நித்யானந்தா ஆசிரமம் என நினைத்து பாஸ்கரானந்தா ஆசிரமம் இடிப்பு? அதிர்ச்சியில் பக்தர்கள்!

நித்யானந்தா என நினைத்து தன் ஆசிரமத்தை சேதப்படுத்தியதாக பல்லடம் காவல்நிலையத்தில் பாஸ்கரானந்தா புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் நித்யானந்தா போன்ற தோற்றத்தில் இருக்கும் பாஸ்கரானந்தா தமது பக்தர்களுடன் திரண்டு வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், “கோவை செல்வபுரத்தைப் சேர்ந்த பாஸ்கரானந்தா ஆகிய நான் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மீக பணி மேற்கொண்டு வருகிறேன். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு … Read more

சென்னையில் மழை வெள்ளம் ஏற்படாது.. அடித்து சொல்கிறார் அமைச்சர் எ.வ.வேலு..!

இந்த முறை சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. மக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் சட்டமன்றth தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிகளை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: “சென்னை மாநகராட்சி, நீர் மேலாண்மை … Read more

தமிழக அரசு மீது ஏழைகள் கோபம் கொண்டுள்ளனர்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டதால் தமிழக அரசு மீது ஏழை எளிய மக்கள் மிகுந்த கோபம் கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகத்தான திட்டம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ஏழையெளிய பெண்களுக்கு திருமணம் நடைபெறும்போது, அவர்களுக்கு தாலிக்கு தங்கம் என்பதே ஒரு கேள்விக்குறியாக இருந்துவந்தது. அதேநேரத்தில் … Read more

மைல்கல்லுக்கு ஆயுத பூஜை… குசும்புகார கோவை மக்களின் பாசக்காரத்தனம்…

கோவையில் தொலைவைக் காட்டும் மைல்கல்லுக்கு பொட்டு வைத்து பூஜை செய்து படையலிட்டு ஆயுதபூஜை கொண்டாடியுள்ளனர் கோவை மக்கள். குசும்புக்கு பஞ்சமில்லாத ஊர் கோயம்புத்தூர் என்று சொல்வார்கள். இந்த நிலையில், திருநெல்வேலி எனும் படத்தில் வரும் விவேக் காமெடியில் மைல்கல்லை குலதெய்வமாக வழிபாடு செய்தது போல் கோவையில் மைல்கல்லுக்கு பூஜை செய்யப்பட்டு படையல் படைத்து வழிபட்டுள்ளனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் பழைய மைல்கல் சேதம் அடைந்ததால் அதை அகற்றிவிட்டு புதிய மைல்கல் வைக்கப்பட்டு இருந்தது. சிறுவாணிக்கு … Read more

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: குடும்பம் குடும்பமாக பூங்காவில் குவிந்து கொண்டாட்டம்!!

தொடர் விடுமுறையின் காரணமாக ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். குடும்பம் குடும்பமாக ஏற்காடு வந்துள்ள மக்கள், அங்கு இயற்கையான சூழலுக்கு மத்தியில், சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் இனிமையாக பொழுதை கழித்து வருகிறார்கள். சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.   இந்த நிலையில் தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு முடிவடைந்து பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஆயுத பூஜை விஜயதசமி … Read more

பொன்னமராவதியில் மூடிக்கிடக்கும் பால் உற்பத்தியாளர் சங்கம் செயல்பாட்டுக்கு வருமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பொன்னமராவதி: பொன்னமராவதியில் மூடப்பட்டுள்ள பால்உற்பத்தியாளர் சங்கத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே எம்எம் 255 பால் உற்பத்தியாளர் சங்கம் செயல்பட்டு வந்தது. இந்த சங்கம் மூலமாக பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து பால் வாங்கி இந்த சங்கத்தின் மூலம் விற்பனை செய்வது, கறவை மாடுகள் வளர்ப்போருக்கு கடனுதவி வழங்குவது, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது, மாட்டுத்தீவனம் வழங்குவது, மாட்டுத்தீவனபுல் வழங்குவது, கறவை மாடுகள் வளர்ப்பபோருக்கு பயிற்சி அளிப்பது … Read more

தாய்லாந்தில் சிக்கிய அறந்தாங்கி இளைஞர்.. மகனுக்காக போராடும் தந்தைக்கு இப்படியொரு துயரமா?!

90 ஆயிரம் சம்பளத்தில், டேட்டா என்ட்ரி வேலை வாங்கி தருவதாக கூறிய ஏஜண்ட் மூலம் தாய்லாந்து சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர், அங்கு மோசடிக்கு உள்ளாக்கப்பட்டு தற்போது தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செய்யானம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். எம்.பி.ஏ பட்டதாரியான இவர் இவரது மகனின் உடல்நல குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்த நிலையில் ஏற்கனவே சிவகாசியில் 30 ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்த்து வந்த தொகை போதாது என்று … Read more

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!!

2022ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் பங்களிக்கும் சாதனையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2022ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை 3 பேர் பெறுகின்றனர். அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய 3 … Read more

ஒரே நாளில் ஒரே மாவட்டத்தில் 10 மருத்துவமனைகளில் அமைச்சர்கள் ஆய்வு 

சென்னை: வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 10 அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில் உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையம், மேல்பாடி ஆரம்ப சுகாதார நிலையம், திருவலம் ஆரம்ப சுகாதார நிலையம், காட்பாடியில் 60 படுக்கைகள் கொண்ட தாலுக்கா அளவிலான அரசு மருத்துவமனை கட்டும் பணி, பள்ளிகுப்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சேனூர் ஆரம்ப சுகாதார நிலையம், கழிஞ்சூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார … Read more

இலங்கை போர்க்குற்ற விசாரணை: இந்தியா ஆதரவளிக்க அன்புமணி வலியுறுத்தல்!

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று பாமக தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் கொண்டு வந்துள்ளன. ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் … Read more