ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்: அன்புமணி வரவேற்பு
சென்னை: ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்புக்குரியது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், ”தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்க்கான அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவது தடுக்கப்படும். ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதற்கு … Read more