ஜிபிஎஸ் முறையில் சுங்கக் கட்டணம்.. எப்போது அமலாகிறது தெரியுமா..?

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பணமில்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க ‘பாஸ்டேக்’ திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக, தேசிய மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் பணப் பரிமாற்ற வங்கிகள் மூலம் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. வாகனங்கள் செல்லும்போது சுங்கச்சாவடிகளில் உள்ள மின்னணு கருவி மூலம் வங்கிக் கணக்கில் … Read more

மழைநீர் வடிகால் பணி | அயனாவரம் – போர்ச்சுகீஸ் சாலை சந்திப்பில் இன்று இரவு போக்குவரத்து மாற்றம்

சென்னை: மழை நீர் வடிகால் பணி காரணமாக அயனாவரம் – போர்ச்சுகீஸ் சாலை சந்திப்பில் இன்று இரவு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக அயனாவரம். கொன்னூர் நெடுஞ்சாலையில் போர்ச்சுகீஸ் சாலை சந்திப்பில் இன்று (அக்.1 ஆம் தேதி ) இரவு 11 மணி முதல் நாளை (2 ஆம் தேதி ) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. இதன்படி … Read more

சமூக நல்லிணக்க மனித சங்கிலி: அனுமதி கேட்கும் திருமாவளவன்

சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் வகையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்த அனுமதி கேட்டு கடந்த 29ஆம் தேதி … Read more

தீபாவளியை ஒட்டி ரூ.250 கோடி வரை ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு: அமைச்சர் நாசர் பேட்டி

ஈரோடு: தீபாவளியை ஒட்டி ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி வரை ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் ஆவின் கால்நடை தீவன ஆலையை ஆய்வு செய்த பின் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அப்போது, பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஆவின் தீபாவளி விற்பனை ரூ.53 கோடியாக இருந்தது என்றார். பால்வளத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும். ஆவின் பாலகத்தில் ஆவின் பொருட்களை … Read more

சென்னை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகத்திற்கு சீல்

சென்னையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகத்திற்கு, வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டுவதாகவும், பயிற்சி முகாம்கள் நடத்தி தீவிரவாத இயக்கங்களுக்கு ஆள் சேர்ப்பதாகவும் குற்றஞ்சாட்டி அந்த அமைப்புக்குச் சொந்தமான தமிழகம், கேரளா ஆகிய மாநிங்களில் உள்ள அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் ஆகிய இடங்களில் கடந்த மாதம் 22 ஆம் தேதி தேசிய … Read more

ஓசி டிக்கெட் வேண்டாம்.. வைரல் பாட்டி மீது வழக்குப்பதிவு..!

ஓசி டிக்கெட் வேண்டாம் எனக்கூறி அரசுப் பேருந்து நடத்துநரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட மூதாட்டி மீது, அரசு குறித்து அவதூறு பரப்பியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒரு கூட்டத்தில் மக்களை பார்த்து, “உங்க ரேஷன் கார்டுக்கு 4 ஆயிரம் ரூபாய். கொடுத்தாரா, இல்லையா..?; வாங்குனீங்களா, வாயை திறங்க.. 4 ஆயிரம் ரூபாய் வாங்குனீங்களா..?. இப்ப பஸ்ல எப்படி போறீங்க..?. இங்கிருந்து கோயம்பேடு போனாலும், வேற எங்க போனாலும் ஓசி, ஓசி. ஓசி … Read more

அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக் குறைவு 

கடலூர்: உயர் ரத்த அழுத்தம் காரணமாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் அதிகாலையில் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக இருப்பவர் மெய்யநாதன் (52). நேற்றிரவு (செப்.30) இவர் புதுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு சென்னைக்கு சென்றார். ரயில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு வந்த போது அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீரென அதிக அளவில் வியர்த்து, உடல் சோர்வும் … Read more

ஓசி- யை விரும்பாத பாட்டி மீது வழக்கு..? இதற்கு யார் பொறுப்பு..?

கோவையில் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சலுகை இருந்தும்கூட ” நான் ஓசியில போக மாட்டேன்” என்று ஒரு பாட்டி கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து பின்னர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணித்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. சில நாட்களுக்கு முன்பு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் பயணிக்கும் இலவச பேருந்து திட்டத்தை இலவசம் என்று சொல்லாமல் ”ஓசி” என குறிப்பிட்டார். அதற்கு எதிர்வினையாற்றவே அந்த மூதாட்டி அவ்வாறு செய்தததாகவும் சொல்லப்பட்டது. … Read more

ஓசி பயணம் வேண்டாம் என பேசிய மூதாட்டி மீது வழக்கு பதிவு!

கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை சென்ற அரசு பேருந்தில் மூதாட்டி ஒருவர் பயணம் செய்த போது ஓசி பயணம் வேண்டாம் என கூறி நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இந்த வீடியோ காட்சிகளை அதிமுக உறுப்பினராக பிரத்திராஜ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில், திமுகவினர் மதுக்கரை போலீசில் புகார் அளித்தனர்.  விசாரணையில் அதிமுகவை சேர்ந்த பிரத்திவ்ராஜ் (40), மதிவாணன் (33), விஜயானந்த், மற்றும் மூதாட்டி துளசியம்மாள் ( 68) ஆகிய … Read more

நீட் தேர்வு குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு புரிதல் இல்லை: பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

ராணிப்பேட்டை: நீட் தேர்வு குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு புரிதல் இல்லை என பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது எனவும் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஆன்லைன் விளையாட்டிற்கு தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளது எனவும் அதற்க்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் ஆன்லைன் விளையாட்டால் இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது, அதற்க்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.