Cleanin Mop கைப்பிடியில் தங்கம் கடத்தல் – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கும் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி தங்கம் கடத்தல் முயற்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அதில் ஏகப்பட்ட நூதன முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அப்படி தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய  ஒப்பந்த பணியாளர்கள், பயணிகள் வருகை பகுதியை, தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒரு ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப் மீது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.   இதையடுத்து பாதுகாப்பு … Read more

சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு

சென்னை: கடல் உப்பு காற்று காரணமாக ராமேஸ்வரம் ரயில் பெட்டிகள் பராமரிப்பு நடைமேடைகள் சேதம் அடைந்துள்ளன. புதிய பராமரிப்பு நடைமேடைகள் அமைக்கும் பணி இன்று முதல் துவங்கி உள்ளது. இதனால் சென்னையில் இருந்து வந்த ராமேஸ்வரம் ரயில் பராமரிப்பு பணிகளுக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இன்று (01.10.2022) ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 08.20 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை விரைவு ரயில் (22662) இன்று இரவு 11.15 மணிக்கு 175 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

மருத்துவ பட்டதாரிகளின் சான்றிதழ்களை திரும்ப வழங்குக- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்பை முடித்த இரண்டு ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு, அவர்களின் உண்மை சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புகளில் சேருபவர்கள் இரு ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், ஒப்பந்தம் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். இதன்படி ஒப்பந்தக் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படாததால், மாணவர் சேர்க்கையின்போது சமர்ப்பித்த உண்மைச் … Read more

சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி!!

காந்திய ஜெயந்தி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த விசிகவின் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி வரும் 11ஆம் தேதி நடத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதாலும், அக்டோபர் … Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பில் பருப்பு, பாமாயில் இல்லாதது கூட தெரியாதா? – அண்ணாமலைக்கு அமைச்சர் பதில்

சென்னை: “பொங்கல் பரிசுத் தொகுப்பில் பருப்பு, பாமாயில் இல்லை என்பது கூடத் தெரியாமல் அறிக்கை விடுவகின்றனர்” என்று அமைச்சர் சக்கரபாணி பதில் கூறியுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்குப் பாமாயில், பருப்பு விநியோகிக்க அனுமதி என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கணிதம் படித்தும் கணக்குத் தெரியாத ஒருவரும் சின்னம் … Read more

நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு 95 வயதாகிறது. அரசியல் வாழ்க்கையில் அனைவராலும் விரும்பக்கூடிய தலைவர்களில் நல்லகண்ணுவும் ஒருவர். தமிழகத்தில் கடந்த 75வது சுதந்திர தின விழாவின்போது நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதல்வர் வழங்கி கவுரவித்தார். மேலும், அவருக்கு 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் கொடுக்கப்பட்டது. உடனே முதல்வர் அளித்த 10 லட்ச ரூபாய்க்கான காசோலை உடன் தனது பங்கிற்கு 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 5 … Read more

சென்னை நெடுஞ்சாலையில் பறந்த ரூபாய் நோட்டுக்கள்; பரபரப்பாக அள்ளிய மக்கள் – கடைசியில் செம ட்வீஸ்ட்

வேலூர் கொணவட்டம் பகுதியில் உள்ள சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று காலை காரில் வந்த கும்பல் ஒன்று கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்றுள்ளது. காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவற்றை போட்டி போட்டு எடுத்துள்ளனர்.  இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து, பொதுமக்கள் எடுத்து வைத்திருந்த ரூபாய் … Read more

ஊரப்பாக்கம் அருகே குப்பைமேடு பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் மான்; வீடியோ வைரலால் பரபரப்பு

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி காப்புக்காட்டில் ஏராளமான மான்கள் உள்ளன. இந்த மான்கள், சில நேரங்களில் இரை தேடியும் மற்றும் தண்ணீர் குடிப்பதற்காகவும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன. ஊரப்பாக்கம் அருகே யமுனை நகர் மற்றும் பெரியார் நகரை இணைக்கும் பிரதான சாலையோரத்தில் உள்ள குப்பைமேட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு மான் உண்ணும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “காரணைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால், பெருமாட்டுநல்லூர், கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், ஊனமாஞ்சேரி ஆகிய பகுதிகளில் … Read more

ஓசூர்: அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – இருவர் பலி

ஓசூரில் அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓமலூர் அருகேயுள்ள கிழக்கத்திகாடு கிராமத்தைச் சேர்ந்த அமிர்தராஜ் என்பவரது மகன் பிரவீன் குமார் (24) கடலூர் மாவட்டம் வேம்பூர் தாலுகா மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரது மகன் சுதாகரன் (24) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள நாமத்தோடு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் ராஜபாண்டி (23) ஆகிய மூவரும் ஓசூர் பகுதியில் அறை … Read more

“2023 இறுதிக்குள் அனைத்து கிராமங்களிலும் 5ஜி சேவை”!!

அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் 5ஜி சேவை கொண்டு சென்று சேர்க்கப்படும் என்று ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 6ஆவது மொபைல் காங்கிரஸ் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அப்போது நாட்டில் 5ஜி சேவையை முதற்கட்டமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 5ஜி சேவையானது டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் அறிமுகமாகிறது. நிகழ்வில் உரையாற்றிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்களான செயற்கை … Read more