ஈபிஎஸ் பிளான் சக்சஸ்… எடப்பாடியில் வச்சு திமுகவிற்கு சரியான அடி!

அதிமுகவில் பிரச்சினை ஓய்ந்துவிட்டதா? இப்ப யாரு? எடப்பாடி தானா? ஓபிஎஸ் அவ்வளவு தானா? என்று சாமானியர்களும் கேட்கும் அளவிற்கு வந்துவிட்டது கட்சி விவகாரம். தங்கள் வீட்டு பிரச்சினைகளை கூட மறந்து விட்டு, அதிமுகவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று மணிக்கு ஒருமுறை அப்டேட் செய்து வருகின்றனர். அதற்கு சற்று சளைக்காமல் பல்வேறு விஷயங்கள் அரசியல் ரீதியாக அரங்கேறி கொண்டிருக்கின்றன. இன்றும் அப்படித்தான். தனது சொந்த ஊரான எடப்பாடிக்கு சென்றிருக்கிறார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் . அங்கு … Read more

புரட்டாசி பெருந்திருவிழா: தாந்தோணிமலை பெருமாள் கோயிலில் தேரோட்டம்

கரூர்: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் புரட்டாசி பெருந்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வுகளான, திருக்கல்யாணம் அக்டோபர் 3ம்தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று காலை 9மணியளவில் நடைபெற்றது. கோயில் முன்பு துவங்கிய திருத்தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 9மணிக்கு துவங்கி 10மணி … Read more

கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் உயிரிழந்த 3 மாணவர்கள்.. திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்டதால், மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12 பேரை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சந்தித்து, அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், ஆறுதல் தெரிவித்து தேவையான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதுதொடர்பாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றிருந்தால், … Read more

காவலர் வழக்கில் ‘கர்மா’ அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புக்குத் தடை

மதுரை: மதுரை காவலர் இடமாறுதலுக்கு எதிரான வழக்கில் ‘கர்மா’ அடிப்படையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஶ்ரீ முருகன் என்பவர், மதுரை காவல்துறையில் முதல் நிலை காவலராக பணிபுரிகிறார். பணியின்போது முறையான அனுமதியின்றி விடுப்பு எடுத்தல், பணியில் கவனக்குறைவாக செயல்படுதல் போன்ற காரணங்களுக்காக இவர் 18 முறை தண்டிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக ஶ்ரீ முருகன், மதுரை மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். … Read more

ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு… மத்திய அரசின் திட்டமிட்ட செயலா?

’21 ஆம் நூற்றாண்டின் உயர்கல்விக்கு மாணவியரைத் தயார்படுத்துதல்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம், வட கோவை பகுதியில் உள்ள அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று கருத்தரங்கை துவக்கி வைத்தார். இதுபோன்ற பல்கலைக்கழக, கலலூரி விழாக்களின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது வழக்கம். ஆனால் கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் தமிழிசை இன்று பங்கேற்ற துவக்க நிகழ்ச்சியில் தமி்ழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பட்டு தேசிய … Read more

சாலையை சீரமைத்து பஸ்களை இயக்க வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சாலையை சீரமைத்து, மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உரத்துப்பட்டி, கள்ளங்களப்பட்டி, மிண்ணமலைப்பட்டி, கீழவண்ணாயிருப்பு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக பொன்னமராவதி செல்லும் சாலை உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த சாலை கடந்த 24 வருடங்களுக்கு முன்பு தார்ச்சாலையாக அமைக்கப்பட்டது. உரிய பராமிப்பில்லாததால் இந்த சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. 4 … Read more

”அக்டோபரில் சேர்ந்து டிசம்பரில் தேர்வு எழுதுவதா”- ஓராண்டு படிப்பு குறித்து நீதிபதி கருத்து

பல்கலைக்கழகத்தில் அக்டோபரில் சேர்ந்தவர் டிசம்பரில் முதலாண்டு தேர்வை எழுதுகிறார், இது முழு படிப்பையும் படித்தது ஆகாது. ஓராண்டு படிப்பை ஒரு மாணவர் குறைந்தது 10 மாதங்கள் பூர்த்தி செய்யும் வகையிலான திட்டத்தை பல்கலைக்கழகம் கொண்டு வர வேண்டும் என மதுரைக்கிளை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். பட்ட படிப்பு முடித்து சான்று வழங்கும்போது சம்பந்தப்பட்ட படிப்பை படித்ததற்கான வருடங்களை சான்றிதழில் குறிப்பிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனியைச் சேர்ந்த செண்பகம் என்பவர் மதுரை … Read more

தமிழக அரசிடம் எனது தந்தை வீடு வாங்கியது எனக்கு அதிர்ச்சி: தமிழிசை பேட்டி

தமிழக அரசிடம் எனது தந்தை வீடு வாங்கியது எனக்கு அதிர்ச்சி: தமிழிசை பேட்டி Source link

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் காத்மாண்டு விமான நிலையத்தில் கைது!

நேபாள கிரிக்கெட் அணிக்காக இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார். இந்த நிலையில் தான் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நண்பர் ஒருவர் மூலம் சந்தீப்பின் … Read more

பள்ளியின் சுற்றுச் சுவரை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை: நீலந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.5.83 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சுற்று சுவரை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் நீலந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர்களின் பாதுகாப்புக்கு சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.83 லட்சம் மதிப்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதற்கிடையில் கிராம … Read more