அமித்ஷாவிடம் உள்கட்சி பிரச்னையை பேசவில்லை: டெல்லி சென்று திரும்பிய இ.பி.எஸ் பேட்டி

நான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவாகரம் குறித்து பேசியதாக கூறுவது  தவறானது என்றும் திமுகவில் முக்கிய தலைவர் ஒவ்வொருவராக  விலகுவது தான் திராவிட மாடல் ஆட்சி என்று அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். டெல்லி சென்று திரும்பி அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி  இன்று உள்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து அவரிடத்தில் முக்கியமான சில விஷயங்களை பேசினோம். அதில் கோதாவரி – காவரி இணைப்பு திட்டம் … Read more

ஜி.பி முத்துவுடன் அதிவேக, அஜாக்கிரதை பயணம் – டி.டி.எப் வாசன் மீது பாய்ந்தது வழக்கு

கோவையில் யூடியூப் நடத்தி வரும் டி டி எஃப் வாசன் மீது மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் விதமாக வாகனத்தை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி டிடிஎஃப் வாசன் அவரது இருசக்கர வாகனத்தில் youtube ஜிபி முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து பாலக்காடு மெயின் ரோடு எம்டிஎஸ் பேக்கரி அருகே அதி வேகமாக ஓட்டியுள்ளார். மேலும் இதனை பதிவு செய்து அவரது Twin Throttlers youtube சேனலில் வீடியோவாகவும் வெளியிட்டார். … Read more

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதே அரசின் நோக்கம் – நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து

குன்னூர்: விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அதிகபட்ச விலையும், நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களும் கிடைப்பதே தமிழக அரசின் நோக்கம் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் 129-வது மாநாடு, நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் நேற்று நடைபெற்றது. உபாசி தலைவர் எம்.பி.செரியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது: பெரும் விவசாயிகள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் இடையே … Read more

மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் வணிகவரித்துறையினர் சோதனை

மதுரை: நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் வணிகவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.சோதனையில்  ஜிஎஸ்டி செலுத்தாதது உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூல் என புகார்கள்எழுந்துள்ளது. 3 நாட்களுக்குள் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது என்று மதுரை மண்டல வணிக வரித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

`ஆ.ராசா பேசிய வார்த்தை அவரது கட்சி தலைவரின் குடும்பத்துக்கு பொருந்துமா?’- இபிஎஸ் கேள்வி

`நான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவாகரம் குறித்து பேசியதாக கூறுவது, தவறானது’ என்று அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளர் தமிழகம் திரும்பிய எடப்பாடி பழனிசாமி கோவையில் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று திரும்பி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று உள்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து அவரிடத்தில் முக்கியமான சில விஷயங்களை பேசினோம். அதில் கோதாவரி – காவரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும், நடந்தாய்வாழி காவிரி திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று … Read more

Tamil news today live ; கோவையில் பாஜகவினர் சாலை மறியல்

Go to Live Updates பெட்ரோல்,டீசல் விலை சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆஸ்திரேலியா அணி வெற்றி இந்தியாவுக்கு எதிரான முதாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் இலக்கை  துரத்தி வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (21.09.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 21/09/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 21/18/14 நவீன் தக்காளி 33 நாட்டு தக்காளி 28/25 உருளை 34/26/24 சின்ன வெங்காயம் 50/35/30 ஊட்டி கேரட் 120/100/90 பெங்களூர் கேரட் 80/75 பீன்ஸ் 70/65 பீட்ரூட். ஊட்டி 48/45 கர்நாடக பீட்ரூட் 28 சவ் சவ் 22/20 முள்ளங்கி 45/40 முட்டை கோஸ் 20/15 வெண்டைக்காய் 20/15 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி … Read more

திமுக கவுன்சிலர் கொலை.. மிடில் ஏஜ் சொர்ணாக்கா ரவுடி தம்பிகளுடன் சரண்..! சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே கள்ளச்சந்தையில் மதுவிற்ற பெண் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த திமுக கவுன்சிலரை வீட்டுக்கு அழைத்து வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவான லோக்கல் தாதா லோகேஸ்வரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். கையில் வெட்டரிவாளுடன் மிடில் ஏஜ் சொர்னாக்கா போல தோரனையாக அமர்ந்திருக்கும் இவர் தான் ‘லோக்கல் தாதா’ லோகேஸ்வரி..! ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் பகுதியை சேர்ந்த 45 வயதான லோக்கல் தாதா லோகேஸ்வரிக்கு எஸ்தர் என்ற இன்னொரு பெயரும் … Read more

புதுவையில் தந்தை பெரியார் தி.க.வுடன் இந்து முன்னணி, பாஜகவினர் மோதல்

புதுச்சேரி: மனுதர்ம சாஸ்திரம் தொடர்பாக, புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் இந்து முன்னணி மற்றும் பாஜகவினரும் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பும் கற்கள் மற்றும் செருப்புகளை வீசி தாக்கிக் கொண்டதில் 2 பேர் காயமடைந்தனர். மனு தர்ம சாஸ்திரத்தில் இந்துக்கள் பற்றி தவறாக குறிப்பிட்டுள்ளதாக திமுக எம்.பி ஆ.ராசா அண்மையில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பாஜக மற்றும் இந்து முன்னணி தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே சிறிய அளவில் … Read more

சேலம்: குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. அதில், கோனேரிப்பட்டி கிழக்கு காலனி பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பலமுறை கையெழுத்திட்டு புகார் மனுக்களை பேரூராட்சி அலுவலகத்தில் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் நடைபெற்ற தூய சலேத் அன்னை ஆலயத்தின் தேர் விழாவுக்கு கூட தண்ணீர் இல்லை.  இதனால், விலைக்கு தண்ணீர் … Read more