இதை செய்தால் தான் ரேஷன் பொருள்; தமிழக அரசு அதிரடி!

தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழ்நாட்டில் 2.15 கோடி குடும்ப அட்டைதார்களுக்கு பொது விநியோகம் திட்டத்தின் கீழ் இலவசமாகவும், குறைந்த விலையிலும் அரசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. பொது விநியோகம் கணினி மயமாக்கப்பட்டு பின்னர் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு, விற்பனை முனைய இயந்திரத்தின் வாயிலாக கைரேகை பதிவு சரிபார்க்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனாலும் தொடர்ச்சியாக பயோமெட்ரிக் … Read more

பள்ளிகொண்டாவில் பிடிபட்ட ஹவாலா பணம் ரூ.14.70 கோடி கருவூலத்தில் இன்று ஒப்படைப்பு; கைதான 4 பேர் சிறையிலடைப்பு ; என்ஐஏ விசாரணை

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடி கூட்ரோடு அருகில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒரு காரில் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் பண்டல்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து பண்டல்களை சோதனையிட்ட போது அதில் கட்டுக்கட்டாக ₹2 ஆயிரம், ₹500, ₹100 பணக்கட்டுகள் 30 பண்டல்களாக கட்டப்பட்டிருந்ததும், இவற்றை … Read more

சாலையில் திடீரென தீப்பிடித்த கார் – முன்கூட்டியே சுதாரித்ததால் உயிர்பலி தவிர்ப்பு

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. சென்னை தாம்பரம் மதுரவாயல் புறவழிச்சாலை, திருநீர்மலை அருகே சாலையில் வந்து கொண்டிருந்த சொகுசு காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வர துவங்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக சுதாரித்துக் கொண்ட கார் ஓட்டுநர் சதீஷ் காரை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு அவரும் காரில் பயணித்த பிரதீப் என்பவரும் காரில் இருந்து கீழே இறங்கியுள்ளனர். 2 இந்நிலையில், சிறிது நேரத்தில் புகை தீயாக மாறி எரியத் … Read more

குழந்தைக்கு டிக்கெட் கேட்ட கண்டக்டர்.. ஆம்னி பஸ்சை சிறைபிடித்த உறவினர்கள்..!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடைச்சி விளையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர், தனது மனைவி சுகன்யா(33) மற்றும் குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். இந்நிலையில், தசரா திருவிழாவிற்கு தனது குடும்பத்தினர் ஊருக்கு செல்வதற்காக கோவையில் இருந்து திசையன்விளை செல்லும் ஆம்னி பஸ்சில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். நேற்று, தனது மனைவி, 3 வயது மற்றும் 4 வயது குழந்தைகள் மற்றும் உறவுக்கார பெண் ஆகியோரை அந்த பஸ்சில் முத்துகிருஷ்ணன் அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் வந்த … Read more

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: சீமான் எழுப்பும் கேள்விகள்

சென்னை: ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணியை நவம்பர் 6 அன்று நடத்திக் கொள்ள அனுமதியளிக்க வகை செய்யும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணியை நவம்பர் 6 அன்று நடத்திக் கொள்வதற்கு அனுமதியளித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவு பெரும் ஏமாற்றமளிக்கிறது. ஆர்எஸ்எஸ்ஸின் பேரணி நடத்தப்பட்டால், சட்டம் – ஒழுங்கும், சமூக அமைதியும் குலைக்கப்படுமெனக் … Read more

ஓசி வேண்டாம்… பூதாகரமாகும் விவகாரம்… கேள்வி கேட்க தொடங்கும் பெண்கள்…

சமீபத்தில் அமைச்சர் பொன்முடி பெண்கள் இலவச பயணம் குறித்து சர்ச்சையாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து கோவை மதுக்கரை பகுதியில் அரசு பேருந்தில் அப்பகுதியைச் சேர்ந்த துளசி அம்மாள் பயணம் செய்தார். அப்போது அந்த மூதாட்டி, நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என்று கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து பின்னர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணம் செய்தார். அந்த வீடியோவும் வைரலான நிலையில் மூதாட்டியை அப்படி செய்ய தூண்டிவிட்டதாக அதிமுகவைச் சேர்ந்த 4 பேர் மீது … Read more

குடோனில் பதுக்கிய ரூ.50 லட்சம் பட்டாசுகள்; போலீசார் பறிமுதல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தெற்கு அக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம், கீழ அக்ரஹாரம், சுப்பநாயக்கன் தெரு, ஒன்வே சாலை, கடைத்தெரு, மாரியம்மன் கோவில் பகுதி, கீழத்தெரு, வளையமாபுரம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட வாணவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை, வாணவெடிகள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள குடோன்களில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அரசு அனுமதித்த அளவைவிட கூடுதலாக வைத்திருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் வியாபாரிகள் … Read more

சென்னை நகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை – சென்னை காவல் ஆணையர்

சென்னை நகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இன்று முதல் 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் அணுகியுள்ள நிலையில், சென்னையிலும் போராட்டம் நடத்துவதற்கு பல அமைப்புகள் அனுமதி கேட்டு உள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் சென்னை காவல்துறை ஆணையர் அறிவிப்பினை வெளியிடுவார். அதன்படி சென்னை மாநகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு செப்டம்பர் 30-ம் தேதி … Read more

98 டிஇஓ-க்கள் பணியிட மாற்றம்.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி..!

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள், மூன்று இணை இயக்குநர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளிக் கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் என 152 டி.இ.ஓ பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அவைகளில் பணியாற்றும் வகையில் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் … Read more

“தோனியை போல் என்னை வைத்து ஃபினிஷிங்…” –  ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தோனியை எனக்கு பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு என்னை பினிஷிங் இன்னிங்ஸ் ஆட சொல்லி இருக்கிறார்கள் என ட்விட்டர் ஸ்பேஸில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். செப்டம்பர் மாதத்தை திராவிட மாதம் என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணி கொண்டாடி வந்தது. இதற்காக கடந்த மாதம் தினந்தோறும் ட்விட்டர் ஸ்பேஸில் பல்வேறு திமுக தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றனர். அந்த வகையில் கடைசி நாளான நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். ட்விட்டர் ஸ்பேஸில் முதல்வர் ஸ்டாலின் … Read more