முக்கிய அறிவிப்பு! 2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள்!!

தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக இருப்பதாகவும், உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறித்தியுள்ளது. இதுகுறித்து, அனுப்பிய கடிதத்தில், இந்த பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான தேதிகளை (உத்தேசம்) அரசு அறிவித்துள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் இல்லாமல் கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14ஆம் தேதி … Read more

கோவையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

கோவை: மாநகராட்சி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டது. கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ஆட்சியர் அறிவித்த ரூ.721-ஐ வழங்க வேண்டும். கூலி உயர்வு, பணி நிரந்தரம் உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர், கடந்த 2ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். கோவை மாநகரில் 3,500 தூய்மைப் பணியாளர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 10 … Read more

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான்… வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரும்பு பெண்மணி திட்டத்தின் கீழ் இரும்பு சத்து நிறைந்த ஊட்டத்து நிறைந்த பெட்டகத்தை வழங்கினார். பின்னர் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை ஆணை, புதிய ரேஷன்கார்டு ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகத்தில் … Read more

கனல் தெறிக்கும் பேச்சால் வெள்ளையர்களை கதிகலங்க வைத்த சுப்பிரமணிய சிவாவிற்கு மணிமண்டபம் கட்டப்படுமா?.. வத்தலக்குண்டு மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்ப்பு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் பிறந்தவர் சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா. சிவம் பேசினால் சவமும் எழும் என்று போற்றப்பட்டவர். மகாகவி பாரதியாரையும், சுப்பிரமணிய சிவாவையும் சுதந்திர போராட்ட களத்தில் இரட்டைக்குழல் துப்பாக்கி என்பர். மகாகவி பாரதி பாடல்களாலும் கப்பலோட்டிய தமிழன் வஉசி போராட்டங்களாலும் வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவா கனல் தெறிக்கும் பேச்சாலும் சுதந்திர போராட்ட களத்தில் போராடினர். இவர்கள் மூன்று பேரையும் சுதந்திர போராட்ட களத்தில் போராடிய சூலாயுதத்தின் மூன்று முனைகள் என்பர். இதில் பாரதியாருக்கு அவர் … Read more

நித்யானந்தா ஆசிரமம் என நினைத்து பாஸ்கரானந்தா ஆசிரமம் இடிப்பு? அதிர்ச்சியில் பக்தர்கள்!

நித்யானந்தா என நினைத்து தன் ஆசிரமத்தை சேதப்படுத்தியதாக பல்லடம் காவல்நிலையத்தில் பாஸ்கரானந்தா புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் நித்யானந்தா போன்ற தோற்றத்தில் இருக்கும் பாஸ்கரானந்தா தமது பக்தர்களுடன் திரண்டு வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், “கோவை செல்வபுரத்தைப் சேர்ந்த பாஸ்கரானந்தா ஆகிய நான் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மீக பணி மேற்கொண்டு வருகிறேன். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு … Read more

சென்னையில் மழை வெள்ளம் ஏற்படாது.. அடித்து சொல்கிறார் அமைச்சர் எ.வ.வேலு..!

இந்த முறை சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. மக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் சட்டமன்றth தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிகளை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: “சென்னை மாநகராட்சி, நீர் மேலாண்மை … Read more

தமிழக அரசு மீது ஏழைகள் கோபம் கொண்டுள்ளனர்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டதால் தமிழக அரசு மீது ஏழை எளிய மக்கள் மிகுந்த கோபம் கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகத்தான திட்டம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ஏழையெளிய பெண்களுக்கு திருமணம் நடைபெறும்போது, அவர்களுக்கு தாலிக்கு தங்கம் என்பதே ஒரு கேள்விக்குறியாக இருந்துவந்தது. அதேநேரத்தில் … Read more

மைல்கல்லுக்கு ஆயுத பூஜை… குசும்புகார கோவை மக்களின் பாசக்காரத்தனம்…

கோவையில் தொலைவைக் காட்டும் மைல்கல்லுக்கு பொட்டு வைத்து பூஜை செய்து படையலிட்டு ஆயுதபூஜை கொண்டாடியுள்ளனர் கோவை மக்கள். குசும்புக்கு பஞ்சமில்லாத ஊர் கோயம்புத்தூர் என்று சொல்வார்கள். இந்த நிலையில், திருநெல்வேலி எனும் படத்தில் வரும் விவேக் காமெடியில் மைல்கல்லை குலதெய்வமாக வழிபாடு செய்தது போல் கோவையில் மைல்கல்லுக்கு பூஜை செய்யப்பட்டு படையல் படைத்து வழிபட்டுள்ளனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் பழைய மைல்கல் சேதம் அடைந்ததால் அதை அகற்றிவிட்டு புதிய மைல்கல் வைக்கப்பட்டு இருந்தது. சிறுவாணிக்கு … Read more

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: குடும்பம் குடும்பமாக பூங்காவில் குவிந்து கொண்டாட்டம்!!

தொடர் விடுமுறையின் காரணமாக ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். குடும்பம் குடும்பமாக ஏற்காடு வந்துள்ள மக்கள், அங்கு இயற்கையான சூழலுக்கு மத்தியில், சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் இனிமையாக பொழுதை கழித்து வருகிறார்கள். சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.   இந்த நிலையில் தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு முடிவடைந்து பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஆயுத பூஜை விஜயதசமி … Read more

பொன்னமராவதியில் மூடிக்கிடக்கும் பால் உற்பத்தியாளர் சங்கம் செயல்பாட்டுக்கு வருமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பொன்னமராவதி: பொன்னமராவதியில் மூடப்பட்டுள்ள பால்உற்பத்தியாளர் சங்கத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே எம்எம் 255 பால் உற்பத்தியாளர் சங்கம் செயல்பட்டு வந்தது. இந்த சங்கம் மூலமாக பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து பால் வாங்கி இந்த சங்கத்தின் மூலம் விற்பனை செய்வது, கறவை மாடுகள் வளர்ப்போருக்கு கடனுதவி வழங்குவது, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது, மாட்டுத்தீவனம் வழங்குவது, மாட்டுத்தீவனபுல் வழங்குவது, கறவை மாடுகள் வளர்ப்பபோருக்கு பயிற்சி அளிப்பது … Read more