“தற்போது வரை சென்னையில் 95% மழை நீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளது”- மேயர் பிரியா தகவல்

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகள் வரும் 10 தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், 95 சதவீத பணிகள் தற்போது வரை முடிந்துள்ளது என்றும் சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்திருக்கிறார். முன்னாள் மேயர் சிவராஜின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மிண்டு தங்கசாலையில் உள்ள அவரது சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் ப்ரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் … Read more

குணமடைந்து வீடு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார். கடந்த 25-ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா இல்லை என தெரியவந்தது. பின்னர், … Read more

புதுச்சேரியில் நடிகர் தனுஷ் பேனருக்கு பீர், பால் அபிஷேகம்: கோபமடைந்த பொதுமக்கள்

புதுச்சேரி: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் தியேட்டர் முன்பு தனுஷ் பேனருக்கு பீர், பால் அபிஷேகம் செய்தும், கையில் சூடம் ஏற்றியதை பார்த்தும் பொதுமக்கள் முகம் சுளித்தனர். நடிகர்கள் இவ்விஷயத்தில் மவுனம் கலைப்பார்களா என்ற கேள்விகளோடு கடந்து சென்றனர். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. நகரின் முக்கிய சாலையில், கடலில் உடைந்த பாலத்திலுள்ள கம்பியில் … Read more

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு ஆகிய இடங்களில் ரூ.174.48 கோடி மதிப்பீட்டிலான வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.9.2022) நீர்வளத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகளின் சார்பில் செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு ஆகிய இடங்களில் 174.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு வடகிழக்கு … Read more

ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி உற்பத்தி தீவிரம்: நடப்பாண்டில் மூட்டைக்கு ரூ.100 அதிகரிப்பு

சேலம்: ஆயுதபூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொரி உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்தாண்டைவிட நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.100 அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை நாளான்று வீடுகள், தொழிற்சாலைகள், மெக்கானிக் கடைகள், பட்டறைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆயுதங்களை சுத்தம் செய்து, அவற்றுக்கு திருநீரால் பட்டையிட்டு, சந்தனம், குங்குமம் இட்டு பொரி, தேங்காய், பழம், எலுமிச்சை பழம் மற்றும் பலவகையான பழங்களை வைத்து சரஸ்வதிக்கு பூஜை செய்வது வழக்கம். அந்த … Read more

கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் வேண்டும்: காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

குடவாசல் எம்ஜிஆர் கலை அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் வேண்டுமென பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி குடவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு என தனியாக கட்டடமும் இடமும் கிடையாது. இந்த நிலையில் தங்கள் கல்லூரிக்கு தனியாக இடமும் நிரந்தர கட்டடமும் அமைத்துத் தர … Read more

பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த மர்ம கடிதம்.. 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்!!

தமிழ்நாடு மற்றும் கேரளா உட்பட நாடு முழுவதும் உள்ள 10 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் அதன் இணைப்புகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு உள்பட நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய மத அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான … Read more

ஒரகடம் அருகே தேவரியம்பாக்கத்தில் சிலிண்டர் கிடங்கில் தீ விபத்து: 4 பேர் கவலைக்கிடம்; பலர் காயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள தேவரியம்பாக்கம் பகுதியில் சிலிண்டர் சேமிப்பு குடோனில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் உடல் நிலை மோசமாக உள்ளது. ஒரகடம் அடுத்துள்ள தேவரியம் பாக்கம் பகுதியில் உள்ள சிலிண்டர் சேமிப்பு குடோனில் இருந்து நேற்று இரவு சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதன் காரணமாக குடோன் அருகே இருந்த குடியிருப்புகளுக்கும் தீ பரவியது. இந்த சம்பவத்தின்போது குடோனுக்குள் இருந்த … Read more

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த விவகாரம்: காவல்துறை தரப்பில் சீராய்வு மனு தாக்கல்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதியளிக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்த செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த 22 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். மேலும் நீதிபதி தனது உத்தரவில் பல்வேறு நிபந்தனை விதித்தார் … Read more

தூய்மை பணியாளர்களுக்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை: நீதிபதிகள்

மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும்  என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.  2013 ஆம் ஆண்டு சட்டத்தின் படி மனிதர்களைக் கொண்டு மலம் அளுதல், பாதாள சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளாமல் ரோபோட் மற்றும் நவீன இயந்திரங்களைக் கொண்டு செய்ய கோரிய வழக்கு விசாரணையில், நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.  வழக்கு குறித்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலர் முழுமையான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற … Read more