கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கி கணக்குகள் முடக்கம் – சைலேந்திர பாபு உத்தரவில் ‘ஆபரேஷன் கஞ்சா 2.0’

தமிழகத்தில், கஞ்சா வியபாரிகளின் 2 ஆயிரத்து 264 பேருடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் , கஞ்சா விற்பனை மூலம் சம்பாதிக்கப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மற்றும் பணம் முடக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2 பாயிண்ட் ஓ என்ற பெயரில் மார்ச் மாதம் முதல் கஞ்சா வேட்டையைத் தொடங்கிய போலீசார், … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 7ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 7ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று முதல் 6ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 மற்றும் 8ம் தேதி தமிழ்நாடு, புதுவை … Read more

ஆபரேசன் கஞ்சா… சாட்டையை சுழற்றிய டிஜிபி… 2000 வங்கி கணக்குகள் முடக்கம்!

கஞ்சா, குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்களின் உற்பத்தி, லிநியோகம மற்றும் விற்பனைக்கு தமிழகத்தில் தட செய்யப்பட்டிருந்தாலும், சந்தையில் இவற்றின் விற்பனை இன்றும் கனஜோராக நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அத்துடன் பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகேயும் போதைப்பொருட்கள் விற்பனை படு ஜோராக நடைபெறுவது அரசுக்கு புதுதலைவலியை ஏற்படுத்தி வந்தது. இதனையடுத்து ,தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் ‘ஆபரேஷன் கஞ்சா’ எனும பேரில் மாநிலம் முழுவதும் வேட்டை நடத்தப்பட்டது.. இந்த சோதனைகளினபோது பல நூறு … Read more

கணவர் இறந்த சில நாளில் 71 வயது பாட்டி அடித்துக் கொலை.! 

சென்னையில் ஆவடி அருகே கோவர்த்தனகிரியில் பொதிகை நகரில் இருக்கும் இந்த பகுதியைச் சேர்ந்த 71 வயது மூதாட்டி சாவித்திரியின் கணவர் கடந்த சில நாட்களுக்கு முன் மரணமடைந்துள்ளார்.   சாவித்திரிக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சாவித்திரி மட்டும் வீட்டில் தனியே வசித்து வந்த நிலையில், இவருக்கு சொந்தமாக 3 வீடுகள் இருக்கின்றன. அந்த வீடுகளை சாவித்ரி வாடகைக்கு விட்டு இருக்கிறார். நேற்று அவரைக்காண அவரது பேரன் சென்றுள்ளார். அப்பொழுது சாவித்திரி ரத்த … Read more

செங்குறிச்சி, திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஊழியர்கள் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள செங்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை அக்டோபர் 10-ம் தேதி வரை தொடர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கையை சுங்கச்சாவடி நிர்வாகம் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது சுங்கச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், ஃபாஸ்டாக் தொழில்நுட்பக் கருவிகள் ஆகியவற்றை சேதப்படுத்தியதாக சுங்கச்சாவடி … Read more

சுங்கச் சாவடி ஊழியர்கள் பணிநீக்கம்: தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்குமா?

செங்குறிச்சி, திருமாந்துறை சுங்கச் சாவடி ஊழியர்கள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் – செங்குறிச்சி சுங்கச்சாவடி மையம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச் சாவடி மையங்களில், திடீரென 58 ஊழியர்களை நிர்வாகத்தினர் பணி நீக்கம் செய்துள்ளனர். தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிய வழக்கு, புதுச்சேரியில் உள்ள மத்திய உதவி தொழிலாளர் ஆணையரிடம் நிலுவையில் உள்ளது. … Read more

கோபி அருகே கழிவு நீரால் குடிநீர், விவசாயம் பாதிப்பு காகித ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்: தாசில்தாரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுப்பு

கோபி: கோபி அருகே காகித ஆலை கழிவால் குடிநீர், விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள் அதனை நிரந்தரமாக மூடக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம்  கோபி அருகே உள்ளது கூகலூர் பேரூராட்சி. இங்குள்ள தண்ணீர்பந்தல் புதூரில் கடந்த 20 ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் தேக்கி  வைக்கிறார்கள்.  அருகில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படும் சமயங்களில் இரவோடு … Read more

நிலக்கரி இறக்குமதி விவகாரம் – ராமதாசுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

சென்னை: நிலக்கரியை இறக்குமதி செய்வதில் தமிழ்நாடு மின்சார வாரியம் அவசரம் காட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி இருந்த நிலையில், தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்,”மத்திய அரசு 2022-23-ஆம் ஆண்டுக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, 22 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்தியது. அதன்படி 2022-23ஆம் ஆண்டில், மூன்று காலாண்டில் சமமாக இறக்குமதி செய்யும்படி முடிவு … Read more

முதல்வர் ஸ்டாலின் வார்னிங்; கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி!

கூட்டணியில் அங்கம் வகிக்கும் , கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்களின் செயல்பாடுகள் சமீபகாலமாக, தமிழகத்தில் சலசலப்பையே ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் வெளியிட்டு இருந்த அறிக்கைக்கு திமுக அதிகாரப்பூர்வ நாளேடு ‘முரசொலி’ சரியான பதிலடி கொடுத்துவிட்டது. சிலந்தி என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அந்த கட்டுரையில் மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் கேரளா மாநிலத்தில் கூட … Read more

சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் 2024ம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

சென்னை: மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டமானது 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டம் ரூ.5.855 கோடியில் 30 மாதத்திற்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது. அதில் கீழ் அடுக்கில் உள்ளூர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும். இந்நிலையில் கடந்த மே மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின்படி 20.5 கிலோ … Read more