'அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம்' – பாஜக மாவட்ட தலைவர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: ” மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ஆ.ராசாவை கைது செய்யாமல், அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை, இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. வெறுப்பை உமிழும் ஆ.ராசாவை கண்டித்ததற்காகக் … Read more

அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஐந்து தினங்களுக்கான மழை பற்றிய முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 21.09.2022 முதல் 23.09.2022 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 24.09.2022 மற்றும் 25.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் … Read more

திமுகவில் ஜனநாயகம் இல்லை, அதனால்தான் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி உள்ளார்: ஆர்.பி.உதயகுமார்

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் பொது கூட்டம் தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது, சேலத்தை உலக அளவில் பேச வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் செய்யவேண்டிய திட்டங்களை எதிர்கட்சி தலைவராக இருந்து எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். டெல்லி சென்றவர் நடந்தாய்வாலி காவேரி, காவிரி-கோதாவரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் … Read more

விகேபுரம் அருகே பராமரிப்பின்றி சேதமடைந்த பாபநாசம் பிரதான சாலை-வாகனஓட்டிகள் அவதி

வி.கே. புரம் : நெல்லையில் இருந்து பாபநாசத்திற்கு செல்லும் பிரதான சாலை விகேபுரம் பகுதியில் முறையான பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உருக்குலைந்து சேதமடைந்துள்ளது. இதனால் வாகனஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவதிப்படுகின்றனர். நெல்லையில் இருந்து பாபநாசம் செல்லும் பிரதான சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் பைக், மொபட், ஆட்டோ, வேன், லாரி, பஸ்கள் என பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் வந்துசெல்கின்றன. இருந்தபோதும் இந்த பிரதான சாலையின் பல்வேறு பகுதிகளில் முறையாக பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என புகார் … Read more

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்

அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்கு செல்வோருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி தலைநகர் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. அதிலும் தீபாவளியை ஒட்டியே சனி, ஞாயிற்றுக் கிழமையும் வருவதால் இம்முறை 21-ஆம் தேதியே பலரும் சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிடுவார்கள். இதையடுத்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், தீபாவளி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் தொடங்குகிறது. www.tnstc.com என்ற இணையதத்தின் மூலம் டிக்கெட் … Read more

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! போக்சோவில் கூலி தொழிலாளி கைது.!

கரூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலி தொழிலாளியை போச்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே குப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் கூலி தொழிலாளி வசந்தகுமார் (21). இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து … Read more

பிரபல நகைச்சுவை நடிகர் உணவகத்தில் திடீர் ரெய்டு..!

பிரபல நகைச்சுவை நடிகரான சூரி, மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் சொந்தமாக உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகங்கள் மதுரையில் உள்ள தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. இந்நிலையில், மதுரையில் உள்ள நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் இந்த சோதனை நடந்துள்ளது. மேலும், உணவகத்துக்கு மொத்தமாக … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு: நாளை உயர் நீதிமன்றம் விசாரணை

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, சென்னை உயர் நீதிமன்ற எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த … Read more

ஆம்னி பேருந்துகள் கட்டணம் நிர்ணயம்: பொதுமக்கள் ஹேப்பி!

நடப்பாண்டுக்கான தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும், அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர் செல்வதால், அந்த பேருந்துகள் போதுமானதாக இருப்பதில்லை. இதனால், பெரும்பாலான மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு … Read more

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல பிளானா? டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

அடுத்த மாதம் 24 ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதர்கா ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்படுகிறது.  சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும், சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வர … Read more