இந்து சமய அறநிலையத் துறையை சைவம், வைணவம் என இரண்டாக பிரிக்க வேண்டும்: திருமாவளவன் 

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையை சைவம், வைணவம் என்று இரண்டாக பிரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை மாமன்ற உறுப்பினர் தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினேன். அப்போது அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தேன். இந்து சமய அறநிலையத் துறையை சைவ சமய அறநிலையத் துறை … Read more

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை..! அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்..!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் அக்டோபர் 17ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்கினாரா? மீண்டும் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் மசோதா இயற்றப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. அதே வேளையில், அண்மையில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மியில் பணமிழந்து ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்துகொண்ட மாநிலம் முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையொட்டி ட்விட்டரில் … Read more

திருப்பூரில் விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தின் மீது நடவடிக்கை கோரி முற்றுகையிட்ட 100 பேர் கைது..!!

திருப்பூர்: திருப்பூரில் விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தின் மீது நடவடிக்கை கோரி முற்றுகையிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் அருகே முற்றுகையில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். த.பெ.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அண்மையில் விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் உணவு உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

ஒரு வயது குழந்தையின் கையில் ’பட்டா கத்தி’ கொடுத்து கேக் வெட்டச்சொன்ன சித்தப்பா கைது

காரைக்குடியில் ஒரு வயது குழந்தையின் கையில் பட்டாகத்தி கொடுத்து பிறந்தநாள் கேக் வெட்ட சொன்ன விஜய் என்பவர் தற்போது வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர்மீது ஏற்கனவே கொலை வழக்கு உட்பட 18 வழக்குகள் உள்ள நிலையில், ஜாமீனில் வெளியே வந்தவர் வழிப்பறி வழக்கில் மீண்டும் கைதாகியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சத்யா நகர் குடியிருப்பில் வசித்து வருபவர் விஜய்(26). இவர்மீது குன்றக்குடி காவல்நிலையத்தில் கொலைவழக்கு உட்பட, காரைக்குடி உட்கோட்டத்தில் 18க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், … Read more

தனுஷ்கோடி அருகே 3 குழந்தைகளுடன் 2 நாட்களாக தவித்த அகதிகள் மீட்பு..!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி அருகில் உள்ள 5-வது மணல் திட்டையில், 3 குழந்தைகள் உட்பட 5 பேர் இன்று நின்று கொண்டிருந்தனர். இதனைக் கண்ட மீனவர்கள், மண்டபம் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல் படை போலீசார், 5 பேரையும் மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் கடந்த 5-ம் தேதி தனுஷ்கோடி அருகில் உள்ள 5-வது மணல் திட்டையில் … Read more

ஆர்எஸ்எஸ் பேரணி பதிவை ரீ-ட்வீட் செய்த சென்னை போக்குவரத்து காவல் துறை: நெட்டிசன்கள் கண்டித்த பிறகு நீக்கம்

சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான ட்வீட்டை சென்னை போக்குவரத்துக் காவல் துறை ரீ-ட்வீட் செய்தது, நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து அந்த ட்வீட் நீக்கப்பட்டது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அளிக்கக் கூடாது என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் கடந்த 5-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோவை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும், அதன் ஆதரவாளர்களும் பகிர்ந்து … Read more

அக்., 17ல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்… ரெடியாகும் எதிர்க்கட்சிகள்!

தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். அதிமுகவில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் யாரென்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. எடப்பாடி தரப்பு தனியாக, ஓபிஎஸ் தரப்பு தனியாக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். … Read more

ஆசிரியர்களுக்கு தினக்கூலிகளைவிட குறைந்த ஊதியமா?… ராமதாஸ் கண்டனம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2381 பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை நடத்துவதற்காக மாதம் ரூ.5,000 ஊதியத்தில் பள்ளிக்கு ஒரு சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மழலையர் வகுப்புகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் தினக்கூலிகளை விட குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் கடந்த 2018-ம் … Read more

பெரம்பூர் தொகுதியில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரம்: எம்எல்ஏ ஆய்வு

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நாள்தோறும் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்து வருகிறார். சென்னை நகரில் பருவமழை துவங்குவதற்கு முன், அனைத்து நீர்நிலைகள் மற்றும மழைநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும். அதன் வழியே மழைநீர் தடையின்றி வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சென்னை மாநகராட்சி அனைத்து பகுதிகளிலும் முக்கிய கால்வாய்களை … Read more

மாநில தொழிலாளர்களின் வீடுகளில் மரத்தில் கட்டியது பாகிஸ்தான் கொடியா?.. பல்லடத்தில் பரபரப்பு

பல்லடம் அருகே தொழிலாளர்கள் கட்டிய கொடியை, பாகிஸ்தான் கொடி என நினைத்து காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரடிவாவி அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள கதிர்வேல் தோட்டம் என்றப் பகுதியில் தனியார் பனியன் நிறுவனத்தில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் சில இஸ்லாமிய இளைஞர்களும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை அவர்கள் வசிக்கும் அறையின் மேல்பகுதி மற்றும் தென்னை … Read more