பெங்களூரூ டூ மதுரை: காரில் கடத்திவரப்பட்ட 35 மூட்டை குட்கா – சிக்கியது எப்படி தெரியுமா?

வேடசந்தூர் அருகே முன்னால் சென்ற லாரியின் மீது பின்னால் கார் மோதி விபத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 35 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டி நான்குவழிச் சாலையில் மதுரையை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் முன்னால் சென்ற லாரியின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து காரில் வந்த இரண்டு பேர் காரில் கடத்தி வந்த குட்கா மூட்டைகளை … Read more

இவைகளை வெளியிடக் கூடாது.. டிவி சேனல்களுக்கு அரசு எச்சரிக்கை..!

மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், தனியார் டிவி சேனல்கள், இணைய செய்தி நிறுவனங்கள், ஓ.டி.டி. எனப்படும் இணைய பொழுதுபோக்கு தளங்களுக்கென தனித்தனியாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளிட்டுள்ளது. அதில், ‘வெளிநாடுகளைச் சேர்ந்த ஆன்லைன் சூதாட்ட தளங்கள், இணைய செய்தி தளங்கள் என்ற பெயரில் புதிய வகையில் விளம்பரங்கள் செய்கின்றன. இந்த சூதாட்ட தளங்களின் இணைய செய்தி தளங்கள் நம் நாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி, சட்டவிதிகளுக்கு புறம்பாக விளம்பரங்கள் செய்து வருகின்றன. … Read more

இலங்கை போர்க்குற்ற விசாரணை | ஐ.நாவில் இந்தியா ஆதரிக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: இலங்கை போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் நமது நாடு ஆதரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் கொண்டு வந்துள்ளன. ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி … Read more

தேவர் ஜெயந்திக்கு எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்வாரா?

தேவர் ஜெயந்தி விழா இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில் அதை முன்னிட்டு அதிமுகவில் மீண்டும் பரபரப்பு கிளம்பியுள்ளது. பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அவரது மார்பளவு சிலைக்கு அதிமுக சார்பாக தங்க கவசம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அதிமுக பொருளாளர் மதுரை அண்ணா நகர் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் கையெழுத்திட்டு தங்ககவசத்தை பெற்று விழாக்குழுவிடம் வழங்குவார். பின்னர் நிகழ்வு முடிந்த பின்னர் வங்கி லாக்கரில் வைப்பார். அதிமுக பிளவுபட்டு ஓபிஎஸ் – இபிஎஸ் … Read more

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

கோவை: கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,வேலை நிறுத்ததில் ஈடுபட்ட  2,000 தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தம் முடிவு செய்தனர். மாநகராட்சி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

வாகன சோதனையில் சிக்கிய 1.5 டன் சமையல் மஞ்சள் – இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர் கைது

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்த 1.5 டன் சமையல் மஞ்சளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுரையிலிருந்து சமையல் மஞ்சளை இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனம் மூலம் கொண்டு வந்து கொண்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மண்டபம் அடுத்த வேதாளை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் … Read more

பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை..!

ஆயத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பெரும்பாலான மக்கள் வணிக நிறுவனங்கள், கடைகள், வாகனங்கள் போன்றவற்றுக்கு பூஜைகள் செய்து, பூசணிக்காய் மற்றும் தேங்காய் உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பல வேளைகளில், சாலைகளின் நடுவே பூசணிக்காய்களை உடைத்துவிட்டு அப்படியே விட்டுச் சென்றுவிடுகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இதில், சாலையில் விழும் வாகன ஓட்டிகள் மீது பின்னால் வரும் வாகனங்கள் மோதும் ஆபத்தும் உள்ளது. இதுபோன்றவற்றால், ஒவ்வொரு ஆண்டும் வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து … Read more

தருமபுரி – தி.மலை ரூ.410 கோடியில் திட்டம் – அரூர் பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தருமபுரி-திருவண்ணாமலை இடையே 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தருமபுரி-திருவண்ணாமலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரூ.313.50 கோடி மதிப்பீட்டில் தருமபுரி-அரூர் (மொரப்பூர் வழி) சாலை வரை இருவழிப்பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், ரூ.96.50 கோடியில் அரூர் வழி தாணிப்பாடி-திருவண்ணாமலை சாலை வரை இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு … Read more

தேவரின் தங்க கவசத்தை பெற அதிமுகவில் யாருக்கு அதிகாரம்? முடிவு எப்போது தெரியும்?

தரப்பின் சார்பில் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் 100 மேற்பட்டோருடன் ஓ.பி.எஸ் ஆதரவு அதிமுகவினர் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவரின் 14 கிலோ தங்க கவசத்தை பெறுவதற்கான மனுவை வங்கி முதுநிலை மேலாளர் ரேனு குப்தாவிடம் வழங்கினர். பின் செய்தியாளர்களை முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எங்கள் தரப்பின் சார்பில் வழக்கம் போல ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கையெழுத்திட்டு தேவரின் தங்க கவசத்தை பெறுவதற்கான கோப்புகளை … Read more

சூரைக்காற்றுடன் சீற்றமான கடல்: மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள் – அணிவகுத்து நிற்கும் படகு

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடல் பகுதிகளில் சூரைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாகக் கொண்டு ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரையிலான சுமார் 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் பைபர் படகு மற்றும் விசைப ;படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் மற்றும் ஆந்திரா பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி … Read more