கோவை: பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! பாஜகவினர் சாலை மறியல்!

கோவை மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தொண்டர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகரத்தில் இருக்கும் பாஜக கட்சி அலுவலகத்தின் மீது மர்மமான முறையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனையிடையே குற்றவாளிகளை கண்டறிய கூறி பாஜக கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒப்பணக்கார வீதி பகுதியிலும் … Read more

ஜிப்மரில் மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஜிப்மரில் மருந்துத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: ”புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்ளும்படி நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும் ஜிப்மர் தான் உயிர்காக்கும் மருத்துவமனையாக … Read more

கோவை பாஜக அலுவலகத்தில் குண்டுவீ்ச்சு..! தொடரும் பதற்றம்..!

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்படுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகரில் ஒப்பணக்கார வீதியில் உள்ள பாரத ஜனதா கட்சியின் அலுவலகத்தில் சற்று முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சால் , இதற்கு காரணமான மர்ம நபர்களை போலீசார் … Read more

கூடுதல் கட்டணம் வசூலை தடுக்க டாஸ்மாக் கடைகளில் யூபிஐ வசதி ஏற்படுத்தப்படுமா?… மதுபிரியர்கள் கோரிக்கை

நாகர்கோவில்: டாஸ்மாக் கடைகளில்  கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்த மது பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் அரசே நேரடியாக மது விற்பனை செய்து வருகிறது. தொடக்க காலத்தில் ஒரு சில மது பாட்டில்களின் விலை போக மீதி ரூ. 2 அல்லது ரூ.3 சில்லறையாக வழங்க வேண்டும் என்பதால், சில்லறை இன்றி ரவுண்டாக ரூ.5 அல்லது ரூ.10 என கணக்கிட்டு மீதி பணம் தந்தனர். பல … Read more

தமிழகத்தில் பணவீக்கத்தின் தாக்கம் எப்படி?- நிதிநிலைமை குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பேட்டி

பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது என்றும், அதிலும் தமிழகத்தில் பணவீக்கம் 5 சதவீதம் அளவில் உள்ளதே பெரும் வெற்றி என்றும் தெரிவித்துள்ளார் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உற்பத்தி குறைந்து, தேவை அதிகரித்தால் விலை அதிகரிக்கும். விலை உயர்ந்து, வாங்கும் சக்தி குறையும் போது பணவீக்கம் ஏற்படும். பணவீக்கம் என்பது … Read more

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கில், ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் … Read more

கூட்டணி கட்சிகளை வளைக்க திமுக திட்டம்.?.. பாஜக- அதிமுகவுக்கு செம செக்!

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இப்போதில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றன. எதிர்வரும் எம்பி எலக்ஷனில் பிரதமர் நரேந்திர மோடி மதுரையில்தான போட்டியிட வேண்டும் என்று அந்த மாவட்ட பாஜக சில மாதங்களுக்கு முன்பே தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மோடியும், அமித் ஷாவும் இந்த முறை மதுரையில் களமிறங்க உள்ளனர் என்று தன் பங்குக்கு அண்மையில் கொளுத்திப் போட்டார் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத். இந்த முறையும் 40/40 என்று வெற்றிக் கனியை … Read more

மாணவர்களை திட்டிய வணிகர் சங்க தலைவர் மீது வன்கொடுமை வழக்கு பெரியமணலியில் கடைகள் அடைப்பு விசைத்தறிகளை நிறுத்தி போராட்டம்: போலீசார் குவிப்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே பெரியமணலியில் பிளஸ் 2 மாணவர்களை சாதி பெயரை சொல்லி திட்டியதாக வணிகர் சங்க தலைவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை கண்டித்து இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான விசைத்தறிகள் நிறுத்தப்பட்டு போராட்டம் நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உள்ளது பெரியமணலி. இப்பகுதியில் ஹாலோபிரிக்ஸ் தொழிற்சாலை நடத்தி வருபவர் தங்கமணி (56). பெரியமணலி வணிகர் சங்க தலைவராகவும் உள்ளார். இவர் … Read more

வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி : சங்கு வளையல்கள், செப்பு காசு, சுடுமண் முத்திரை கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சுடும் மண்ணால் ஆன முத்திரை, சங்கு வளையல்கள், செப்பு காசு கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் உள்ள வைப்பாற்று கரையில் விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், … Read more

தமிழகத்தில் ரூ.8,082 கோடி வருவாய் | போலிப் பதிவுகளை ரத்து செய்ய பதிவுத் துறைக்கு அதிகாரம்

சென்னை: பதிவுத் துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். தமிழகத்தில் பதிவுத் துறை வருவாய் தொடர்பாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதிவுத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக ஆவணங்கள் பதிவு அதிகரித்து, அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பதிவு செய்ய வருவோரை ஆதார் எண் மூலம் சரிபார்த்தல், டோக்கன் முறை, சரியான நிலமதிப்பு நிர்ணயம், … Read more