பாவூர்சத்தி மேம்பாலப் பணிகளை ரயில்வே துறை விரைவில் தொடங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி: தென்காசி – திருநெல்வேலி நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாப் பணிகளை ரயில்வே துறை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர் தென்காசி – திருநெல்வேலி இடையே நான்குவழிச் சாலை பணிகள் சுமார் 430 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலம் 900 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இடதுபுறம் 22 பில்லர்கள், … Read more

டாஸ்மாக் முன்னாள் ஊழியர் தாக்கல் செய்த வழக்கு: தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

பணிநீக்கம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் பணி வழங்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கக் கோரி, டாஸ்மாக் முன்னாள் ஊழியர் தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் உதவியாளராக பணியாற்றிய விஜயகுமார், மூன்று ஆண்டுகளுக்கு மேல் அனுமதியின்றி விடுப்பு எடுத்துள்ளார். ஆனால் அவர் 8 ஆண்டுகளாக பணிக்கு வரவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு மீண்டும் … Read more

ஆர்எஸ்.மங்கலம் பெரிய கண்மாயின் தண்ணீர் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும்: தமிழக அரசுக்கு பாசன விவசாயிகள் கோரிக்கை

ஆர்எஸ்.மங்கலம்: ஆர்எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் வரக்கூடிய வரத்து கால்வாய்கள் முழுவதையும் தூர்வாரி கருவேல முட்புதர்களை அகற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய கண்மாய், ஆர்எஸ்.மங்கலம் பெரிய கண்மாயாகும். 48 குறிச்சிகளை (கிராமங்கள்) கொண்ட இக்கண்மாய் சுமார் 20 கிலோ மீட்டர் நீளம் கொண்டது இக்கண்மாயில் சுமார் 1 கிலோ மீட்டருக்கு தலா ஒரு மடை வீதம் மேலமடை, கீழமடை, வல்லமடை, … Read more

சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ: பக்தர்கள் செல்ல வனத்துறை தடை

சதுரகிரி மலையில் காட்டுத் தீ பற்றி எரிவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மேலே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 13 நாட்களாக பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று … Read more

48 மணி நேரத்திற்குள் விளக்கம் வேணும்.. தமிழக அரசுக்கு ஆணையம் நோட்டீஸ்..!

திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு அருகே உள்ள விவேகானந்தா ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த ஆசிரமத்தில் 15 மாணவர்கள் தங்கி இருந்தனர். அதில் ஒரு மாணவர் மட்டும் வெளியில் சென்ற நிலையில் 14 பேர் ஆசிரமத்தில் இருந்தனர். அதில் மாதேஷ், பாபு, … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 5  நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று (7ம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு … Read more

இன்னும் ஐந்து நாள்களுக்கு மழை தான்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (07.10.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை … Read more

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்; NIA தீவிர விசாரணை!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு   காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி, கத்தி, முக மூடி உள்ளிட்ட பொருட்களுடன் வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் சேலம் மாநகரைச் சேர்ந்த நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் என்பதும், நண்பர்களான இருவரும் சேலம் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடைகைக்கு எடுத்து யூடியூப் பார்த்து, வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்த துப்பாக்கி, கத்தி, முக மூடி மற்றும் … Read more

17 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைகிறது; போக்குவரத்து நெரிசலை குறைக்க கோவில்பட்டியில் புறவழிச்சாலை: முதற்கட்ட பணிகள் தொடங்கியது

கோவில்பட்டி: கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான நில எடுப்பு உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர். சென்னை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வளர்ந்து வரும் தொழில் நகரமாக கோவில்பட்டி அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் 2வது பெரிய தொழில் நகரம் இது. கோவில்பட்டியில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை வசதிகள், போதிய அளவில் இல்லை. கடந்த ஆட்சியில் மாநில நெடுஞ்சாலைத்துறை … Read more

பட்டுக்கோட்டை: கடன் பிரச்னையால் இரண்டு வயது மகனுடன் தாய் எடுத்த விபரீத முடிவு

பட்டுக்கோட்டை அருகே கடன் பிரச்னை காரணமாக இரண்டு வயது மகனை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை ஊராட்சி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்ராஜ் என்பவரின் மனைவி மாலதி (22). ஜான்ராஜ் தேங்காய் உரிக்கும் கூலித் தொழிலாளி. மாலதி அப்பகுதியில் தனியார் சுயஉதவிக் குழுவிற்கு தலைவியாக செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், பல்வேறு சுயஉதவிக் குழுவிற்கு மாலதி பணம் செலுத்த வேண்டிய நிலையில், தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் … Read more