்கர் உருவப்படம் அவமதிப்பு – விசிகவினர் எதிர்ப்பு!

ஓசூர் அருகே விசிக பெயர் பலகையில் இருந்த அம்பேத்கர் உருவப்படம் அவமதிக்கப்பட்டதால் கிராம மக்கள் மற்றும் விசிக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தட்டிகானப்பள்ளி கிராமத்தில் விசிக பெயர் பலகையில் இருந்த அம்பேத்கர் உருவப்படத்தை மர்ம நபர்கள் சாணி பூசி அவமதித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே உள்ள தட்டிகானப்பள்ளி கிராமத்தில் பல தரப்பட்ட சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு பட்டியல் இன மக்கள் வாழும் … Read more