திண்டிவனம் அருகே கிடந்த ஆண் சடலம்.! போலீசார் தீவிர விசாரணை.!

திண்டிவனம் அருகே கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காலேஜ் ரோடு அருகே 40 வயது மதிப்பு தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. மேலும் அவரது உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளது. இதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை … Read more

விபத்துக்குள்ளானது இந்திய ராணுவ ஹெலிகாப்டர்.. விமானி உயிரிழப்பு..!

அருணாசலப் பிரதேசத்தில், இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு விமானி சிகிச்சை பெற்று வருகிறார். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் வழக்கமான பயணம் மேற்கொண்டிருந்த இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்ந்த இரண்டு விமானிகளும் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ராணுவ வீரர்கள் இரண்டு விமானிகளையும் மீட்டு அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு … Read more

“தமிழகத்தில் அக்.11 மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கினால்…” – ஹெச்.ராஜா எச்சரிக்கை

மதுரை: “தமிழகத்தில் அக்டோபர் 11-ல் திருமவாளவன் நடத்தும் மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கினால், விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது போல் இப்போதும் நடைபெறும்” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “நாடு முழுவதும் பிஎஃப்ஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய இயக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த இயக்கத்துக்கு ஆதரவாக பேசுவதும், செயல்படுவதும் சட்டப்படி குற்றமாகும். தமிழகத்தில் அக்.11-ல் திருமாவளவன், சீமானும் நடத்தவுள்ள மனித சங்கிலிக்கு … Read more

விஜயதசமி: ராவண லீலா நடத்தி அதிரவிட்ட தமிழகம்; ராவணனை கொண்டாடும் இந்தியா!

நாடு முழுவதும் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கமான உற்சாகத்தோடு நடைபெறாமல் இருந்த இந்த விழா, நடப்பாண்டில் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. முப்பெரும் தேவியரை போற்றி வணங்கும் பண்டிகையாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் 9 நாள் திருவிழா தசரா அல்லது விஜயதசமியுடன் முடிவடைகிறது. இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது … Read more

திடீரென பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்.. பெண்ணாடம் கடை வீதியில் பரபரப்பு

பெண்ணடாம் கடை வீதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் தன்னை தானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞரால் பரபப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்றிரவு அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைவீதி பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் கூடினர். அப்போது காய்கறி மார்கெட் எதிரில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் செல்லும் வழியில் திடீரென ஒரு இளைஞர் கையில் வைத்திருந்த பிளேடால் சரமாரியாக தன்னை தானே கழுத்தில் அறுத்துக் கொண்டார். இதைப் பார்த்த பொதுமக்கள் … Read more

78 வயது தாத்தாவுக்கு 18 வயது பெண்ணுடன் முதல் திருமணம்: அதுவும் லவ் மேரேஜாம்!

78 வயது தாத்தாவுக்கு 18 வயது பெண்ணுடன் முதல் திருமணம்: அதுவும் லவ் மேரேஜாம்! Source link

தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்வு!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,680-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, ரூ.4,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.   ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து, ரூ.67,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.   Source link

வள்ளலாரின் 200-வது பிறந்தநாள்: வடலூரில் சன்மார்க்க கொடியேற்றி தொடர் அன்னதானம்

கடலூர்: வள்ளலாரின் 200-வது பிறந்தநாளையொட்டி, வடலூரில் உள்ள தர்மசாலை, மருதூரில் சன்மார்க்க கொடியேற்றி தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், சத்திய ஞானசபையில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இதில், சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் பலரும் பங்குபெற்றனர். புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலாரின் இல்லம் அமைந்துள்ளது. 1823-ம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி பிறந்தார் வள்ளலார். சமூகத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளை கலைவதற்கு அரும்பாடுபட்டார். ‘கடவுள் ஒருவரே, அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்; தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யாதிருத்தல் வேண்டும், வள்ளலாரின் … Read more

விவசாயிகளுக்கு நிவாரணம்: ஜி.கே. வாசன் வைத்த வேண்டுகோள்!

கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு, மாநிலம் முழுவதும் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குறிப்பாக தஞ்சாவூர் , நாகப்பட்டினம் , திருவாரூர் , மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களில் செய்த குறுவை சாகுபடி பயிர்கள் தற்போது பெய்த மழையினால் பெருமளவு சேதமடைந்துள்ளது . இதனால் விவசாயிகள் … Read more

திருச்சி: மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து அகோரிகள் கொண்டாடிய நவராத்திரி

திருச்சி அரியமங்கலம் பகுதியில் நள்ளிரவில் மனித மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டு அகோரிகள் நவராத்திரி பூஜை நடத்தினார்கள். திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் ஜெய் அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் பயிற்சிபெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் நிர்வகித்து, பூஜைகள் நடத்தி வருகிறார். இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு நவராத்திரி விழா தொடங்கிய நாள் முதல் சிறப்பு … Read more