சீனாவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 17 பேர் பலி..!!

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் நகரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம், இந்த உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டரை மணி … Read more

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு: இடைக்கால தடையை நீக்க கோரி தமிழக அரசு மனு

சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. தற்போதைய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக … Read more

ஆண்டுதோறும் அரசுக்கு 59.82 லட்சம் ரூபாய் இழப்பு… நீதிபதியின் கடிதத்தில் பகீர் தகவல்!

உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பி உள்ள அந்த கடிதத்தில், ‘இந்திய ஊழல் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் செல்வராஜ் என்பவர் தமக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தில் பல ஆண்டுகளாக தொழில் வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை என தெரிவித்துள்ளார். தொழில் வழி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில் எந்த இடைக்கால தடையும் விதிக்கப்படாத நிலையில் சம்பள கணக்கு … Read more

பண்ணைபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொது சுகாதார கழிவு நீர் தொட்டியில் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு

தேனி: பண்ணைபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொது சுகாதார கழிவு நீர் தொட்டியில் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளார். கழிவு நீர் தொட்டியின் மேல் ஏறி விளையாடியபோது சுபஸ்ரீ (8), நிகிதா (7) ஆகியோர் உள்ளே விழுந்தனர். சிறுமிகள் உடலை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நாமக்கல்: ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி-ஓடிச்சென்று காப்பாற்றிய சிறுவர்கள்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மூதாட்டியை காப்பாற்றி பாதுகாப்புடன் மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்-ஈரோடு செல்லும் காவிரி ஆற்றின் பாலத்தின் மீது நின்று தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் மற்றொரு முயற்சி நடைபெற்றுள்ளது. பள்ளிபாளையம் பேருந்து நிலைய பகுதியில் யாசகம் எடுத்து வந்த ஓமலூர் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த மூதாட்டி ராஜம்மாள், உடலில் உள்ள நோய் … Read more

போலி பத்திரங்களை ரத்து செய்ய புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி பேட்டி

போலி பத்திரங்களை ரத்து செய்ய புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி பேட்டி Source link

ஓய்வூதியர்களே, நாளைக்குள் இதை செய்திடுங்க.. இல்லன்னா பென்ஷன் கிடைக்காது..!

தமிழக ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-ம் தேதிக்குள் ஆயுள் சான்றிதழ் என்ற ஜீவன் பிரமான் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். கொரோனா பரவல் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு இந்த சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க நாளை … Read more

சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்வு

சென்னை: பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு வரும் அக்.1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலையை உயர்த்தி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ.10-ல் … Read more

இக்கட்டான காலத்தில் தலைமை வழக்கறிஞர் பொறுப்பு… வெங்கடரமணி குறி்த்து ரவிக்குமார் எம்பி நெகிழ்ச்சி!

மத்திய அரசின் புதிய தலைமை வழக்றிஞராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வெங்கடரமணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி: புதுச்சேரியைச் சேர்ந்தவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஆர்.வெங்கடரமணி (72) அவர்கள், இந்திய ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மனித உரிமைகள் மீது அக்கறை கொண்ட அவருக்கு என் வாழ்த்துகள் ! அரசியலமைப்புச் சட்டம் குறித்தும், மனித உரிமைகள் குறித்தும் ஈடுபாடும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர். அரசியலமைப்புச் சட்டத்தை சீராய்வு செய்வதற்கென நியமிக்கப்பட்ட நீதிபதி … Read more

திருப்பதிசாரம் டோல்கேட் அடுத்த மாதம் திறப்பு: மின்னிணைப்பும் வழங்கப்பட்டது

நாகர்கோவில்: மின்னிணைப்பும் வழங்கப்பட்ட நிலையில் நான்கு வழிச்சாலையில் திருப்பதிசாரத்தில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் அடுத்த மாதம் திறந்து செயல்பாட்டிற்கு வர உள்ளது. நாகர்கோவில் – காவல்கிணறு நான்கு வழிசாலையில் திருப்பதிசாரம் அருகே டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதிசாரம் டோல்கேட் செப்டம்பர் 24ம் தேதி முதல் செயல்பட தொடங்கும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அமலாக்க பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக கட்டண விபரங்களும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் வழியாக கார், ஜீப், வேன், இலகுரக வாகனம், … Read more