சமூக வலைதளத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – மூன்று பேர் கைது..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பஸ்தி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவருக்கு, சமூக வலைதளத்தின் மூலம் அதே பகுதியை சேர்ந்த ஒரு மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்குள் இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மருத்துவர் இளம்பெண்ணை நேரில் சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தியதால், அந்த பெண் அவரின் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அப்போது அந்த மருத்துவர் தன்னுடைய ஹாஸ்டலுக்கு வருமாறு வற்புறுத்தினார். அதற்கு சம்மதம் … Read more

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மாதவரத்தில் சுரங்கம் தோண்டும் பணி: அக்டோபர் இறுதியில் தொடங்க திட்டம்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி இடையே 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி செலவில் நடைபெறுகிறது. மாதவரம்-சிறுசேரி சிப்காட் (வழி: கெல்லீஸ் வரை 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை 4-வது வழித்தடம் (தியாகராய நகர்), மாதவரம்-சோழிங்க நல்லூர் வரை 5-வது வழித்தடம் … Read more

காரைக்கால் வானொலியில் இந்தி திணிப்பு ரத்து: பாமகவின் போராட்ட எச்சரிக்கைக்கு கிடைத்த பயன்: ராமதாஸ்

சென்னை: காரைக்கால் வானொலியில் இந்தி திணிப்பு ரத்து செய்யப்பட்டிருப்பது பாமகவின் போராட்ட எச்சரிக்கைக்கு கிடைத்த பயன் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: ”அகில இந்திய வானொலியின் காரைக்கால் நிலையத்திலிருந்து கடந்த 2-ஆம் தேதி முதல் தினமும் 4 மணி நேரம் ஒலிபரப்பப்பட்டு வந்த இந்தி நிகழ்ச்சிகள் நேற்றிரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தித் திணிப்பை பிரசார் பாரதி நிறுவனம் கைவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. காரைக்கால் வானொலி மூலமான இந்தித் … Read more

உங்க பி.எஃப் அக்கவுண்டில் எவ்ளோ பணம் இருக்கு? வீட்டில் இருந்தபடி அறிய ஈஸி வழி

உங்க பி.எஃப் அக்கவுண்டில் எவ்ளோ பணம் இருக்கு? வீட்டில் இருந்தபடி அறிய ஈஸி வழி Source link

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: தமிழக பாஜக 

சென்னை: அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த அவற்றின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ” கிருஷ்ணகிரி மாவட்டம் சாலமரத்துப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அந்த ஊர் பள்ளியின் ஆசிரியை ஒருவர் கண்ணீர்விட்டு அழுதுகொண்டே பள்ளியின் சீர்கேடான நிலை குறித்து பேசியிருப்பது தமிழக கல்வித்துறையின், தமிழக அரசு நிர்வாகத்தின் அவல நிலையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. அந்த ஆசிரியை உள்ளம் … Read more

ஸ்கூல் பாப்பா ஷூக்கு உள்ளே ‘பப்பு’ ஸ்னேக் ..! ஒளிஞ்சி விடையாடற இடமாடா இது ?

பள்ளிக்குழந்தையின் ஷூவுக்குள் குட்டி நாகப்பம்பு ஒன்று பதுங்கி இருந்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கு விடுமுறை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. கடலூர் செம்மண்டலம் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவரது இரண்டு குழந்தைகளும் அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால் ஆயுதபூஜைக்காக வீட்டை தூய்மை செய்யும் பணியில் அசோகன் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அவரது குழந்தைகள் பள்ளிக்கு அணிந்து செல்லும் ஷூவுக்குள் … Read more

சுதந்திரப் போராட்ட தியாகிகள் சுப்ரமணிய சிவா நினைவுநாள்; திருப்பூர் குமரன் பிறந்தநாள்: ஆளுநர் மரியாதை 

சென்னை: சுதந்திரப் போராட்ட தியாகிகள் சுப்ரமணிய சிவாவின் நினைவுநாள் மற்றும் திருப்பூர் குமரனின் பிறந்தநாள் ஆகியவற்றை ஒட்டி சென்னை ஆளுநர் மாளிகையில் இருவரது திருவுருவப் படங்களுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சுதந்திரப் போராட்ட தியாகி சுப்ரமணிய சிவாவின் நினைவு நாள் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகி திருப்பூர் குமரனின் பிறந்தநாள் ஆகியவற்றை ஒட்டி ஆளுநர் மாளிகையில் இன்று (04.10.2022) அவர்களின் … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் – அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் விளக்கம்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95% நிறைவடையவில்லை என்பதையும் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள்தான் 95% நிறைவடைந்துள்ளது என்பதையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிய வேண்டும் என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவனை பணிகள்தான் 95% முடிந்துள்ளன. அந்த மருத்துவமனையைத்தான் வரும் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி … Read more

ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை: நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

மணிப்பூர் மற்றும் மேற்குவங்க மாநிலங்களின் ஆளுநரும், முன்னாள் பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் கடந்த 1ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கார்டியாக் கேர் யூனிட்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இல.கணேசனின் உடல் நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் இல.கணேசனை தொலைபேசியில் … Read more